நாள் : 28-03-2022 முதல் 02-04-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஆகுபெயர்
கருபொருள் :
Ø சொற்களின் தன்மையை மொழியில்
அடையாளம் கண்டு பயன்படுத்துதல்
உட்பொருள் :
Ø ஆகுபெயர் பற்றி அறிதல்
Ø அதன் வகைகள் பற்றி அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்
கற்றல் விளைவுகள் :
Ø சொற்களின் தன்மையை மொழியில்
அடையாளம் கண்டு பயன்படுத்துதல்
ஆர்வமூட்டல் :
Ø கரும்பலகையில்
சில ஆகு பெயர் சொற்களை எழுதி வினாக்கள் கேட்டல்
Ø முன்னர்
கற்ற இலக்கணப் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø இலக்கணப்பகுதியினை உணர்ந்து
படித்தல்
Ø ஆகுபெயர்களின் வகையினை
அறிதல்
Ø நடைமுறை எடுத்துக்காட்டுகள்
கொண்டு அறிதல்
நினைவு வரைபடம் :
ஆகுபெயர்
ஆகுபெயர்
Ø ஒன்றன் பெயர் அதனைக்
குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
Ø பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு
வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.
Ø பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு
வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.
Ø பொருளாகுபெயர்
o
பொருளின்
பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும். இதனை
முதலாகு பெயர் எனவும் கூறுவர்.
Ø இடவாகு பெயர்
o
சடுகுடு
போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
Ø காலவாகு பெயர்
o
திசம்பர்
சூடினாள்
Ø சினையாகு பெயர்
o
.
தலைக்கு ஒரு பழம் கொடு
Ø பண்பாகுபெயர்
o
இனிப்பு
தின்றான்
Ø தொழிலாகு பெயர்
Ø பொங்கல் உண்டான்.
Ø இரட்டைக்கிளவி
o
இரட்டையாக
இணைந்து வந்து,
பிரித்தால்
தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்
Ø அடுக்குத்தொடர்
o
இரட்டையாக
இணைந்து வந்து,
பிரித்தால்
தனிப்பொருள் தரும் சொற்களை அடுக்குத்தொடர்என்பர்
வலுவூட்டல் :
Ø பாடப் பொருளை சில உதாரணங்களைக்
கொண்டு மீண்டும் விளக்கி கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
1.
பொருளின்
பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ______.
2.
இந்த
வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ______.
3. மழை சடசடவெனப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ______.
4.
அடுக்குத்
தொடரில் ஒரே சொல் ______
முறை
வரை அடுக்கி வரும்.
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர்
கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
தொடர் பணி :
அன்றாடப் பேச்சு வழக்கில்
இடம்பெறும் அடுக்குத்தொடர்,
இரட்டைக்கிளவி
ஆகியவற்றைத் தொகுக்க
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை