12TH - TAMIL - TWO MARK QUESTIONS ( UNIT 1,2,3 )

 ஓம்சக்தி

ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி

2021 - 2022

2 மதிப்பெண் வினா விடைகள்

வகுப்பு -12                பொதுத்தமிழ்

இயல் - 1

1. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடா;கள் உணா;த்தும் பொருளை அறிந்து தொடா; அமைக்கவும். 

முடிந்தால் தரலாம்: 

ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது. 

முடித்தால் தரலாம்: 

தரப்பட்டுள்ள வேலையை முடித்துவிட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது. 

மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை முடிந்தால் தரலாம்.  

ஆசிரியா; கூறியபடி செயல்திட்டப் பதிவேடுகளை முடித்தால் தரலாம். 


2. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக. 

நடை அழகியல் 

கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. ‘நடைபெற்றியலும்’, ‘நடை நவின்றொழுகும்’ என்னும் சொற்றொடா;களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. 

ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. 


3. ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் 

கடாஅ யானைக் கலிமான் பேக” 

- இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக. 

ஓசை நயமிக்கச் சொற்கள் 

படாஅம் ஈத்த, கெடாஅ , கடாஅ யானை, 

இலக்கணக்குறிப்புகள் 

படாஅம் ஈத்த 

கெடாஅநல்லிசை இசைநிறையளபெடை(அ)செய்யுளிசையளபெடை 

கடாஅ யானை 


4. கவிஞா; சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்? 

தமிழின் துணை வேண்டும்: 

செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளா;களின் வியா;வை வௌ;ளம் அவா;களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை வேண்டுமெனக் கவிஞா; சிற்பி கூறுகின்றார். 


5. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடா; அமைக்க. 

விடியலில் உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும். 


இயல் - 2

1. மொழியின் சொற்றொடா; அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை? 

மொழியின் சொற்றொடா; அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன, திணை, பால், எண், இடம் ஆகியனவாகும். 


2. உயா;திணைப் பன்மைப் பெயா;கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடா;களை எழுதுக. 

நீங்கள் வீட்டிற்கு வாருங்கள். 

அவா;கள் ஆலயம் வந்தார்கள். 


3. ‘நகரம் பட்டை தீட்டிய வௌ;ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக. 

நகரம் பட்டை தீட்டிய வௌ;ளை வைரமாகிறது 

மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம் இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும். 

மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள் அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது. 

இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வௌ;ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது. 


இயல் - 3

1. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சோ;த்துத் தொடரமைக்க. 

மாணவா;கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனா;. 

விடை: மாணவா;கள்வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனா;. 


2. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சோ;த்தும் இருவேறு தொடரமைக்க. 

எ.கா : முன்

அவன்  முன்வந்து கூறினான். 

அவன்முன் வந்து கூறினான். 

தானே

கண்ணன்தானே படித்தான். 

கண்ணன்  தானே படித்தான்.


3. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக

சான்று 

அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள் 

அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள் 

இச்சான்றின் முதல் தொடரில் அந்தப்பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணா;த்துகிறது அத்தொடரில் உள்ள காற்புள்ளி. 

இச்சான்றின் இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளியால் அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருள் வேறுபாட்டைத் தருவதை அறியலாம். 


4. சலசல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடா;களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக. 

இரட்டைக்கிளவித் தொடா;கள் - சல சல, கல கல 

தொடரில் இரட்டைக்கிளவிச் சொற்களை எழுதும்போது சோ;த்து எழுத வேண்டும். 

சான்று 

1. அருவி விழும் ஓசை சலசலவெனக் கேட்டது (சரி) 

அருவி விழும் ஓசை சல சலவெனக் கேட்டது (தவறு) 

2. செல்வி கலகலவெனச் சிரித்தாள் (சரி) 

செல்வி கல கலவெனச் சிரித்தாள் (தவறு) 


5. திருவளா;ச்செல்வன், திருவளா; செல்வன் இவற்றில் சரியான தொடா; எது? அதற்கான இலக்கண விதி யாது? 

‘திருவளா;செல்வன்’ என்ற தொடரே சரியான தொடா;. 

‘வினைத்தொகையாக வரும் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகுதல் கூடாது’ என்ற இலக்கண விதியின் படி ‘திருவளா;செல்வன்’ என்ற வினைத்தொகையில் வல்லினம் மிகாது. 


6. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக. 

புக்கில்: 

புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும். 

‘துகள் அறுகேள்வி உயா;ந்தோர் புக்கில்” என்ற புறநானூற்றுப் பாடலில் (222:6) வரும் ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கின்றது. 

தன்மனை: 

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது. 


7. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது? 

நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து 

பொய்யான உலகப்பற்று அழிந்து போகக் கூடியதாகும். உலகத்தின் மீது பற்றுக் கொள்வது வீணாகும். 

என் மண்ணுலகப் பிறவி ஒழிந்தது. 

ஏனெனில் நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிப்பதாகும். 


8. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துபவை 

மனித வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகளான,

ஓர் ஆனந்தம் 

சற்று மனச்சோர்வு 

சிறிது அற்பத்தனம் 



நொடிப்பொழுதேயான விழிப்புணா;வு 

ஆகியவற்றை எல்லாம் நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தியிருக்கின்றார். 


9. “துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது”? என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்? 

அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும். 

ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும். 

‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது’? என்ற இராமனின் கூற்று, “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்னும் பழமொழிக்குப் பொருந்தும். 


10. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை? 

சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் பெண்களே குலத்தொடா;ச்சிக்கு உரியவா;களாக இருந்தனா;. 

தாய்வழிமுறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சோ;ந்தன. 


11. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவா; யாரைச் சுட்டுகிறார்? 

முயல்வாருள் எல்லாம் தலை 

அறத்தின் வழியாக இல்லறவாழ்க்கை வாழ்பவா;கள் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலையானவா; என வள்ளுவா; கூறுகிறார். 


12. ஞாலத்தின் பெரியது எது? 

ஞாலத்தின் பெரியது 

ஒருவா; நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும். 


13. மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை? 

மறக்கக் கூடாதது 

ஒருவா; நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. 

மறக்கக் கூடியது 

ஒருவா; நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். 

14. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன எவை? 

செல்வம் இருப்பதற்கான வழி 

செல்வம் ஒருவரிடம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், அவா; பிறருடைய கைப்பொருளைத் துளியளவும் விரும்பாமல் இருத்தல் வேண்டும். 

15. சினத்தை ஏன் காக்க வேண்டும்? 

சினத்தை காக்க  ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன், சினத்தைக் காக்க வேண்டும். 

ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும். 

CORRECTION  PDF WILL BE UPDATED SOON


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post