12TH -TAMIL -IMPORTANT 4 MARKS AND 6 MARKS QUESTIONS AND ANSWER

ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,மேல்மருவத்தூர்

4மற்றும் 6 மதிப்பெண் வினா விடைகள்

தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு

நான்கு மதிப்பெண் வினா விடைகள்

1. ’செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் ப+க்காடாம் வான மெல்லாம்” தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

தமிழின் சிறப்பை உணர்த்தும் இயற்கை அழகியல் வெளிப்பாடு

உவமை

செம்பரிதி (சிவந்த சூரியன்) மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்.

சிவந்த சூரியன் மாலை நேரத்தில் மலையுச்சியில் சென்று மெல்ல மெல்ல மறைவான்.

இதனைக் கவிஞர் அழகியல் தன்மையோடு ’மலைமேட்டில் தலைசாய்ப்பான் சூரியன்” என்கிறார்’செந்நிறத்துப் ப+க்காடாம் வனமெல்லாம்”

அவ்வாறு செக்கச் சிவந்த சூரியனின் மாலை நேரக் கதிர்கள் (கைகள்) பட்டதால் காடெல்லாம் சிவந்து சிவப்பு நிறத்துப் ப+ங்கா போல் மாறிவிட்டது.

சூரியனின் சிவந்த கதிர்கள்போல் தொழிலாளர்களின் கைகள்

சூரியனின் கைகள் சிவந்ததுபோல் காலைமுதல் மாலைவரை உழைத்த தொழிலாளர்களின் கைகளும் சிவந்து உள்ளது என்று உவமைப்படுத்துகின்றார்

தொழிலாளர்களின் வியர்வை முத்துகள் தமிழை வியந்து பாடும்

மாலை நேரத் தொழிலார்களின் கைகள் சிவந்தும் வியர்வை முத்துகள் வௌ;ளிமணிபோல் உடலெங்கும் முத்துமுத்தாய்ப் ப+த்திருக்கும்.

ப+த்திருக்கும் வௌ;ளை முத்துக்கள் தமிழின் புகழை வியந்துபாடும். ’இத்தகைய சிறப்பு வாய்ந்த அருமையான செந்தமிழே உன்னைவிட எனக்கு உற்ற துணை வேறு உண்டா? என அழகியல் தன்மையோடு தமிழின் பெருமையைப் கூறுகின்றார் கவிஞர் சிற்ப.ி

காட்சி நயம்

செம்பரிதியின் கதிர்கள் - தொழிலாளர்களின் கைகளாகவும், 

தொழிலாளர்களின் வியர்வை - வௌ;ளி முத்துகளாகவும், 

வௌ;ளி முத்துகள் - தமிழ்ப்பாடும் கவிஞர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


2.ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

பாடலின் இடம் சுட்டுதல்

 பாடல் வரிகள் இடம் பெற்ற இலக்கியம் - தண்டியலங்காரம் (உரை மேற்கோள் பாடல்)

 பாடலின் ஆசிரியர் - தண்டி

 பாடல் எழுதியதன் காரணம் - அணி இலக்கணத்தைச் சிறப்பைக் கூறும் இந்த இலக்கியத்தில் பொருள் வேற்றுமை அணியை விளக்க உரை மேற்கோள் பாடலாக இயற்றப்பட்டது.

பாடல் வரியின் பொருள்

 ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - கடலால் சூழப்பட்ட உலகத்தின் இருளை அகற்றும்

கதிரவன்                                                               

 உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றுபவன் 

கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுபவன்                                                 மக்களால் போற்றப்படுபவன்                              

ஒளிர்கின்ற கதிரவனாக இருக்கின்றான்  

தமிழ்

உயர்ந்த பொதிகைமலையிருந்து தோன்றியவள்

உலகத்தில் வாழும் மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றுபவள்

சான்றோரால் தொழப்படுபவள்

தனக்கு நிகரில்லாத தமிழாக இருக்கின்றாள்.


3.’நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் - இக்கவிதையின் அடி, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே” என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

ஏற்றப்பாடல்

’மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே” என்பது நாட்டுப்புறப்பாடல்

மூங்கிலின் மீது இருக்கும் பனித்துளியை கதிரவன் வாங்கிக்கொள்கிறான்.நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை ஒளிக்கதிர்கள் உறிஞ்சிக்கொள்கின்றன.

துளியை உறிஞ்சியபின் நீர் நிலைகளை உறிஞ்ச வந்துவிட்டான் கதிரவன் என்பது அதன் தொடர்ச்சியாக உள்ளது.

4. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

குளிர்கால நள்ளிரவு

மேகம்தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்தது

உலகமே குளிரும்படி புதிய மழையைப் ப+மியெங்கும் பொழிய வைத்தது.

தாழ்வான பகுதிகளில் வௌ;ளம் பெருகியது. இதனைக் கோவலர் வெறுத்தனர்.

எருமைகள், பசுக்கள், ஆடுகள் போன்றவற்றை மேடான நிலத்தில் மேய விட்டனர்.

கோவலர்களின் துன்பம்

வழக்கமாக தாம் பழகிய இடத்தை விட்டுப் பிரிந்து வேறு இடத்திற்குப் பெயர்ந்தனர்.

பிரிவுத் துன்பம் கோவலர்களை வாட்டியது.

கோவலர்களின் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களுடைய காந்தள் மலர் கசங்கியது.

கோவலர்கள் ஒன்றுசேர்ந்து கொள்ளி நெருப்பால் கைகளுக்குச் சூடேற்றினர்.

கைகள் சூடேறினாலும் அவர்களின் பற்கள் நடுங்கின.

குளிரினால் விலங்குகளுக்கு ஏற்பட்ட துன்பம்

விலங்குகள் மேய்ச்சலை மறந்தன 

மரங்களிலிருந்து பறவைகள் வீழ்ந்தன

குரங்குகள் குளிரால் நடுங்கின 

பசுக்கள் பால் குடிக்க வந்த கன்றுகளைத் தவிர்த்தன.

5.குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.

பிறப்பால் நால்வர்

அயோத்தியின் அரசன் தசரதனின் மகன் இராமன். 

இராமனுக்கு உடன்பிறந்த தம்பிகள் மூன்று பேர்.

எனவே, பிறப்பால் இராமன் நால்வர் ஆனவன்.

குகனோடு ஐவர்

இராமன், கங்கை கரையில் வேடர் குலத் தலைவன் குகனைக் காண்கிறான்.

இராமன், குகனின் அன்பிற்கு ஆட்பட்டான்.

குகனைத் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டு, குகனோடு ஐவர் ஆனான்.

சுக்ரீவனுடன் அறுவர்

கிட்கிந்தையில், வானரங்களின் தலைவன் சுக்ரிவீனைக் காண்கிறான்.

சுக்ரீவனைத் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டு, சுக்ரீவனுடன் அறுவர் ஆனான்.

வீடணனோடு எழுவர்

இலங்கை வேந்தன் இராவணனின் தம்பி வீடணன்.

சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என வீடணன் இராவணனிடம் கூறுகின்றான்.

இராவணன் ஏற்க மறுக்கவே, அவனைவிட்டு நீங்கி இராமனுடன் சென்று சேர்கிறான்.

இராமன் வீடணனையும் ஏற்றுக்கொண்டு, வீடணனோடு எழுவர் ஆனான்.

6.’வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்

ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையை „தாகங்கொண்ட மீன்கள்... என்ற பெயரில் தமிழாக்கம் செய்தவர் என். சத்தியமூர்த்தி.

விளக்கம்

ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு ஆகியவை நம் வீட்டிற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகள் என்கிறார் கவிஞர்.

வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவை வீட்டிற்கு வருகின்றன.

வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.

ஏனெனில், இவை அனைத்தும் நம் வாழ்வில் ஏதேனும் ஓர் அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியவை.

7. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

சடாயு

இராவணன் சீதையைச் சிறையெடுத்து, இலங்கைக்குக் கொண்டுச் சென்றான்.

சடாயு என்னும் கழுகு வேந்தன் இராவணனை இடையில் தடுக்க முயற்சித்தான்.

சடாயு, இராவணனுடன் சண்டையிட்டுக் காயப்பட்டான்.

இராமனைச் சந்தித்தல்

சடாயு, இராமனிடம் நடந்தவற்றைக் கூறி இறந்துவிட்டான். 

இராமனின் தந்தையின் நண்பன் சடாயு.

எனவே, சடாயு தனக்கும் தந்தைதான் என்று எண்ணி அவனுக்கான இறுதிச் சடங்குகளை இராமனே செய்தான்.

இறுதிச் சடங்கு

இராமன், விறகிற்கு அகில், சந்தனக் கட்டைகளைக் கொண்டு வந்தான்.

தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். 

ப+க்களைக் கொண்டுவந்து தூவினான்.

நன்னீரைக் கொண்டுவந்தான். 

மணலினால் மேடை அமைத்தான்.

மேடைக்கு தன் தந்தையாகிய சடாயுவைக் கொண்டு வந்தான்.

8.இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

இராமலிங்க அடிகள் வேண்டும் உறவு

இராமலிங்க அடிகள் கந்தக்கோட்டத்திலுள்ள முருகனிடம் தனக்கு வேண்டிய உறவினைப் பற்றி வேண்டுகிறார்.

சிறந்தவர்கள் ஒருநெறிப்பட்ட மனத்துடன் முருகனின் திருவடிகளை நினைத்திருப்பார்கள்.

அத்தகைய சிறந்தவர்களின் உறவு வேண்டும் என்கிறார் இராமலிங்க அடிகளார்.

இராமலிங்க அடிகள் வேண்டாத உறவு

வஞ்சகர்கள் மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு, வெளியில் மற்றொன்றைப் பேசுவார்கள்.

அத்தகைய வஞ்சகர்களின் உறவுகள் தன்னை நெருங்காமல் காக்கும்படி வேண்டுகிறார்.

9.பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

பங்குனி உத்திரத் திருவிழா

திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

மயிலையில் எழுச்சிமிக்க விழாக்கள் நடைபெறும்.

இளம்பெண்கள் ஆரவாரத்தோடு திருவிழாக்களைக் கொண்டாடுவார்கள்.

மயிலையில் கோவில் கொண்டிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திரத்தில் விழா நடைபெறுகிறது.

பங்குனி உத்திர விழா ஆரவாரம்மிக்க விழாவாக உள்ளது.

ப+ம்பாவாய் இவ்விழாவைக் காணாமல் சென்றது முறையாகுமோ? என்கிறார் திருஞானசம்பந்தர்.

10.நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.

நாட்டிய அரங்கின் அமைப்பு

சிற்ப நூலாசிரியர்கள் கூறிய இயல்புகள் மாறாத நன்னிலத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

பொதிகை மலை போன்ற உயரிய மலையிலிருந்து மூங்கிலைக் கொண்டு வந்தார்கள்.

மூங்கிலில் ஒரு சாண் அளவு இடைவெளியுள்ள கணுக்கள் இருந்தன.

நூல்களில் கூறப்பட்டுள்ள முறைப்படி அரங்கம் அமைத்தனர்.

தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக மூங்கிலை வெட்டினர்.

அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

அரங்கின் தூணிற்கு மேல் உத்திரப் பலகையை வைத்தனர்.

உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே நான்கு கோல் அளவு இருந்தது.

அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இரு வாயில்கள் அமைக்கப்பட்டன.

மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை வரைந்து வைத்தனர்.

தூண்களின் நிழல் அரங்கில் விழாதபடி, விளங்குகளை ஏற்றினர்.

11.யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.

உவமை

 யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே

பொருள்

  ஒரு சிறிய நிலப்பரப்பில் விளைந்த நெல்லாக இருந்தாலும் அதனை அறுத்து யானைக்கு இட்டால் ஒரு மாதம் வரை யானைக்கு உணவு வழங்க இயலும்.

ஆனால், யானை விளை நிலத்திற்குள் புகுந்தால் அது உண்பதைவிட காலில் மிதிப்பட்டு வீணாவது அதிகமாகும்.

விளக்கம்

 ஒரு மன்னன் தன் நாட்டு மக்களிடம் சரியான அளவில் வரி வசு+ல் செய்தால் அதிக அளவு வரி வசு+லிக்க இயலும். மன்னன் தன் பேராசையால் மக்களிடம் அதிகப்படியான வரி வசு+ல் செய்ய நினைத்தால் யானை புகுந்த நிலம்போல வீணாகும்.

12.‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்“ - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்

 இரட்சணிய யாத்திரிகம், குமார பருவம், இரட்சணிய சரித படலம்

ஆசிரியர் - எச்.ஏ. கிருட்டிணனார்

பொருள்

 இறைமகன் மக்கள்மீது மிகவும் அன்புக்கொண்டிருந்தார்.

 எனவே, அவர்கள் தன்னைக் கயிற்றால் கட்டும்போதும் அமைதியாக இருந்தார்.

 அந்தக் கட்டிலிருந்து விடுபட இயலாமல் ஓர் ஏழையைப் போல இறைமகன் இருந்தார், இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள் என்கிறார் கவிஞர்.


13.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் வரும் அணியை விளக்குக.

அணி :நிரல்நிறை அணி

அணி விளக்கம்

 ஒரு சொல் ஒரு வரிசையில் நிறுத்தி, அவற்றோடு பொருள் தொடர்புடைய வேறுசொல்லை அடுத்த வரிசையில் நிறுத்துவது நிரல்நிறை அணி ஆகும்.

குறட்பா

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

பொருள்

 அன்புடன் வாழ்வதே வாழ்க்கையின் பண்பு. அறத்தோடு வாழ்வதே வாழ்க்கையின் பயன்.

அணி பொருத்தம்

 இக்குறட்பாவில், முதலடியில் அன்பு, அறன் ஆகிய சொற்கள் அமைந்துள்ளன.

அதற்கு இணையாக இரண்டாவது அடியில் பண்பு, பயன் ஆகிய சொற்கள் அமைந்து பொருள் தருகின்றன. எனவே, இது நிரல் நிறை அணி ஆகும்.


14. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவம்

அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. 

அறத்தோடு வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன்.

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ வேண்டும்.

அவ்வாறு வாழ்பவர் முயற்சிச் சிறப்புடையோரைவிட மேம்பட்டவர்.

ஒருவர் உலகத்தில் வாழ வேண்டிய நெறியோடு வாழ வேண்டும்.

அவ்வாறு வாழ்பவர் வானத்தில் உறையு தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.

15. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? - குறள் வழி விளக்குக.

மண்ணுலகும் விண்ணுலகும் ஈடாகாது

ஒருவர் தனக்கு எந்தவித உதவியும் செய்யாத நிலையில், தான் அவருக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் ஈடாகாது.

உலகைவிட பெரியது

  உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறிதாக இருக்கும். ஆனால், அவர் செய்த உதவி உலகத்தைவிட பெரியதாகும்.

கடலைவிட பெரிது

 எந்தவித பயனும் எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவி கடலைவிட பெரியது.


16. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.

சினத்தால் வரும் கேடுகள்

சினத்தால் தீமையான விளைவுகள் ஏற்படும். 

முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் அழித்துவிடும்.

சினமே ஒருவருக்குக் கொடிய பகையாகும். 

சினம் நம்மையே அழித்துவிடும்.

தன்னையே அழிக்கும் நெருப்பு போன்றது சினம்.

ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்பைச் சினம் அழித்துவிடும்.


17.கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்.

அணி விளக்கம்

 கவிஞர் எடுத்துக்கொண்ட இரண்டு ஒப்பீடுகளில் ஒன்றை உருவகப்படுத்தி, மற்றொன்றை

உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் - ஒன்று, தேசம் - பக்கம்)

குறட்பா

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்.

பொருள்

 தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு சினம் ஆகும்.  சினம் ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் அழிக்கும்.


18.அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள்வழி நீவிர் கருதுவன யாவை?

அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள்வழி நான் கருதுவன

ஒருவருக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு ஆகும்.

பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரண் அறிவு ஆகும்.

மனம் அது போகும் வழியில் செல்லவிடாமல், நல்ல வழியில் செலுத்துவது அறிவு.

எப்பொருளை யார் சொல்லக் கேட்டாலும் அதன் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு.

உலகம் எத்தகைய நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் செல்வதே அறிவு.

பின்னர் வரும் துன்பத்தை முன்னரே அறிந்துக் காத்துக் கொள்பவருக்கு நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

19.மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.

மனத்திட்பத்தின் அவசியம்

ஒரு செயலைச் செய்வதற்கு மன உறுதி இன்றியமையாததாகும்.

மன உறுதியைத் தவிர மற்ற எதுவும் பயன்படாது.

ஒரு செயலை நான் எளிதாக செய்துவிடுவேன் என்று கூறுவது அனைவருக்கும் எளிதானது.

ஆனால், மன உறுதி உள்ளவரால் மட்டுமே அச்செயலைச் செய்து முடிக்க இயலும்.

ஒருவர் மனஉறுதி உடையவராக இருந்தால், நினைத்த செயலை நினைத்தப்படியே நடத்தி முடிப்பார்.

ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது. பெரிய தேருக்கும் சிறிய அச்சாணிதான் உள்ளது.

20. சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்

ஒருவரை உலகத்தார் மதிக்கும் சொல் யாரோடு சேர்க்கிறாரோ அவரின் தன்மையைப் பொருத்தே சொல்லப்படும்.

ஒருவருக்குச் சிறந்த துணை நல்ல இனத்தோடு சேருதல்

ஒருவருக்குத் துன்பத்தைத் தரும் பகை தீய இனத்தோடு சேருதல்

21. வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?

வாள்

வாளைப்போல வெளிப்படையாகத் துன்பம் செய்பவர்களுக்கு அஞ்சத் தேவையில்லை.

உறவுடையோர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

பாம்பு

உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.

22. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விளக்குக.

சூது

ஒருவருக்குத் துன்பத்தை உருவாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையைத் தருவது சூதாட்டம் ஆகும்.

சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் நற்பண்புகளையும் கெடுக்கும்.

கள்

உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவார்.

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும்.

23.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

மொழியின் தோற்றம்

  எந்தத் தொன்மையான மொழியாக இருந்தாலும் அது சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தோன்றின.

கவிதையின் தோற்றம்

  ஒரு மொழிசார்ந்த கவிதை இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கின்றது.

ஒலிப்பின்னல்

 கவிதையின் ஓசையும் பொருளும் இணைந்து ஒரு கலைவடிவம் கொள்கின்றன.

 இதை அந்தக் கவிதையின் ஒலிப்பின்னல் (ளழரனெ வநஒவரசந) என்கின்றோம்.

வல்லின ஒலியில் உணர்ச்சி எடுத்துக்காட்டுப் பாடல்

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக - திருக்குறள்

சொல்லின் வன்மை எழுத்திலும் ஒலிப்பது ஒலிக்கோலத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


24.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.

விரிந்த குடும்பம்

சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்றது.

கணவன், மனைவியுடன் யாரேனும் ஒருவரின் தந்தையும் சேர்ந்து வாழ்ந்தனர்.

இவ்வகையான குடும்பமுறை „விரிந்த குடும்பமுறை... ஆகும்.

சங்க காலத்தில் செவிலித்தாயும்(வளர்ப்புத்தாய்), தோழியும் (செவிலித்தாயின் மகள்) குடும்பத்தில் முதன்மையான இடம் பெற்றிருந்தனர்.

குடும்ப வாழ்வின் பயன்

குடும்ப வாழ்வின் இறுதிக் காலத்தில் தலைவனும் தலைவியும் (கணவனும் மனைவியும்) இணைந்து,

தன் பிள்ளைகளுடனும் அறத்தினை விரும்பிய உறவினரோடும் சேர்ந்து, மனையறம் காத்து வந்தனர்.

மனையறம் காத்தலே குடும்ப வாழ்வின் பயன் எனக் கருதினர்.

கூட்டுக்குடும்பம்

சங்க காலத்தில் பிள்ளைகளோடும் உறவினரோடும் வாழ்ந்த நிலையே விரிந்த குடும்பம்.

இன்றைய காலக்கட்டத்தில், கணவன், மனைவி, பிள்ளைகள், தாத்தா, பாட்டி என அனைவரும் இணைந்து வாழ்கின்றனர்.

இவ்வாறு, இணைந்து வாழும் குடும்பம் கூட்டுக்குடும்பம் ஆகும்.

சங்க காலத்தில் இருந்த விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியாக கூட்டுக்குடும்பம் உள்ளது. 

25.தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?

குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நான் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள்

வீட்டில், என்னால் செய்ய முடியும் வேலைகளை நானே செய்வேன்.

என் உடைகளை நானே துவைப்பேன்.

வீட்டில் பெற்றோர் இல்லாதபோது, வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வேன்.

காலை சிற்றுண்டியை நானே தயாரித்துக் கொள்வேன்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.

26. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

நான் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் மட்டுமே கட்டுப்படுத்துவேன்.

மாணவன் சூழல் அறிவேன்

மாணவனின் தன்மை, அவன் கடந்து வந்த பாதை, வீட்டின் சூழல், பெற்றோர் அல்லது உற்றோர் நிலை மனவெழுச்சி, மனஉரம் அனைத்தையும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிந்து உதவிட முனைவேன்.

27.மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

எழுதும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

மணல் எழுத்து

முதன்முதலில் பிள்ளைகள் மணலில் தான் எழுதிப் பழகினார்கள்.

ஆசிரியர் முதலில் தன்விரலினால் மணலில் எழுத மாணவர்கள் அதன்மேல் எழுதிப் பழகி, பின்பு தாமாகவே எழுதிப் பழகினர்.

இம்முறையில் எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்தது.

ஓலைச் சுவடி எழுத்து

இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்து தருவார்.

ஆசிரியர்கள் முதலில் தாங்கள் எழுதிய ஓலைச்சுவடி எழுத்தின்மீது மாணவர்களை எழுதச் செய்வர்

மெல்லிய எழுத்தாணிகள் கொண்டு ஏட்டில் மாணவர்கள் எழுதிப் பழகினர்.

கையெழுத்து

எழுத்துகள் ஒன்றோடு ஒன்று படாமல் எழுதவேண்டும். 

வரிகோணாமல் எழுத வேண்டும்.

புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரி எழுத்தின் உறுப்புகள்

சுவடிகளின் வகைகள்

பனையோலை 

சீதாளப் பத்திரம்

எழுத்தாணிகளின் வகைகள்

 மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி

இக்காலத்தில் எழுதும் முறை

இக்காலத்தில் காகிதத்தில் பேனா என்னும் எழுதுகோலையும் பென்சில் என்னும் கரிக்கோலையும் கொண்டே பெரும்பாலும் எழுதுகின்றனர்.

காகிதங்களும் எழுதுகோல்களும் பல வண்ணங்களில் உள்ளன. கணினியில் எழுதும் முறை

காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாலும் சிக்கனம் கருதியும் பெரும்பாலானோர் கணினியில் இன்று விசைப்பலகை மூலம் எழுதி வருகின்றனர்.

இணையதள பேச்செழுத்து முறை எழுத்து (பழழபடந எழiஉந வலிiபெ) இணைய தளத்தில் சிலர் பேசுவதே எழுத்தாக மாற்ற இயலும் அவ்வாறே பேச்செல்லாம் எழுத்தாகவும்

நூலாகவும் மாறிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

28.வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

வேளாண்மையிலும் மேலாண்மையைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.

மண்ணிற்கு ஏற்ற பயிர்வகையைத் தேர்ந்தெடுத்தல்

நிலத்தைச் சரியான முறையில் உழுது பக்குவப்படுத்துதல் 

விதை விதைத்தல்

நீர் பயன்பாட்டை நெறிப்படுத்துதல்  

களை எடுத்தல் 

உரமிடுதல்

அறுவடை செய்தல்

பதப்படுத்தி, பாதுகாத்தல் போன்ற அனைத்துச் செயல்பாடுகளையும் சரியான முறையில் செய்தால் மட்டுமே வேளாண்மையில் வெற்றி பெற இயலும்.

ஆறு மதிப்பெண் வினா விடைகள்

1.கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

நடையியல்

கவிதையின் இயங்காற்றல்தான் (Pழறநசகரட வுநடடiபெ ளுவலடந) „நடை... எனப்படும்.

அதாவது கவிதையைச் சொல்லுகின்ற ஆற்றலும் அழகும்தான் நடையியல் ஆகும்.

ஒரு மொழியின் தனிச்சிறப்புக் கூறுகளையும் அதைக் கையாளும் முறையும்தான் அம் மொழிக் கவிதையின் உந்து சக்தியாக இருக்கின்றது.

கவிதை நடையியலுக்கு ஒலிக்கோலங்கள், சொற்புலம், தொடரியல் போக்குகள் போன்றவை மிக முக்கியமானவை.

’நடைபெற்றியலும் நடைநவின்றொழுகும்” என்ற சொல் தொடர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்கின்றது.

அழகியல்

அழகியல் என்பது இரசனை என்றே வழங்கப்படுகின்றது.

கவிதை சொல்லுகின்ற முறையும் கவிதையின் உணர்ச்சியை கற்பவரின் உள்ளத்தில் பாய்ச்சும் விதமும்

இதயம் கனியும் வகையில் வெளிப்படுத்துவதும் தமிழ்க் கவிஞர்களின் அழகியல் இயல்பாகும்.

அழகியலை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் தொல்காப்பியர்.

நடை அழகியலைக் கட்டமைக்கும் கூறுகள் மூன்று ஆகும்

ஒலிக்கோலங்கள் 

சொற்புலம்  

தொடரியல் போக்குகள் 

ஒலிக்கோலங்கள் 

ஒலிப்பின்னல்

கவிதையின் ஓசையும் பொருளும் இணைந்து ஒரு கலைவடிவம் கொள்கின்றன.

இதை அந்தக் கவிதையின் ஒலிப்பின்னல் (ளுழரனெ வுநஒவரசந) என்கின்றோம்.

எடுத்துக்காட்டுப் பாடல்கள் - வல்லின ஒலியில் உணர்ச்சிப் பாடல்

 ’கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக”

நெடில் எழுத்து ஒலிகள் பாடல்

’படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக”

இப்பாடலில் நெடில் ஒலிகள், குறிப்பாக உயிர் ஒலிகள் திரும்பத் திரும்ப வந்துள்ளன.

சொல்லும் ஒலியும் திரும்பவரல் பாடல்

 ’நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை”

இச் செய்யுளில் சொல்லும் அதன் ஒலியும் திரும்ப வந்துள்ளது

அவற்றோடு சொல்விளையாட்டும் (உன் அப்பனின் அப்பனுக்கு இவனுடைய அப்பனுக்கு அப்பன்) வந்துள்ளது சிறப்புக்குரியது.

சொற்புலம்

சொல்லில்தான் உணர்வும் பொருளும் கலையும் பண்பாடும் அரசியலும் பொதிந்துள்ளன.

சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்துவரும் பல சொல்லாய் பல பொருள் குறித்த ஒரு சொல்லாய் வரும்.

பல வகையான துறைகளுக்கும் சூழலுக்கும் புனைவுகளுக்கும் உரிய உணர்வும் தெளிவும் கொண்டு

செழிப்பான தளத்தில் விளைந்த சொற்கள் சங்க இலக்கியத்தில் அதிகம் உண்டு.

1. காங்கேயம் காளை 2. நெல்லூர் காளை 3. பொன்வார் காளை 4. தீவனக் காளை இது போன்ற 87 காளை மாடுகளின் வகைகள்

தமிழ்ச்சொல் வளம்

சொல்வளம் பண்பாட்டின் அடையாளமாக உள்ளது.

சொல்வளம் தனிச்சொற்களாக நிறைந்தோ, அல்லது ஒன்றிற்கு மேற்பட்டும் பிரியாதது.

கவவுக்கை நெகிழாமல் அதாவது கைக்குள் வைத்த கை பிரியாமல் முயங்கிக் கிடப்பதைப் போல் சொல்லுக்குள் சொல் பிரியாமல் இருப்பதைக் குறிக்கும்.

தொடரியல் போக்குகள்.

ஒலிக்கோலமும் சொற்புலமும் தமிழ் நிலத்தின் ஏர் எனில் சொற்றொடர் அதன் பாத்தியாகும்.

உரைநடையிலும் பேச்சிலும் எழுவாய் , செயப்படுபொருள் ,பயனிலை என்றே இயல்பாக மொழிநடை அமையும்.

ஆனால், சங்க இலக்கியத்தில் இது மாறி (பிறழ்ந்து) மறுதலைத் தொடராக வருகின்றது.

முடிவுரை

  நடையியல் என்பது சொல்வடிவமைப்புப் பகுதிகளின் முழுமையினைச் சார்ந்தே அமைகின்றது. தமிழ் அழகியல் கட்டமைப்பிற்கு சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம்.


2.பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

பாரதி யார்? 

இந்திய விடுதலையின் விடிவௌ;ளி,

தமிழ்க் கவிதை உலகின் அக்கினிப் பிழம்பு

புதுக்கவிதையின் தந்தை,

பெண்மை போற்றும் பெருந்தகை மகாகவி,

பரலி சு. நெல்லையப்பர் யார்?

விடுதலைப் போராட்ட வீரர். கவிஞர், எழுத்தாளர்,

இதழாளர் பாரதியின் படைப்புகளைப் பதிப்பித்தவர்,

பாரதியின் இதழ்களில் துணையாசிரியர் 

பாரதியின் அருமைத் தம்பி

பாரதியாரின் மொழிப்பற்று 

தமிழ் தமிழ் தமிழ் என்று எப்போதும் தமிழ் வளர்ப்பதையே கடமையாகக் கொள்ள வேண்டும்

இந்தி மராட்டி போன்ற வட நாட்டு மொழிகள் பெற்ற அற்புதமான புதுமை தமிழ்மொழியிலும் ஏற்பட வேண்டும்.

தமிழில் புதிய செய்தி புதிய புதிய சிந்தனை,புதிய உண்மை புதிய புதிய இன்பம் தமிழில்

உருவாகிக்கொண்டே போக வேண்டும்.

„தமிழ்நாடு வாழ்க... என்று எழுத வேண்டும்.

தமிழ் நாட்டில் வீதிதோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் அதிகம் பெருக வேண்டும்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கனிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுத வேண்டும்

பாரதியாரின் சமூகப் பற்று

„ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்... எனவும், அவை ஒன்றிலொன்று தாழ்ந்ததில்லை, என்றெழுத வேண்டும்.

„பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக்கொண்டான்... பெண்ணை அடைத்தவன் தன் கண்ணை அடைத்தான் என்று எழுத வேண்டும்

தொழில்கள் தொழில்கள் எங்கும் தொழில்கள் பெருகி தமிழ்நாடு வளர வேண்டும்

வியாபாரம் பெருகி யந்திரங்கள் உற்பத்தி பெருகி தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும்

இசை, சிற்பம், யந்திரநூல், ப+மிநூல், வானநூல்,இயற்கை நூல் போன்றவை தமிழ்நாட்டில் வளர வேண்டும்

3.குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது- எவ்வாறு? விளக்குக.

முன்னுரை

குடும்பம் என்பது சிறிய அமைப்பு.குடும்பத்திலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. சமூகத்தின் ஓர் அலகாக விளங்குவது குடும்பம் ஆகும்.

சமூகத்தின் படிநிலை

மனித சமூகம் குடும்பம் என்னும் அமைப்பில் தொடங்குகிறது.

குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை விரிவு பெறுகிறது. எனவே, குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படையாகும்.

திருமணம்

குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகின்றன.

„குடும்பு... என்னும் சொல்லுக்கு „கூடி வாழுதல்... என்று பொருள்.

மணந்தகம்

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழக் கூடிய இடம் மணந்தகம்.

முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது.

தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்

தாய்வழிக் குடும்பத்தில், பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்கள்.

எனவே, பெண் குழந்தைகள் பிறப்பதை அனைவரும் விரும்பினர்.

தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்து பெண்களுக்குச் சென்று சேர்ந்தது.

தனிக்குடும்பம்

தாய், தந்தை, குழந்தை மூவரும் உள்ள குடும்பம் தனிக்குடும்பம் ஆகும்.

தனிக்குடும்பம் தோன்றுவதற்கு முந்தைய நிலை தொடக்கநிலைக் குடும்பங்கள் ஆகும்.

தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிந்த குடும்பம்

சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.

கணவன், மனைவியுடன் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்ந்தனர்.

இத்தகைய குடும்பமுறை „விரிந்த குடும்பமுறை... எனப்படுகிறது.

இல்லற வாழ்வில் பயன்

கணவனும் மனைவியும் இணைந்திருந்து அறச் செயல்களில் ஈடுபட்டனர்.

அன்புமிக்க சுற்றத்தோடு சேர்ந்து வாழ்ந்தனர்.

இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் மனையறம் காத்தனர்.

மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாக கருதினர்.

முடிவுரை

சங்ககாலச் சமூகம், குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாக இருக்கின்றது. இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகும். 


4.பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.

முன்னுரை

  கம்பர் தன் காவியத்தில் இராமனைப் பண்பின் படிமமாகப் படைத்துள்ளார்.

 இராமன், அனைத்து உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பு கொண்டவனாகத் திகழ்கிறான்.

 இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையை இங்குக் காண்போம்.

வேடுவர் தலைவனுடன் கொண்ட உறவு

வேடுவர் தலைவன் குகன். இராமன், கங்கையைக் கடக்க குகன் உதவுகிறான்.

குகன், இராமனிடம் அளவுக் கடந்த அன்பு கொண்டிருந்தான்.

இராமன் இளவரசனாக இருந்தாலும், வேடனான குகனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டான்.

குகனைத் தன் உயிருக்கு இணையானவன் என்கிறான், இராமன்.

’என்உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான்”

சடாயுவைத் தந்தையாக ஏற்றல்

இராவணன் சீதையைச் சிறையெடுத்துச் செல்கிறான்.

சடாயு என்னும் கழுகு வேந்தன் இராவணனைத் தடுத்துச் சண்டையிட்டான்.

சண்டையில் காயப்பட்டு சடாயு இறந்து போகிறான்.

சடாயு, இராமனின் தந்தையான தசரதனின் நண்பன்.

எனவே, சடாயுவையும் தன் தந்தையாக எண்ணி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச்செய்கிறான்.

சவரியைத் தாயாக ஏற்றல்

இராமனிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தவள், சவரி.

இராமன் சீதையைத் தேடிச் சென்றபோது, சுக்ரீவனுடன் நட்புக் கொள்ள செய்தவள், சவரி.

இராமன், சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினாள்.

இராமனுக்கும் இலக்குவனுக்கும் விருந்தளித்து வழியனுப்பினாள், சவரி.

’வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்து இருந்த வேலை”

வானரத் தலைவன் சுக்ரீவன்

சீதையைத் தேடிவரும் இராமன், கிட்கிந்தையில் வானரத் தலைவன் சுக்ரீவனைக் காண்கிறான்.

சுக்ரீவன், இராமன் சீதையை மீட்டுவருவதற்குப் பெரும் உதவி செய்கிறான்.

இராமன், சுக்ரீவனைத் தன் உயிர் நண்பனாக ஏற்றுக் கொள்கிறான்.

’சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த் துணைவன் என்றான்.”

வீடணனை உடன்பிறந்தவனாகக் கொளல்

சீதையைக் கவர்ந்துச் சென்ற இராவணனின் தம்பி வீடணன்.

சீதையைக் கவர்ந்தது தவறு என்று வீடணன் இராவணனிடம் கூறுகின்றான்.

எனினும், இராவணன் அவன் பேச்சைக் கேட்க மறுத்துவிடுகிறான்.

வீடணன், இராமனிடம் வந்து அடைக்கலம் அடைந்தான்.

இராமன் அவனைத் தன் உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொண்டான்.

’அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்”

முடிவுரை

  இராமன் சிறந்த நண்பனாக, மகனாக, சகோதரனாக படைக்கப்பட்டுள்ளான்.

 மனிதர்களிடம் மற்றுமின்றி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டினான், இராமன்.

 எனவே, இராமன் பண்பின் படிமமாக விளங்குகின்றான்.


5. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.

ஈடில்லா உதவி

  தான் ஒருவருக்கு எந்த உதவியும் செய்யாத நிலையில், அவர் உதவி செய்வது சிறந்ததாகும். அவ்வாறு, உதவியவருக்கு விண்ணுலகையும் மண்ணுலகையும் கொடுத்தாலும் ஈடாகாது. ’செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது”

உலகைவிட பெரியது

 ஒருவர் உரிய காலத்தில் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலத்தைவிட பெரியதாகும்.

’காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது”

கடலைவிட பெரியது

 ஒருவர் எந்த பயனும் எதிர்பாராமல் செய்த உதவியை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிட மிகப் பெரியதாகும்.

 ’பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது”

உதவியின் அளவு

 ஒருவர் தினையளவு சிறிய உதவியைச் செய்தாலும்,

 அதன் பயனைத் தெரிந்தவர் பனையளவாகக் கொள்வார்.

’தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வார் பயன்தெரி வார்”

தீதும் நன்றும்

 ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறப்பது நன்றன்று.

 ஒருவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது நல்லது. 


6.சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.

முன்னுரை

  ஒருவரின் மனத்தில் உள்ள அன்பை அழிக்கக் கூடியது சினம் ஆகும்.

 எனவே, சினத்தைக் காத்திருப்பதே ஒருவரின் வாழ்வை மேன்மைப்படுத்தும்.சினத்தைக் காக்க வேண்டியதற்கான காரணத்தை முப்பால்வழி இங்கு காண்போம்.

சினம் காப்பவர்

ஒருவர் தன்னினும் வலிமைக்குன்றியவரிடம் சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருப்பவரே உண்மையில் சினம் காப்பவர் ஆவார்.

தன்னினும் வலிமையானவரிடம் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

 ’செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்

   காக்கின்என் காவாக்கால் என்?”

சினத்தின் விளைவு

ஒருவருக்குத் தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும்.

எனவே, யாரிடமும் சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

      ’மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

      பிறத்தல் அதனான் வரும்”

சினம் தரும் பகை

சினம் ஒருவரின் முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொன்றுவிடும்.

அத்தகைய சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

’நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற?”

தன்னையே கொல்லும் சினம்

ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் தடுக்க வேண்டும்.

அவ்வாறு தடுக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.

’தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.”

உறவினரை அழிக்கும் சினம்

சினம் தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பாகும்.

சினம் ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

’சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்”

முடிவுரை

 சினம் நம்மையே கொல்லும் கொடிய ஆயுதம் ஆகும்.எனவே, நாம் சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். சினத்தைக் காப்பதனால், உறவுகள் பெருகும் முகமலர்ச்சியும் அகமகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கை மேன்மை அடையும். எனவே, சினம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


7. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.

முன்னுரை

  உரைநடைக்கும் கவிதைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. சிலர் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் எழுதுகின்றனர். அவ்வாறு எழுதுகின்றவர்களுக்காக சுரதா கவிதை எழுதும் முறை பற்றிக் கூறுகின்றார்.

உரைநடை

உரைநடை என்பது எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.

எதுகை, மோனை போன்ற தொடைகள் இன்றி வரும். 

அடி வரையறையின்றி வரும்.

கவிதை எழுதும் முறை

சொற்கள் யாப்பிலக்கண நெறிகளுக்குட்பட்டு அமைவது கவிதை

எழுத்துகள் இணைந்து அசை தோன்றும். 

அசைகள் இணைந்து சீராகும்.

இரண்டு சீரின் இடைவெளியில் தளைகள் அமையும். 

தளைகள் சேர்ந்து அடிகள் தோன்றும்.

அடிகளில், எதுகை மோனை போன்ற தொடைகள் அமையும்.

தொடைகள் நல்ல முறையில் அமைந்திருந்தால் பாக்கள் சிறப்பாக இருக்கும். இதுவே, கவிதை எழுதும் நெறி ஆகும்.

கவிதையில் அமைய வேண்டியவை

இலக்கண நெறிகளுக்குட்பட்டு கவிதை இருக்க வேண்டும்.

சிறந்த முறையில் பாடல் இயற்றுபவர் புகழ் அடைவார்.

கவிதையில் அறக்கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துகள் இருக்க வேண்டும்.

முடிவுரை

  யாப்பிலக்கண நெறிகளை அறியாமலும் அறக்கருத்துகள் இன்றியும் சிலர் கவிதை எழுதுகின்றனர். அவ்வாறு கவிதை எழுதுபவர்கள், புகழை அடையமாட்டார்கள் என்கிறார் சுரதா.


8.பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத்தொகுத்தெழுதுக.

முன்னுரை

கல்விமுறை காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வருகிறது.பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான கற்றல், கற்பித்தல் முறையைப் பற்றி இங்கு காண்போம்.

கல்வித் தொடக்கம்

பிள்ளைகள் ஐந்து வயதில் கல்வி கற்கத் தொடங்கினர்.

கல்வி கற்க, பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசிரியரிடம் அடைக்கலமாகக் கொடுத்தனர்.

பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஏட்டில் மஞ்சள் ப+சி பையனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லுவார்கள்.

முறை வைப்பு

ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுப்பார்.

மாணவர்கள் ஆசிரியர் சொல்லுவதைப் பின்பற்றிச் சொல்லுவார்கள்.

இவ்வாறு ஆசிரியர் சொல்லுவதைத் திரும்பச் சொல்லுவது „முறை வைப்பு... எனப்படும்.

எழுத்துப் பயிற்சி

மாணவர்கள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள். 

முதலில், ஆசிரியர் தரையில் எழுதுவார்.

மாணவர்கள் ஆசிரியர் எழுதியதன்மேல் எழுதிப் பழகுவார்கள்.

ஓர் எழுத்து மற்றோர் எழுத்தின்மீது படாமல் எழுதினார்கள்.

மனனப் பயிற்சி

அடிப்படை நூல்களை மாணவர்கள் மனப்பாடம் (மனனம்) செய்தனர்.

தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் பாடமாக இருந்தன.

கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று போன்ற பலவகை வாய்பாடுகள் பாடமாக இருந்தன.

வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் ஏற்ற கணிதமுறை கற்பிக்கப்பட்டது.

வாதம் புரிதல்

கல்வியில், வாதம் செய்தல் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.

கல்வியில் சிறந்தவர்கள் அரசவையில் வாதம் செய்து, தம் கல்வித் திறமையை நிலைநாட்டினர்.

வாதம் செய்யும் பழக்கம் பள்ளிக்கூடத்திலிருந்தே தொடங்குகிறது.

ஆசிரியர் மாணவர் உறவு

தவறு செய்யும் மாணவர்களுக்குக் கொடிய தண்டனைகள் இல்லை.

ஆசிரியர்கள் மாணவர்களை அன்பால் வழிப்படுத்தினர்.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துக் கொண்டனர்.

முடிவுரை

 பண்டைய காலத்தில் ஆசிரியரும் மாணவரும் அன்பால் இணைந்திருந்தனர்.

9.கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன... - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.

கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன... - இது குறித்து என் கருத்து

என்னுரை

  இயற்கை எழில் கொஞ்சும், அமைதியான சூழலை உடையவை கிராமங்கள்.

 கிராமங்கள் தங்கள் பசுமையையும் இயற்கை எழிலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன. கிராமங்கள் தங்களின் அடையாளங்களை இழந்ததற்கான காரணங்களைப் பற்றி என் கருத்தை விவரிக்கின்றேன்.

வேளாண்மை பொய்த்தது

கிராமங்களின் தனிப்பெரும் அடையாளம் வேளாண்மை ஆகும்.

பசுமை புரட்சி என்ற பெயரில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக செயற்கை உரங்களை இட்டோம்.

அதன் விளைவு, மண் தன் தன்மையை இழந்தது. 

வேளாண்மை பொருட்களின் உற்பத்தி குறைந்தது.

போதுமான அளவு பருவ மழையும் பெய்யாததால் வேளாண்மை கடுமையாக பாதித்தது.

வேலையில்லா திண்டாட்டம்

கிராமங்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை

வேளாண்மை பொய்த்ததால், பலரும் வேலையில்லா நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வேலை தேடுவதற்காக கிராமங்களைவிட்டு, நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட செயல்படுத்தப்படவில்லை.

நகரமயமாதல்

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக உள்ளது.

எனவே, கிராமங்கள் அனைத்தும் நகரங்களாக மாறி வருகின்றன.

விளை நிலங்கள் யாவும் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகளும் தங்கள் வருவாய்க்காக வேறு வழியின்றி தங்கள் நிலங்களை விற்பனை செய்கின்றனர். 

முடிவுரை

கிராமங்கள் வெறும் வாழ்விடங்கள் இல்லை.கிராமங்கள் நம் பண்பாட்டின் அடையாளங்கள், இயற்கையின் அங்கங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.  ’இந்தியாவின் வளர்ச்சி என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வளர்ச்சி” என்ற காந்தியடிகளின் பொன்மொழியைப் பின்பற்றி வாழ வேண்டும்.

10.சென்னையில் உள்ள மயிலாப்ப+ர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?

முன்னுரை

  ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று கோவில். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு திருவிழா. சென்னை மாநகரில் மயிலாப்ப+ரும், கந்த கோட்டமும் பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களாகும். மயிலாப்ப+ரில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றியும், கந்த கோட்டத்தின் கோவிலைப் பற்றியும் செய்யுள் அடிகள்வழி காண்போம்.

மயிலாப்ப+ர்

திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய பெரிய ஊர் திருமயிலை

இளம்பெண்கள் ஆரவாரத்தோடு விழாக்களைக் கொண்டாடுவார்கள்.

திருமயிலையில் எழுச்சிமிக்க விழாக்கள் நடைபெறும்.

மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் இறைவன் வீற்றிருக்கிறான்.

மயிலையில் உள்ள இறைவனுக்குப் பங்குனி உத்திரத்தில் ஆரவாரத்தோடு திருவிழா நடைபெறும்.

கந்த கோட்டம்

அறம் செய்வோர் நிறைந்திருக்கும் நகரம் சென்னை

சென்னை கந்த கோட்டத்தில் எழுந்தருளி இருப்பவன் முருகன்.

குளிர்ந்த முகத்தை உடையவன் முருகன்

தூய மாணிக்க மணியைப் போன்றவன் முருகன்

முருகன் கோவில் கொண்டு அருள் வழங்கும் இடம் கந்த கோட்டம்.

11. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.

முன்னுரை

  உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் நூல் திருக்குறள்.அறிவுடைமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகள் வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பாதுகாப்பு அரண்

ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவே ஆகும்.

அறிவு, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணாகவும் உள்ளது.

தீமையிலிருந்து காக்கும்

மனத்தைத் தீயவழியில் செல்லவிடாமல்,  நல்லவழியில் செலுத்துவது அறிவு ஆகும்.

மெய்ப்பொருள் காட்டும்

எப்பொருளை யார் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக்கொள்ள செல்வது அறிவு ஆகும்.

உலகத்தோடு செல்க

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் செல்வதே அறிவாகும்.

எதிர்கொள்ளும் வலிமை

எதிர்காலத்தில் தனக்கு நேர இருப்பதை முன்கூட்டியே அறிந்துக் காத்துக்கொள்பவரே அறிவுடையவர்.

அறிவுடையவருக்கு அதிர்ச்சித் தரக்கூடிய துன்பம் எதுவும் ஏற்படாது.

முடிவுரை

 பாதுகாப்பு அரணாகவும் ,தீமையிலிருந்து காக்கும் கருவியாகவும் ,மெய்ப்பொருளைக் காட்டுவதாகவும் ,உலகத்தோடு செல்ல செய்வதாகவும்,துன்பத்தை எதிர்க்கொள்ளும் வலிமையைத் தரக்கூடியதாகவும் இருப்பது அறிவாகும்.அத்தகைய அறிவுடையவர் வாழ்வின் மிக உயர்ந்த நிலையை அடைவார் என்பதை வள்ளுவர் தன் குறள்வழி கூறுகின்றார்.

12. திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக.

முன்னுரை

  நீதி நூல்களில் சிறந்த நூலான திருக்குறளில் வாழ்வியலுக்கு நன்மை பயப்பன தீமை பயப்பன குறித்து எளிமையாக உணர்த்தப் பட்டுள்ளது. வாழ்வின் நன்மை தீமைகளை வள்ளுவன்வழி உள்ளதைப் படம்பிடித்துக் காட்டுவதற்காகவே இக்கட்டுரை.

தெய்வப்புலவர் திருவள்ளுவர்

வள்ளுவர் ஒரு தெய்வப் புலவர்.

வள்ளுவன்தன் வாழ்வில் கண்டு, கேட்டு, உண்டு, உற்றுணர்ந்த வாழ்வியல் சிறப்புகளைத் தௌ;ளத் தெளிவாக நமக்கு முப்பாலக் பிரித்து இரண்டடியில் உரைக்கின்றார்.

உலகில் தோன்றி நீதி நூல்களிலேயே தலை சிறந்தது உலகப்பொதுமறை எனலாம்.

வாழ்வியலுக்கு நன்மையும் தீமையும் பயப்பன

இல்வாழ்க்கை 

வாழ்க்கைத் துணை நலம் 

அறிவுடைமை 

வினைத்திட்பம்

செய்நன்றி அறிதல் 

வெஃகாமை 

வெகுளாமை 

சிற்றினம் சேராமை

கள் உண்ணாமை 

சு+து

வாழ்வியலுக்கு நன்மை பயப்பன

இல்வாழ்க்கை

அன்பும் அறமும் கொண்டு இல்வாழ்க்கையைப் பண்புடனும் பயனுடனும் நடத்த வேண்டும்.

அறத்தின் இயல்போடு, உலகில் வாழ்வேண்டிய நெறியோடு நின்று வாழ்பவர் வானுலகத்தில் உள்ளதெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவர்.

வாழ்க்கைத் துணை நலம்

வாழ்க்கைத் துணைவியான மனைவியைவிட உலகத்தில் ஓர் ஆண்மகனுக்குச் சிறந்த செல்வம் ஏதுமில்லை.

தன் கணவனையே தெய்வமெனவும் வீட்டையே கோயிலாகவும் போற்றும் பெண்கள் பெய்! என்றால் மழை பெய்யும்.

அறிவுடைமை

உலகத்தில் அழிவிலிருந்து காக்கும் பெருங்கருவி அறிவு. 

பகைவராலும் அழிக்கமுடியாத ஒன்றாகும்.

அறிவை அது போகும் போக்கில் செல்லவிடாமல் தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

எப்பொருளை யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

உலகம் எத்தகைய உயர்ந்த வழியில் செல்கின்றதோ அதே வழியில் செல்வதே அறிவுடைமை ஆகும்.

பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் திறமையே அறிவுடைமை ஆகும்.

வினைத்திட்பம்

நல்ல செயலுக்கு மன உறுதியே வேண்டும் மற்றவை எவையும் பயன்படாதவையே ஆகும்.

செய்நன்றி அறிதல்

தான் எந்த உதவியும் செய்யாத போது பிறர் நமக்குச் செய்யும் உதவிக்கு இந்த பூமியையும் அந்த வானத்தையும் கொடுத்தாலும் ஈடாகா.

ஒருவர் ஆபத்துக் காலத்தில் செய்த நன்றியை மறக்கக் கூடாது.

எந்தப்பயனையும் எதிர்பார்க்காமல் நமக்கு உதவி கடலைவிடப் பெரியது.

தினையளவு சிறிய உதவியை ஒருவர் செய்திருந்தாலும் அதை நாம் பெரிதாக நினைத்துப் போற்ற வேண்டும்.

ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறப்பது நல்லதன்று; அவர் செய்த தீமையை அன்றே மறப்பது நன்று.

ஆகவே எந்த நன்றியை நாம் மறந்தாலும் செய் நன்றியை ஒரு நாளும் மறக்கக் கூடாது. அதற்கு உய்வே இல்லை.

வாழ்வியலுக்குத் தீமை பயப்பன

வெ‡காமை

பிறர் பொருளுக்கு ஆசைபடக் கூடாது; அது நம்மிடம் உள்ள செல்வத்தையும் குறைத்து விடும்.

வெகுளாமை

கோபம் பேராபாத்தாகும். கோபத்தைக் காக்க வேண்டும் இல்லையேல் நம்மை நாமே கொல்வதற்குச் சமம்.

புலால் மறுத்தல்

பிற உயிர்களைக் கொன்று தின்று; தன் உயிரைக் காக்கக் கூடாது.

சிற்றினம் சேராமை

தீய பழக்கம் உடையவர்களிடம் நட்பு கூடாது;

நல்ல நண்பர்களைப்போன்ற உற்ற துணையும் நமக்கு என்றும் தேவை.

கள் உண்ணாமை 

மது உண்டு மயக்கத்தில் வாழ்வதென்பது; தானாகச் சென்று சாவதாகும்.

சு+து

சு+து, ஒருவருக்கு மனத் துன்பத்தை உருவாக்கி, அவருடைய புகழையையும் செல்வத்தையும் கெடுக்கும்.

முடிவுரை

 திருவள்ளுவர் உரைத்த குறட்பாக்களை ஆராயும்போது திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியமே என்பது புலனாகின்றது.


13.உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.


கதை மாந்தர்கள்

முத்தையன் - அண்ணன்ƒ 

வௌ;ளைச்சாமி - தம்பிƒ 

மூக்கம்மா - முத்தையாவின் மனைவிƒ 

பங்காரு சாமி -வட்டிக் கடைக்காரர்ƒ

என் கதையில் வரும் கதைமாந்தர்கள் - நண்பன் முத்துƒ நாட்டாமை நம்பிராசன்ƒ ஊர்ப் பொதுமக்கள்

சொல்வதன் நோக்கம்

’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு” என்னும் பாரதியின் பாடல்

„நிலத்தொடு ஒன்றிய எளிய மக்களின் உணர்வுகளின் மூலம் பிரதிபலிப்பதை மெய்ப்பிக்கவே சொல்கின்றேன்....

முன்கதை சுருக்கம்

முத்தையனுக்குத் தெரியாமல் அவன் தம்பி வௌ;ளைச்சாமி, தன் நிலத்தை வட்டிக்கடைக்காரர் பங்காரு சாமியிடம் இரண்டாண்டுகளுக்கு முன்பே அடமானம் வைத்துவிட்டான். 

வௌ;ளைச்சாமி முறையாக வட்டிக் கட்டியும் பங்காரு சாமி நிலத்தை அபகரிக்க முயன்றான். 

இதையறிந்த தம்பியின் மனைவி சண்டையிட்டதை, முத்தையனின் மனைவி மூக்கம்மா அவனிடம் சொன்னாள்.

தம்பியை வெறுத்த அண்ணன்.

இதைக் கேட்டு அண்ணன் முத்தையன் ’அவனுக்குத் தேவைதான்! அன்று நிலத்தை பாகம் போட்டபோது என்னவெல்லாம் பேசி என்னை அவமானப்படுத்தினான்?” என்று சொன்னான்.

உடனே அதைப் பேசும் நேரமில்லை இது எனக் கூறி முத்தையன் மனைவி அவனுக்கு உதவும்படி வேண்டினாள்.

’அப்பன் முகத்தை அவன் பார்த்திருப்பானா? ஆனால், நான் ஓர் அப்பனாக இருந்து அவனுக்குச் செய்த உதவியை அவன் மறந்து பேசிய நன்றிகெட்ட சொற்களுக்கு அவனுக்கு இதை தேவைதான்” என்று மனைவியிடம் சொல்லி தன் தம்பியை வெறுத்தான்.

அண்ணணிடம் சண்டையிட்ட தம்பி

இதையெல்லாம் வீட்டிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த தம்பி ”உன்னுடைய உதவியை நம்பி நானில்லை நான் அடகு வைத்த நிலத்தை, எப்படி மீட்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்”

’யாரையும் நம்பி நான் பிறக்க வில்லை நீயும் வேண்டாம் நீ கொடுத்த நிலமும் வேண்டாம் 

நீ எனக்கு உதவ வேண்டாம் உன் உறவும் வேண்டாம்” எனக் கூறிச் சண்டையிட்டு, அண்ணணை உதறித் தள்ளினான்.ஊர்ப் பொதுமக்கள் இவர்களைக் கண்டு ஏளனமாகப் பேசினார்கள்.

தம்பியின் நிலம் பறிபோனது

இந்தச் செய்தியெல்லாம் பங்காரு சாமியின் காதுகளுக்கு தேனாகப் போய்ச் சேர்ந்தது.

இதுதான் சமயம் எனக் கருதி கோயில்பட்டிக்குப் போய் வக்கிலிடம் நோட்டைக் கொடுத்து நோட்டீஸ் விட்டு பயமுறுத்தி வௌ;ளைச்சாமியின் நிலத்தை எழுதி வாங்க முற்பட்டார்.

அண்ணன் மீதிருந்த கோபத்தில் நிலத்தை பங்காரு சாமிக்கே எழுதிக் கொடுத்துவிட்டான் வௌ;ளைச்சாமி.

தம்பியின் குடும்பம் பிரிந்தது

தன் கணவன் வௌ;ளைச்சாமி செய்த மதிகெட்ட செயலை அறிந்து ”இனி உணவுக்கும் உறவுக்கும் உழைப்புக்கும் எங்கே இடம்?” எனக் கேட்டு அவனிடம் நாள்தோறும் சண்டையிட்டாள்.

பதிலுக்கு தம்பியும் சண்டையிட்டான் அவளை கடுமையாகக் கண்டிக்கவே, அவள்தன் தாய்வீடு நோக்கிப் புறப்பட்டுவிட்டாள். 

நண்பன் முத்தரசு அறிவுரை

நடந்ததைக் கேள்வியுற்ற முத்தையாவின் நண்பன் முத்தரசு மிகவும் மனம் வருந்தினான். 

நேரடியாக முத்தையாவின் வீட்டிற்கு வந்தான்.

’சிறியவன் தவறு செய்திருந்தால் நீதான் திருத்த வேண்டும் நீயே அவனை வெறுத்தால் எப்படி? தாய் தந்தை இல்லாதபோது தலைமகன்தான் வீட்டுக்குத் தந்தையாவான்? ஏன் இப்படி நடந்துகொண்டாய்? என்று அன்பாகக் கடிந்துகொண்டு அவனுக்கு இனிமேலாவது உதவிசெய் என்று அறிவுரை வழங்கினான்.

நாட்டாமை நம்பிராசன்

இவற்றை கேட்டுக்கொண்டே முத்தையன் வீட்டுக்கு உள்ளே நுழைந்த நாட்டாமை நம்பிராசனைக் கண்டவுடனே, முத்தையா, மூக்கம்மா, முத்தரசு மூவரும் எழுந்து வணங்கினார்கள்.

’நடந்ததைவையெல்லாம் கேள்விபட்டேன் தம்பி முத்தைய்யா”

’ஆற்றில் ஓடும்தண்ணீரை அடி அடியென அடித்தாலும் தண்ணீர் இரண்டாக உடையாது”

அண்ணன் தம்பி உறவுகளும் அப்படித்தான் என்ன ஆயிரம் சண்டை வந்தாலும் இரத்தபந்தம் இரண்டாகாது.

„ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்... என்பதுபோல் வீடு ரெண்டுபட்டதால் பங்காரு சாமிக்குக் கொண்டாட்டம் வந்துவிட்டது. இனி நீ தான் உன் தம்பியைக் காப்பாற்ற வேண்டும். என அறிவுரை வழங்கினார்.

உண்மையை உணர்ந்தான் முத்தையன்

ஒரே வாரத்தில் இவையெல்லாம் நடந்து, தம்பி வீடே இரண்டானது.

முத்தையன் சற்று அமர்ந்து சிந்தித்தான் ’ஐயோ அவன் சிறியவன், பெரிய மனம் வைத்து நாம் அவனுக்கு உதவியிருக்கலாமே” என்று மனம் வெதும்பினான்.

’நண்பர்களும் நாட்டாமையும் வந்து அறிவுரை வழங்கும் அளவுக்குத் தவறு செய்துவிட்டோமே” என்று மனம் வெதும்பினான் அண்ணன் முத்தையன்.

முடிவுரை

  ’ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழாமல் அன்பால் இணைந்து வாழ்வதே வாழ்க்கை” என்பதை இக்கதை நமக்கு நன்கு அறிவுறுத்தும் என்று நான் நம்புகின்றேன். 


14.மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.

முன்னுரை

  ஒரு வேளை சாப்பாட்டிற்காகவும் ஐந்து ரூபாய் பணத்திற்காகவும் சினிமா விளம்பரம் செய்த இளைஞன், பாலசந்திரன்.பாலசந்திரன் கேரள மாநிலம் சுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர். பாலசந்திரன், மகாநடிகரைக்(சிவாஜி கணேசனைக்) கண்டபோது ஏற்பட்ட மனவோட்டத்தை இங்கு காண்போம்.

முதல் சந்திப்பு

1986ஆம் ஆண்டு ஷருதுபேதம்... என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடைபெற்றது.

திரைப்பட நிகழ்ச்சிக்கு சிவாஜி கணேசன் தலைமை ஏற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில்தான் பாலசந்திரன் முதன்முறையான சிவாஜிகணேசனை நேரில் சந்தித்தார்.

சிவாஜி கணேசன் வீட்டில்

வி.பி.கெ. மேனன் எடுக்கும் படத்தில் சிவாஜி கணேசன் நடிக்க இருந்தார்.

படத்தின் திரைக்கதை ஜான்பால், இயக்குநர் ராஜீவ்நாத் திரைப்படம் குறித்து நேரில் பேசுவதற்காக ராஜீவ்நாத் சிவாஜி கணேசன் விட்டிற்குச் சென்றார். 

ராஜீவ்நாத்துடன் ஜான்பாலும் பாலசந்திரனும் சிவாஜி கணேசன்ிட்டிற்குச் சென்றனர்.

வீட்டின் தோற்றம்

சிவாஜி கணேசனின் வீடு ஓர் அரண்மனையைப்போல இருந்தது.

சிற்ப வேலைப்பாடுகள் செய்த மிகப் பெரிய கதவுகள். 

உள்ளே விசாலமான ஒரு தளம்.

தங்கத்தால் இழைத்த யானைத் தந்தங்கள் இரண்டு அழகிற்காக வைக்கப்பட்டிருந்தது.

இடப்புறத்தில் மேலே செல்ல, பெரிய மாடிப்படிகள்

சிவாஜியின் வேடங்கள்

மூவரும் மாடிப்படியில் ஏறி மேலே சென்றனர்.

படியின் ஒரு திருப்பத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் சிவாஜியின் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம் இருந்தது.

அதைக் கண்டதும், பாலசந்திரன் நடுங்கி, கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க போனார்.

உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி. 

மீசையை முறுக்கியபடி, ராஜராஜசோழன்.

பிரெஞ்சு அரசு வழங்கிய செவாலியர் விருதுடன் கூடிய வௌ;ளைக் குதிரை ஆகியவற்றைக் கண்டனர்.

சிவாஜியின் தோற்றம்

மூவரும் மேலே சென்று அமர்ந்திருந்தனர். 

சிவாஜி அவர்களைப் பார்க்க வந்துகொண்டிருந்தார்.

சிவாஜி மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வந்தார்.

சிவாஜியைக் கண்ட பாலசந்திரன் துள்ளி எழுந்தார்.

ராஜீவ்நாத்தும் பாலசந்திரனும் சிவாஜி காலில் விழுந்து வணங்கினர்.

முடிவுரை

  ராஜீவ் நாத்தும் சிவாஜியும் கதை குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

 பாலசந்திரன் சிவாஜியின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

 சிவாஜிகணேசனின் கதாபாத்திரங்கள் பாலசந்திரனின் மன அடுக்குகளில் ஒவ்வொன்றாகத் தோன்றிக் கொண்டிருந்தன.


15.உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.

முன்னுரை

 நான் எள் ஊர் திருவிழாவிற்குச் சென்றிருந்தபோது, திருவிழாவில் தெருக்கூத்து நடத்தப்பட்டது. தெருக்கூத்து கலைக்குழுவில் சுமார் 15 பேர் இடம்பெற்றிருந்தனர்.

 தெருக்கூத்துக் கலைக்குழுவின் தலைவராக இருந்தவர் காளீஸ்வரன் ஐயா.

 தெருக்கூத்துக் கலைஞர் காளீஸ்வரன் ஐயாவை நேரில் பார்த்த அனுபவத்தை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்பும் உபசரிப்பும்

ஒருமுறை கலைஞர் காளீஸ்வரன் ஐயாவைக் காண்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றேன்.

வீட்டிற்குச் சென்ற என்னை அவர் அன்போடு வரவேற்றார்.

பகல் வெயிலில் சென்றதால் எனக்கு குளிர்ந்த மோர் கொடுத்தார்.

அவர் கொடுத்த மோர், அமிழ்தம் போன்று இருந்தது.

பின்பு அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அவர் தன் வாழ்க்கை பாதையைப் பற்றி என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

பாரம்பரியமிக்க கலைக்குழு

காளீஸ்வரன் ஐயாவின் அப்பா, தாத்தா என்று பல தலைமுறைகளாக அந்த கலைக்குழுவை நடத்திவந்துள்ளனர்.

காளீஸ்வரன் ஐயா சிறுவயது முதலே தன் அப்பாவும் தாத்தாவும் தெருக்கூத்தில் நடிப்பதைப் பார்ப்பார்.

அப்பொழுதிலிருந்தே அவருக்கும் அக்கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டது.

திருவிழாக்களில், காளியம்மன் கதை, சுடலைமாடன் கதை, அரிச்சந்திரன் கதை போன்றவற்றைக் கூத்தாக நடித்துக் காட்டுவார்கள்.

கிராமப்புறங்களில் மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் இவர்கள் கூத்தை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

கனவும் ஆசையும்

சிறு வயதிலிருந்தே கலையின்மீது ஆர்வம் கொண்டிருந்த கலைஞர் காளீஸ்வரன் ஐயா தற்போது அறுபது வயதைக் கடந்துள்ளார்.

சுமார் 35 ஆண்டுகளாக அக்கலைக்குழுவைத் தலைமையேற்று நடத்திவருகின்றார்.

அவரிடம் உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டபோது,

’என் உடலில் உயிர் உள்ளவரை நான் இந்த கலையை நிகழ்த்தி மக்களை மகிழ்விக்க வேண்டும். என்

வருங்கால தலைமுறையினருக்கும் இந்த கலையைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.“ என்றார்.

முடிவுரை

  கலைகளைத் தன் உயிருக்கு இணையாக நினைத்து, அக்கலைக்காக தன் உயிர் உள்ளவரை பாடுபடுபவர்கள் கலைஞர்கள்.அத்தகைய கலைஞர் ஒருவரை நேரில் சந்தித்தது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.


16.சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது - விளக்குக.

முன்னுரை

  சங்ககாலத்தைப் பற்றி அறிவதற்குக் கல்வெட்டுகள் துணைநிற்பதை அறிந்தவர் ஐராவதம் மகாதேவன்.சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது என்பதைஇங்கு காண்போம்.

புகளூர்க் கல்வெட்டு

கரூர் மாவட்டம் புகளூரில் உள்ளது ஆறுநாட்டான் குன்று.

ஆறுநாட்டான் குன்றில் சேரல் இரும்பொறை மன்னரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் 1927-28ஆம் ஆண்டு ஓர் அறிக்கை வெளியிட்டது.

அவ்வறிக்கையில்தான் புகளூர்க் கல்வெட்டுப் பற்றிய செய்தி முதன்முறையாகக் கிடைக்கிறது.

அறிக்கையில் இருந்த செய்தி

ஆறுநாட்டான் குன்றிலுள்ள குகைகளுள் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

ஒரு கல்வெட்டில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டு இருந்தது.

அக்கல்வெட்டில் ஆதன் என்னும் சொல் இருந்துள்ளது.

எனவே, அது சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள்

தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் மிகச் சுருக்கமாக இருக்கும்.

ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்கள் மட்டுமே இருக்கும்.

ஆறுநாட்டான் குன்றில் இருந்த கல்வெட்டு, மிக நீளமான கல்வெட்டு.

சங்ககால வரலாறு

கல்வெட்டின் முதல் வரியில், ’யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாவது வரியில், ’கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்“ என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், „பெருங்கடுங்கோன்..., „இளங்கடுங்கோ..., „இளங்கோ... என்ற பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

இப்பெயர்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் மட்டுமே உள்ளன.

அக்கல்வெட்டு, சேரல் இரும்பொறை மன்னன் பொறித்தது.

சேரல் இரும்பொறை கரூவூரிலிருந்து ஆட்சி செய்த மன்னன்.

அக்கல்வெட்டுகள் ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

முடிவுரை

  சங்ககால வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு இலக்கியச் சான்றுகள் மட்டுமே கிடைத்திருந்தன.ஆனால், முதல்முறையாக புகளூர்க் கல்வெட்டில்தான் சங்ககால வரலாற்றைப் பற்றிய செய்தி கிடைத்துள்ளது.அவ்வகையில், புகளூர்க் கல்வெட்டு சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள மிகவும் துணைபுரிகின்றது.


CORRECTION  PDF WILL BE UPDATED SOON

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post