ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். நடந்து முடிந்த முதல் திருப்புதல் தேர்வானது வினாக்கள் எவ்வாறு கேட்கப்படும்? தேர்வினை மூன்று மணி நேரம் நம்மால் எழுத முடிந்ததா? அனைத்து வினாக்களுக்கும் நம்மால் விடையளிக்க முடிந்ததா? நேரம் போதுமானதாக இருந்ததா? விடைத்தாள் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டதா? பொது தேர்வுக்கான வழிகாட்டு முறைகள் சரியாக பின்பற்றப்பட்டதா? தேர்வுக்குறித்த பயம் நீங்கியதா? என அறிய வைக்கப்பட்ட தேர்வாக இது அமைந்தது. சில தேர்வுகளுக்கு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருந்தால் இந்த முறை வினாத்தாள் அவ்வாறு வெளியாகாது. மாணவர்கள் தங்களுக்கு வைக்கப்படும் தேர்வானது நாம் தேர்வில் எவ்வாறு எழுதப்போகிறோம்? எவ்வாறு நமது கற்றல் திறன் உள்ளது ? என்பதனை மதிப்பிடுவதற்கான அளவீடு தான். ஏனெனில் இரண்டு ஆண்டுகளாக எவ்வித தேர்வும் நடைபெறாமல் இருந்தது. இந்த முறை தான் நீங்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதப் போகிறீர்கள். அதனால் மாணவர்களாகிய நீங்கள் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் நாம் அதனைப் படித்து விட்டு எழுதலாம் என எண்ணாமல். தாம் எவ்வளவு தூரம் அந்த பாடப்பகுதியினை கற்று வைத்துள்ளோம் என்பதனை நமக்கு நாமே தெரிந்துக் கொள்வதற்காக இந்த வினாத்தாளினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறைக்கப்பட்டப் பாடப்பகுதிகள் இருப்பதால் பாடங்கள் வெகு குறைவாக தான் உள்ளன. மாணவர்கள் அந்த பாடப்பகுதியினை கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கும் போது நாம் தேர்வுக்குறித்தோ ? வினாத்தாள் தன்மைக் குறித்தோ பயப்படத் தேவையில்லை. நாம் கற்றதை தெளிவுற எழுத அந்த வினாத்தாள் ஒரு பயன்பாட்டுக் கருவியாக இருக்கும். இந்த இரு ( முதல் திருப்புதல் தேர்வு,இரண்டாம் திருப்புதல் தேர்வு ) வினாத்தாள்கள், தமிழ்விதையின் மாதிரி வினாத்தாள்கள், உங்கள் பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கும் மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள். அதே வினாக்களை மீண்டும் மீண்டும் எழுதி எழுதிப் பாருங்கள். விடைகளை உங்களது சொந்த நடையில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, ஒற்றுப்பிழை,வாக்கியப்பிழை இல்லாமல் எழுதுங்கள். பாடங்களை புரிந்துக் கொண்டு அதன் பொருண்மையின் அடிப்படையில் வினாக்களுக்கு விடைகள் எழுதுங்கள். நிச்சயமாக நீங்கள் அடைய வேண்டிய மதிப்பெண்ணை பெறுவீர்கள். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம் எனபது போல், நாள் தோறும் வினாக்களுக்கு விடை எழுத பயிற்சி பெறுங்கள். ஏனெனில் உங்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு உண்டு.அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த புதிய பாடத்திட்டத்தில் முதன் முதலாக பொதுத் தேர்வு எழுதக்கூடிய பள்ளி மாணவர்கள் நீங்கள் தான். எனவே மாணவர்களே நீங்கள் இது வரை படிக்கவில்லையென்றாலும் இனியாவது படிக்க ஆரம்பியுங்கள். உங்களின் ஆர்வமும் முயற்சியும் உங்களை பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்ணை பெற வைக்கும் என்பது திண்ணம். நீங்கள் வருகிற இரண்டாம் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வில் மிக அதிகப்பட்ச மதிப்பெண் பெற வேண்டுமாய் தமிழ் விதை வலைதளம் உங்களை மனதார வாழ்த்துகிறது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் தங்களுக்குத் தேவையான கற்றல் வளங்களை கீழ்க்கண்ட இணைப்புகள் மூலம் பெற்று கற்றலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கற்றலுக்கான தேடல் இந்த வலைதளம் மூலம் கிடைக்கும்.
தமிழ் - கற்றல் வளங்கள் - CLICK HERE
இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் -2022
பாடப்பகுதிகள்
இயல் - 4
அ. பெருமாள் திருமொழி
ஆ. இலக்கணம் - பொது
இயல் - 5
அ. நீதி வெண்பா
ஆ. வினா - விடை வகைகள், பொருள்கோள்
இயல் - 6
அ. கம்பராமாயணம்
ஆ. அகப்பொருள் இலக்கணம்
இ. திருக்குறள்
இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குகான மாதிரி வினாத்தாள் பெற