9TH -TAMIL -UNIT 7 - QUESTION PAPER - PDF

 

வகுப்பு : 9                                                           இயல் : 7

பாடம் : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                        4 × 1= 4

1. இந்திய தேசிய இராணுவம் ___ இன் தலைமையில் ____ உருவாக்கினர்

) சுபாஷ் சந்திர போஸ்,இந்தியர்             ) சுபாஷ் சந்திர போஸ்,ஜப்பானியர்       

) மோகன் சிங், ஜப்பானியர்                   ) மோகன் சிங்,இந்தியர்

2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

) வருக்கை - இருக்கை          ) புள் – தாவரம்     இ) அள்ளல் – சோறு  ஈ) மடிவு – தொடக்கம்

3. இளங்கமுகு,செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.

) உருவகத் தொடர்,வினைத்தொகை       )  பண்புத்தொகை,வினைத்தொகை

) வினைத்தொகை,பண்புத்தொகை          ) பண்புத்தொகை, உருவகத்தொடர்

4. கூற்று – இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான்,” இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்”என்றார்.

 காரணம் – இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

) கூற்று சரி; காரணம் சரி    ) கூற்று சரி; காரணம் தவறு

) கூற்று  தவறு ; காரணம் சரி ) கூற்று தவறு ; காரணம் தவறு

II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        4× 2= 8

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

2. ‘ டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

3. கருக்கொண்ட பச்சைப் பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

4. கலைச்சொல் தருக:- அ) INDIAN NATIONAL ARMY                    ஆ)  COMMODITY EXCHANGE

III அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        3× 4= 12

1. குறிப்பு வரைக:- டோக்கியோ கேடட்ஸ்

2. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக் கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?

3. நயம் பாராட்டுக.

               வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்

                              வளைந்துசெல் கால்களால் ஆறே!

               அயலுள ஓடைத் தாமரை கொட்டி

                              ஆம்பலின் இதழ்களை விரித்தாய்

               கயலிடைச் செங்கண் கருவரால் வாளை

                                கரைவளர் தென்னையில் பாயப்

               பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்

                              பெருங்குளம் நிறைந்து விட்டாயே!

                                                            - வாணிதாசன்

IV. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                  1× 4= 4

1.”சொல்லரும்“ எனத் தொடங்கும் சீவக சிந்தாமணி  பாடலை எழுதுக.

V. நெடுவினா                                                                                          1× 6= 6

1. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                     2× 3= 6

1. பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.

( இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை )

               மானாமதுரை ஓர் அழகான _________ ; நீண்ட வயல்களும் _______களும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் ____ பூக்கள் மலர்ந்துள்ளன; கதிரவனின் _________ வீசிட,சோலைப் _________களின் ______கேட்போரைப் ____________ அடையச் செய்கிறது.

2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

 

CLICK HERE TO DOWNLAOD PDF

CLICKHERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post