மாதம் : ஏப்ரல் வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : 10 இயல் : 09
பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 40
I. பலவுள் தெரிக:- 4 × 1= 4
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது________
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
2. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று___ ,___ வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
3. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி___________
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
4. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது________________
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 4× 2= 8
1. தீவக அணிகளின் வகைகள் யாவை?
2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
3 “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
III அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3× 4= 12
1.ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “ தர்க்கத்திற்கு அப்பால் “ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
2. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
3. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
IV. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:- 1× 4= 4
1. நவமணி வடக்கயில் – எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.
V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 2× 6= 12
1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
CLICK HERE TO GET PDF