8TH - TAMIL - NOTES OF LESSON - MARCH - WEEK -3

 நாள்                 :         14 - 03 -2022     முதல்  18 - 03 - 2022         

மாதம்                           மார்ச்           

வாரம்               :           மார்ச்  மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  1. பல்துறைக் கல்வி

                                    2. வேற்றுமை

கருபொருள்                            :

Ø  பல்துறைக் கல்வி பற்றி அறிந்து,கற்று வாழ்வில் உயர்தல்

Ø  பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதில் வேற்றுமை உருபுகளின் பங்கினை அறிந்து பயன்படுத்துதல்.

உட்பொருள்                           :

Ø  திரு.வி.க. அவர்களின் பல்துறைக்கல்வியைப் பற்றி கூறியுள்ளமையை அறிதல்

Ø  எட்டு வேற்றுமை மற்றும் அவற்றின் உருபுகளை அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  பல்துறைக் கல்வி பற்றி அறிந்து,கற்று வாழ்வில் உயர்தல்

Ø  பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதில் வேற்றுமை உருபுகளின் பங்கினை அறிந்து பயன்படுத்துதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  கல்வியினால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறுங்கள்.

Ø  கல்வி ஒருவரை எவ்வாறு எல்லாம் மேம்படுத்துகிறது?

Ø  நீ அறிந்த சில கல்விகள் சில கூறு

Ø  முருகன் வேலைக் கொடுத்தான், முருகனுக்கு வேலைக் கொடுத்தான்

Ø  இவ்வாறு வினாக்கள் கேட்டும், சில உதாரணங்களை கரும்பலகையில் எழுதியும் ஆர்வமுட்டல்

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  இலக்கணப்பகுதியினைப் பொருளுணர்ந்து படித்தல்.

நினைவு வரைபடம்                 :

                                                            பல்துறைக் கல்வி



                                                            வேற்றுமை



                                                           

தொகுத்து வழங்குதல்             :

பல்துறைக் கல்வி

Ø  திரு.வி.க. – திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரனார்

Ø  ஈடுபாடு : அரசியல், சமுதாயம்,சமயம், தொழிலாளர் நலன், மேடைப் பேச்சு

Ø  எழுதிய நூல்கள் : மனித வாழ்க்கையும், காந்தியடிகளும்,பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை,பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு

Ø  ஏட்டுக்கல்வி : அறிவு விளக்கத்திற்குக் கல்வி பயில்தல்

Ø  தாய்மொழி வழிக் கல்வி : முதல் முதலில் தாய்மொழி வாயிலாக பயிலுதல்

Ø  தமிழ் வழிக்கல்வி : பிற மொழிகளில் உள்ளவற்றை தமிழில் பெயர்த்துப் படித்தல்

Ø  காப்பியக் கல்வி : நாம் பாட்டின்பத்தை நுகர காப்பியக் கல்வி அவசியம்

Ø  இயற்கைக் கல்வி : இயற்கையோடு இயைந்த கல்வி பயிலுதல்

Ø  இசைக் கல்வி : இன்றைய சூழலில் இசைப் பயிற்சி இன்றியமையாதது.

Ø  நாடகக் கல்வி : நாடகத்தின் வளர்ச்சிக்கு நாடகக்கல்வி

Ø  அறிவியல் கல்வி : உலக வாழ்விற்கு இன்றியாமையாதது “ அறிவியல் “ என்னும் அறிவுக்கலை

வேற்றுமை

Ø  பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.

Ø  வேற்றுமை : 8

Ø  முதல் வேற்றுமை : எழுவாய் வேற்றுமை

Ø  இரண்டாம் வேற்றுமை ( ஐ ): ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீத்தல்,ஒத்தல்,உடைமை ஆகிய ஆறு பொருள்களில் வரும்.

Ø  மூன்றாம் வேற்றுமை ( ஆல் ) : கருவி,கருத்தா,உடனிகழ்ச்சி ஆகியப் பொருள்களில் வரும்.

Ø  நான்காம் வேற்றுமை ( கு ) : கொடை,பகை,நட்பு,தகுதி,அதுவாதல்,பொருட்டு,முறை,எல்லை  ஆகிய பொருள்களில் வரும்.

Ø  ஐந்தாம் வேற்றுமை ( இன் ) : நீங்கல்,ஒப்பு,எல்லை,ஏது ஆகிய பொருள்களில் வரும்.

Ø  ஆறாம் வேற்றுமை ( அது ) : உரிமைப் பொருள்களில் வரும்.

Ø  ஏழாம் வேற்றுமை ( கண் ) : இடம், காலம் ஆகிய பொருள்களில் வரும்.

Ø  எட்டாம் வேற்றுமை : விளி வேற்றுமை

 

வலுவூட்டல்                             :

Ø  காணொளி காட்சிகள் மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ____________

Ø  கல்விப் பயிற்சிக்குரிய பருவம் _________

Ø  இளமையில் கல் என்ற முதுமொழியின் பொருள் விளக்குக

Ø  தயிருக்கு பால் வாங்கினான் – இத்தொடர் ___________ பொருளைக் குறிக்கிறது

Ø  எட்டாம் வேற்றுமை ________ வேற்றுமை என்றும் வழங்கப்படும்.

Ø  உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ணச் சொற்களைப் படித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø   வேற்றுமைகளின் உருபுகளை படித்து எழுதுதல்

தொடர் பணி                          :

Ø  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களை திரட்டி எழுதி வருதல்

Ø  பாடப்பகுதியில் ஏதேனும் ஒரு பத்தியைத் தேர்வு செய்து அதில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகளை அடையாளம் கண்டு எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post