12TH - TAMIL ONE MARK - UNIT - 1

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பிப்ரவரி 9 - 2022 பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பொதுத் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், மாணவர்கள் தங்களை பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக இந்த தேர்வுக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி எதிர் வரும் திருப்புதல் தேர்வில் அதிக பட்ச மதிப்பெண் பெற வேண்டுமாய் தமிழ் விதை வலைதளம் உங்களை வாழ்த்துகிறது.

மாணவர்கள் நினைவுத் திறனுக்கு சவால்:

மாணவர்கள் இயல் 1 க்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கற்றதை நினைவுக்கூர்தல் விதமாக கீழேக் கொடுக்கப்பட்டள்ள இந்த ஒரு மதிப்பெண் வினாக்களை இணைய வழித் தேர்வாக எழுதிக் பாருங்கள். இந்த தேர்வை நீங்கள் ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.  

தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

இயல்:1

1.மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு கவிஞர் ,குறிப்பிடும் பழமைநலம்

க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது உ)  பொதிகையில் தோன்றியது ங)  வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி ஆ)  க, உ இரண்டும் சரிஇ) ங மட்டும் சரி   ஈ) க,ங  இரண்டும் சரி  

2.பொதிகை என்பது எந்த மலையைக் குறிக்கும்,

அ)  குற்றால மலை ஆ)  விந்திய மலை இ)  இமய மலை ஈ) சாமிமலை

3.சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றார்,   அ)  அக்கினி ஆ)  ஒளிப்பறவை இ)  அக்கினிசாட்சி ஈ)  சூரியநிழல்

4.கவிஞர்; சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது,

அ)  ஒரு கிராமத்தின் கதை  ஆ)  ஒரு கிராமமே அழுதது இ) ஒரு கிராமத்தின் நதி   

ஈ)  ஒரு புளியமரத்தின் கதை

5.செந்தமிழ் எந்தப் புணா;ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்,

அ)  ஈறுபோதல், இனமிகல் ஆ)  ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்  இ)  ஈறுபோதல், தன்னொற்றிரட்டல் ஈ)  ஈறுபோதல்

6.வியர்வை வெள்ளம் இலக்கணக் குறிப்புத் தருக

அ)  உவமையாகுபெயர்;   ஆ)  கருவியாகு பெயர்  இ)  உருவகம்  ஈ)  உவமை

7.இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்,

அ)  சூரிய காந்தி ஆ)  சூரிய பார்வை இ)  ஒளிப்பூ       ஈ) சூரிய நிழல்

8.இளந்தமிழே என்னும் பாடல் நூலின் ஆசிரியா;

அ) சிற்பி பாலசுப்பிரமணியம் ஆ) பெருந்தெவனார்இ) தமிழண்ணல் ஈ) மு. வரதராசனார்

9.பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்

அ) கோப்பெருந்தேவி   ஆ) வெண்மாள் இ) தமிழன்னை  ஈ) ஔவையார்

10............... முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை.

அ) சடையப்ப வள்ளல்         ஆ) சீதக்காதி                   இ) பாரி                         ஈ) நெடுங்கிள்ளி 

11.எம்மருமைச் செந்தமிழேஉன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ ? என்று பாடியவா;

அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) சிற்பி பாலசுப்பிரமணியம் ஈ) திரு. வி. க  

12.இளந்தமிழே என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை

அ) நேரிசை ஆசிரியப்பா    ஆ)  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இ) கலி விருத்தம்  ஈ)   எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

13.செம்பரிதி இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.

அ) ஈறுபோதல்   ஆ) இனமிகல் இ) ஆதிநீடல் ஈ) முன்நின்ற மெய்திரிதல்

14.உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே  என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.

அ) உன்னையல்லால்          ஆ) வானமெல்லாம்            இ) செந்தமிழே                  ஈ) செம்பரிதி

15.இளந்தமிழே என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில்

இடம்பெற்றுள்ளது,

அ) சூரிய நிழல் ஆ) ஒரு கிராமத்து நதி இ) ஒளிப்பறவை ஈ) நிலவுப்பூ

16.சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக

அ) கவிஞர் ஆ) ஓவியர்; இ) பேராசிரியார் ஈ) மொழிபெயர்ப்பாளர்

17.சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்

அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) தமிழ் ஈ) காமராசர்

18.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

அ)  யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்  இ)  தொல்காப்பியம் ஈ)  நன்னூல்

19.செய்யுளை ஓர் உள்ளமைப்பாகக் கூறும் நூல்

அ)  நன்னூல் ஆ)  தொல்காப்பியம் இ)  யாப்பருங்கலக்காரிகை ஈ) தண்டியலங்காரம்

20.காளைகளில் பல இனங்களைக் காட்டும் நூல்

அ)  தொல்காப்பியம் ஆ)  முல்லைக்கலி          இ)  புறநானூறு ஈ) பதிற்றுப்பத்து  

21.பாடலின் தளத்தைப் பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணியைச் செய்வது

அ)  தொடரியல் வடிவம்   ஆ)  ஒலிக்கோலம் இ)  சொற்றொடர் நிலை  ஈ)  சொற்புலம்

22.தமிழ்மொழியின் நடை அழகியல் என்னும் கட்டுரையின் ஆசிரியர்

அ) தி.சு. நடராசன் ஆ) ஔவை நடராசன் இ) சிற்பி பாலசுப்பிரமணியம் ஈ) தமிழண்ணல் 

23................. இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையின் இலக்கியங்கள்

படைக்கப்பட்டுள்ளன.

அ) தமிழில் ஆ) ஆங்கிலத்தில் இ) தெலுங்கில் ஈ) வடமொழியில்

24.மலரும் மணமும் போல கவிதையுடன் இரண்டறக் கலந்திருப்பது 

அ) தமிழர்களின் அழகுணர்வு ஆ) தலைவன் தலைவியின் அன்புணர்வு

 இ) வள்ளலின் வள்ளன்மையுணர்வு  ஈ) பக்தா;களின் தெய்வ உணர்வு

25.அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருவது 

அ) புராணம் ஆ) சங்க இலக்கியம் இ) கல்வெட்டு  ஈ) நாணயம்

26.அழகு என்பது ................ செய்தி.

அ) மனிதரின் ஆ) பேரண்டத்தின் இ) காதலரின்   ஈ) கடவுளரின்

27.அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருவது 

அ) தொல்காப்பியம் ஆ) சங்க இலக்கியம் இ) புராணம்  ஈ) மனிதநடத்தை  

28.இலக்கியத்தின் ............... பற்றித் தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு.

அ) நயம் ஆ) பயன் இ) நிலை  ஈ) ஈடுபாடு

29.அகன் ஐந்திணைகளைப் பேசுவது

அ) நன்னூல் ஆ) தண்டியலங்காரம் இ) தொல்காப்பியம் ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

30.அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்பஎன்று பாவகைகளோடு அறவியல் கருத்துகளை இணைத்துச்சொல்வது

அ) சங்க இலக்கியம் ஆ) பரிபாடல் இ) தொல்காப்பியம் ஈ) அகத்தியம்

31.கவிதையின் ................ நடை.

அ) இயங்காற்றல்தான்   ஆ) அழகுதான் இ) பார்வைதான் ஈ) இயல்புதான்

32.நடைபெற்றியலும் என்பது தொல்காப்பியத்தின ................ வரும் சொற்றொடா;.

அ) கிளவியாக்கத்தில்   ஆ) மொழியாக்கத்தில்  இ) எழுத்து அதிகாரத்தில்  ஈ) இவற்றில் எதுவுமில்லை

33.கடந்தடுதானை மூவிருங்கூடி என்று தொடங்கும் பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) அகநானூறு    ஆ) புறநானூறு    இ) கலித்தொகை ஈ) பரிபாடல்

34.புணரின் புணராது பொருளே" பொருள்வயின் பிரியின் புணராது புணா;வே- என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) புறநானூறு     ஆ)  நற்றிணை இ) அகநானூறு ஈ) கலித்தொகை

35.நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை?என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் 

அ) புறநானூறு ஆ)  நற்றிணை இ) அகநானூறு ஈ) கலித்தொகை

36................. கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

அ) குறிஞ்சிக் ஆ) முல்லைக் இ) மருதக் ஈ) பாலைக்

37.கிடை என்னும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்களைச் சொல்லி அழைப்பவர்

அ) இந்திரா பார்த்தசாரதி   ஆ)  கி. ராஜநாராயணன் இ) ஜெயகாந்தன் ஈ) ஜெயமோகன்

38.தொகைநிலை,தொகைமொழி பற்றிப் பேசும் தொல்காப்பியத்தின் இயல் 

அ) எச்சவியல் ஆ)  இடையியல் இ) உவமையியல் ஈ) எழுத்தியல்

39.நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கு, சர்ச்சைக்கு உள்ளானது பற்றிப் பாடியவர்

அ) பேரெயின் முறுவலார்  ஆ)  வௌ;ளைக்குடி நாகனார்இ) நரிவெரூஉத்தலையார்

ஈ) கோவூர்கிழார்

40.இடுக வொன்றோ, சுடுக வொன்றோ,படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே?என்ற புறநானூறு அடிகளில் குறிப்பிடப்படும் மன்னா;

அ) அறிவுடைநம்பி ஆ)  நம்பி நெடுஞ்செழியன்             இ) செங்குட்டுவன் ஈ) கிள்ளிவளவன்

41.தொடியுடைய தோள் மணந்தனன் எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் ஆசிரியா;

அ) பேரெயின் முறுவலார்  ஆ)  பொன்முடியார்இ) கோவு+ர்கிழார் ஈ) வௌ;ளைக்குடி நாகனார்

42.பேரெயின் முறுவலாரின் புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள பண்புகள்

அ) 16 ஆ)  18 இ) 15 ஈ) 14

43.தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் ................ முதன்மை ஆதாரம்.

அ) சங்க இலக்கியமே ஆ)  சங்கம் மருவிய இலக்கியமேஇ) நீதி இலக்கியமே ஈ) காப்பியமே

44.தமிழ் அழகியல் என்னும் நூலின் ஆசிரியா;

அ) தி.சு. நடராசன் ஆ) ஔவை நடராசன் இ) தமிழண்ணல்  ஈ) வல்லிக்கண்ணன் 

45................. கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவா;களில் தி. சு. நடராசன் குறிப்பிடத்தக்கவா;.

அ) திரைக் ஆ) திறனாய்வுக் இ) மொழிபெயா;ப்புக் ஈ) பேச்சுக்

46.தி.சு. நடராசன் ................ ஆகப் பணிபுரிந்தார்.

அ) மாவட்ட ஆட்சியர்         ஆ) பேராசிரியர்   இ) வழக்குரைஞர்  ஈ) மருத்துவர்

47.மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

தன்னேர் இலாத தமிழ்- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

அ)  அடிமோனை. அடி எதுகை ஆ)  சீர் மோனை, சீர் எதுகை இ)  அடி எதுகை. சீர் மோனை   

ஈ)  சீர் எதுகை, அடியோனை

48.அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்

அ)  முத்துவீரியம் ஆ)  வீரசோழியம் இ)  மாறனலங்காரம் ஈ)  இலக்கண விளக்கம்

49.கீழ்க்காண்பவற்றுள் வினையாலணையும் பெயா; எது,

அ)  உயர்ந்தோர் ஆ)  வந்தான் இ)  நடப்பான் ஈ)  உயர்ந்து

50.ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல் எச்சொல்லுக்குரிய புணா;ச்சி விதி,

அ)  கருங்குயில் ஆ)  வெங்கதிர் இ) நெடுந்தோ; ஈ)  முதுமரம்

51.தமிழ் தோன்றிய மலை

அ) குடகு ஆ) பொதிகை இ) இமயமலை ஈ) விந்தியமலை

52.காவியதர்சம் என்பது  

அ) வடமொழி இலக்கணநூல் ஆ) புராணநூல் இ) வரலாற்று நூல் ஈ) மலையாள லக்கிய நூல்

53.காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் 

அ) தண்டியலங்காரம்   ஆ) மாறனலங்காரம்இ) வீரசோழியம் ஈ) முத்துவீரியம் 

54.பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்

அ)  இளசைமணி ஆ)  ரா.அ. பத்மநாபன்         இ)  கி. ராஜநாராயணன்   ஈ)  கவிகேசரி சாமி தீட்சிதா;

55.பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்

அ) புதுச்சேரி, 19 ஜுலை 1915 ஆ) நெல்லை, 14 ஜுலை 1914 இ) கடலூர், 18 ஆகஸ!ட் 1914 ஈ) காரைக்கால், 19 ஜுலை 1915

56.நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி,

அ) சிவன் ஆ) முருகன் இ) பராசக்தி   ஈ) தூ;க்கை

57.வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது,

அ) சோழ மன்னா;களின் பரம்பரை வரலாறு ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு

இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவதுஈ) பாரதியின் வாழ்க்கை வரலாறு  

58.பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது,

அ) எட்டயபுரம் அரசருக்கு ஆ)  நெல்லையப்பருக்கு         இ) குத்திகேசவருக்கு         ஈ) சீனி. விசுவநாதனுக்கு 

இணைய வழித் தேர்வு


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post