ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9 முதல் திருப்புதல் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானாது பொதுத் தேர்வு அடிப்படையில் நடக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தேர்வினை மிகுந்த ஆவலோடும், பற்றுதலோடும் எதிர் நோக்கியுள்ளனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்ப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இந்த பாடத்திட்டத்தினை அறிந்து அந்தந்த தேர்வுக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தேர்வுக்கு எந்ததெந்த பகுதிகள் மிகவும் முக்கியமானது என உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு கூறியிருப்பார்கள். அந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் இந்த தேர்வில் அதிக பட்ச மதிப்பெண்ணை பெற வேண்டுமாய் தமிழ் விதை வலைதளம் உங்களை வாழ்த்துகிறது.
இந்த பதிவில் நீங்கள் காணவிருப்பது பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் எவ்வாறு அதிக பட்ச மதிப்பெண் பெறுவது? எப்படி தேர்வினை எதிர்க்கொள்வது? என தேர்வுக்குரிய அனைத்து பகுதிகளையும், மற்றும் தேர்வுக்குறித்த அச்சத்தையும் உங்களிடம் போக்க வருகிறார் முதுகலைத் தமிழாசிரியர், எழுத்தாளர், ஆசிரியர் செம்மல் திருமதி. கோ.மாலினி அவர்கள். இந்த காணொளியினைக் கண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் அதிக பட்ச மதிபெண் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வகுப்பில் 100 மாணவர்கள் மட்டுமே இணைய முடியும். இணைய இயலாத மாணவர்கள் இதே இணைப்பில் நேரடியாகவும் காணலாம்.
வகுப்பில் இணைய உங்களது கைப்பேசி/மடிக்கணினி இவற்றில் குவியம் (ZOOM ) செயலியை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குவியம் எண் ( ZOOM USER ID ): 668 085 2665
கடவு எண் ( PASSWORD ) : 123456
நேரலை....
பகுதி - 2