ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பிப்ரவரி 9 - 2022 பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பொதுத் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், மாணவர்கள் தங்களை பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக இந்த தேர்வுக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி எதிர் வரும் திருப்புதல் தேர்வில் அதிக பட்ச மதிப்பெண் பெற வேண்டுமாய் தமிழ் விதை வலைதளம் உங்களை வாழ்த்துகிறது.
மாணவர்கள் நினைவுத் திறனுக்கு சவால்:
மாணவர்கள் இயல் 2 க்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கற்றதை நினைவுக்கூர்தல் விதமாக கீழேக் கொடுக்கப்பட்டள்ள இந்த ஒரு மதிப்பெண் வினாக்களை இணைய வழித் தேர்வாக எழுதிக் பாருங்கள். இந்த தேர்வை நீங்கள் ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகள்
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
இயல்:2
1.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன்
குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர் ஆ) மழை மேகங்கள் இ) மழைத்துளிகள் ஈ) நீர்நிலைகள்
2.பகலும் இரவும் சந்திப்பது
அ) இரவு இ) வைகறை
ஈ) யாமம்
3.நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது,
அ) கரங்களால் பருகி ஆ) நீரில் மூழ்கி இ) உதடுகள் குவித்து ஈ) குவளையில் பிடித்து
4.அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள்
அ) இதழியல் துறை, திரைத்துறை ஆ) கல்வித்துறை, இதழியல் துறை
இ) இசைத்துறை,இதழியல் துறை ஈ) ஒளித்துறை, திரைத்துறை
5.பிறகொருநாள் கோடை என்னும் கவிதை எடுக்கப்பட்டதொகுப்பு
அ)
மழைக்குப் பிறகும் மழை ஆ) நானென்பது வேறொருவன்இ) நீர்வெளி ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்
6.அய்யப்ப மாதவனின் ‘இன்று” என்பது
அ)
கவிதைத் தொகுப்பு ஆ) கவிதைக் குறும்படம் இ) ஆவணப்படம் ஈ) புதினம்
7.தமிழில் திணைப்பாகுபாடு ................. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்புஇ) தொடா;க்குறிப்புஈ) எழுத்துக்குறிப்பு
8.உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அடீறிணை
என்மனார் அவரல பிறவே இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்
அ) நன்னூல் ஆ)
அகத்தியம் இ)
தொல்காப்பியம் ஈ) இலக்கண
விளக்கம்
9.யார், எது, ஆகிய வினாச்சொற்கள்
பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே
அ) அஃறிணை,
உயர்திணை ஆ) உயர்திணை, அஃறிணைஇ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
10.உலக மொழிகள் அனைத்திலும் ................. மிகுதி என்பர்
அ) பெயர்ச்சொற்களே ஆ) வினைச்சொற்களே இ) இடைச்சொற்களே ஈ) உரிச்சொற்களே