மாதிரி வினாத்தாள் 2021-2022
ஆறாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 2.30 மணி மதிப்பெண் : 60
அ)பலவுள்தெரிக:
6X1=6
1.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும்
நூல்
அ) திருவாசகம் ஆ)
திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
2.கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
3.நூலாடை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை ஆ) நூலா+டை இ) நூல்+ லாடை ஈ) நூலா+ஆட
4.ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ)1919 ஆ)1918 இ)1920 ஈ)1921
5.காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய
ஊர்
அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்
6.பெயர்ச்சொல், வினைச்சொல்
ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது—---சொல்
அ)பெயர் ஆ)வினை இ)இடை ஈ)உரி
ஆ)பொருத்துக:
4X1=4
7.இலக்கிய மாநாடு - பாரதியார்
8.தமிழ்நாட்டின் சொத்து - சென்னை
9.குற்றாலம் -ஜி.யு.போப்
10. தமிழ்க் கையேடு - அருவி
இ)ஐந்து வினாக்களுக்கு மட்டும்ஓரிரு சொற்களில்
விடை தருக: 5X2=10
11.யாரால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?
12.அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
13.காந்தியடிகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை
ஏற்படுத்திய நிகழ்வு யாது?
14. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின்
பெயர்களைக் குறிப்பிடுக.
15.சொற்களின் வகைகளை எழுதுக
16.இன்ப நிலை எப்போது சேரும்?
17.ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
ஈ)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு
தொடர்களில் விடை தருக: 3X4=12
18.காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த
நிகழ்வினை எழுதுக.
19.பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
20.மணிபல்லவத் தீவு எவ்வாறு காட்சியளித்தது?
21.அறுவகை பெயர்ச்சொற்களை எழுதுக.
22.எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழ புத்தர்பிரான்
கூறும் அறிவுரைகள் யாவை?
உ.அடிமாறாமல் எழுதுக:
2+4=6
23.பகுத்துண்டு என தொடங்கும் குறளை அடி மாறாமல்
எழுதுக.
24. புல்வெளி எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக
ஊ.அனைத்து வினாக்களுக்கும் விடையளி
10X1=10
25.கலைச்சொல் தருக : HUMANITY,MERCY
26.அகரவரிசைப்படுத்துக.
ஒழுக்கம் உயிர் ஆடு எளிமை அன்பு இரக்கம் ஓசை ஐந்து ஈதல் ஊக்கம் ஏது
ஔவை.
27.பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள
அணியைக் குறிப்பிடுக.
ஆறு
சக்கரம் நூறு வண்டி
அழகான
ரயிலு வண்டி
மாடு கன்னு
இல்லாமத்தான்
மாயமாத்தான்
ஓடுது
உப்புப்
பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப்
பாளையம் போகும் வண்டி
28.புதிர்ச்சொல் கண்டுபிடி
1.
இச்சொல் மூன்றெழுத்துச் சொல்.
2.
உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல்
எழுத்து.
29.இருபொருள் தருக : 1. திங்கள்
2. ஓடு
30.ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக:
1. அரம் – அறம்.
31.அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக. 1.கருணை
2.அச்சம்
32.தமிழெண்கள் எழுதுக : 56,28,542,102
33.நீங்கள் பிறர் மகிழும்படி செய்த செயல்களுள் இரண்டினைக்
குறிப்பிடுக.
34.விடுபட்ட சீர்களை நிறைவு செய்து குறளை மீண்டும்
எழுதுக.
-----------
பல்லுயிர் ஓம்புதல் —------
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
எ)ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க:
1X6=6
35.வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்த நிகழ்வை
விளக்குக.
36.பாதம் என்ற சிறு கதையைச் சுருக்கி எழுதுக.
ஐ)கடிதம்/கட்டுரை எழுதுக
1X6=6
37.அ.தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
(அல்லது)
ஆ.நூல்கள் அனுப்ப
வேண்டி பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக
CLICK HERE TO GET PDF
Chitra
ReplyDelete