பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி வினாத்தாள் -1
இரண்டாம் திருப்புதல் தேர்வு
மார்ச் – 2022
நேரம் : 15 நிமிடங்கள் + 3
மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 100
பகுதி - 1
அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 15 × 1 = 15
1 ) குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
2 ) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத்
“ தென்னந்தோட்டம்” என்று கூறுதல் எவ்வகையான வழு?
அ
) வினா வழு ஆ)
விடை வழு இ ) மரபு வழு ஈ ) கால வழு
3 ) குரலில் இருந்து பேச்சு எனில்,
விரலில் இருந்து _______________
அ
) சோறு ஆ ) எழுத்து இ ) பேச்சு ஈ ) கற்றல்
4 ) செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி
அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராக கொண்டு பொருள் கொள்ளுதல் _______________
அ
) நேர் நிறைப் பொருள்கோள் ஆ ) ஆற்று நீர் பொருள் கோள்
இ
) எதிர் நிரல் நிறைப் பொருள் கோள் ஈ ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
5 ) தூவல் – என்பதன்
பொருள் யாது?
அ ) சொற்கோவை ஆ ) மயக்கம் இ ) திருமணம் ஈ
) எழுதும் இறகு
6 ) அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________
அ) அருமை + துணை ஆ) அரு + துணை
இ) அருமை + இணை ஈ) அரு + இணை
7 ) பார் – என்னும்
வேர்ச்சொல்லைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயரெச்சத் தொடரைக் காண்க.
அ
) பார்த்த விழி ஆ )
பார்த்தாள் இ ) பார்த்துச் சென்றாள் ஈ ) பார் மகளே
8 ) கம்பரை ஆதரித்தவர்
_____________
அ ) சொக்கநாதன் ஆ ) சடையப்ப வள்ளல்
இ ) குலசேகரர் ஈ ) குலோத்துங்கன்
9 ) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம்
___________
அ ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ ) அங்கு வறுமை இல்லாததால்
10 ) பிற்பகல் 2 மணி முதல் 6 மணி
வரைக்குமான சிறு பொழுது ___________
அ
) நண்பகல் ஆ ) யாமம் இ ) எற்பாடு ஈ )
மாலை
11 ) இவற்றில் எது கூரான ஆயுதம்
என திருவள்ளுவர் கூறுகிறார்?
அ
) பெரிய கத்தி ஆ ) இரும்பு ஈட்டி
இ
) உழைத்ததால் கிடைத்த ஊதியம் ஈ ) வில்லும் அம்பும்
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு ( வினா எண்கள் 12 , 13 , 14 , 15 ) விடை தருக.
ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ
தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றே
ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ
12 ) இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது ?
அ
) கனிச்சாறு ஆ ) காற்றே வா
இ
) சிலப்பதிகாரம் ஈ )
கம்பராமாயணம்
13 ) இப்பாடலின்
ஆசிரியர் யார் ?
அ
) இளங்கோவடிகள் ஆ ) கம்பர்
இ
) பெருஞ்சித்திரனார் ஈ ) கண்ணதாசன்
14 ) நெடுந்திரை -
இலக்கணக்குறிப்புத் தருக.
அ
) எண்ணும்மை ஆ ) பண்புத்தொகை
இ
) வினைத்தொகை ஈ ) வினை முற்று
15 )வேடன் என குறிப்பிடப்படுபவர்
யார்?
அ. கம்பர் ஆ. இராமன் இ) இலக்குவன் ஈ)
குகன்
பகுதி - II ( மதிப்பெண்கள் - 18
)
பிரிவு - I
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21 - வது
வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
( 4 × 2
= 8 )
16 ) விடைக்கேற்ற
வினாக்கள் அமைக்க.
அ
) தமிழர் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக
இருக்கிறார்கள்.
ஆ
) ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.
17 ) கா.ப.செய்குதம்பி பாவலர் “ சதாவதானி “ என்ற
பட்டம் பெற்ற நிகழ்வினை எழுதுக.
18 ) நாலாயிர
திவ்விய பிரபந்தம் – நூற் குறிப்பு தருக.
19 ) உறங்குகின்ற
கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்பிகிறாரகள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
20 ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யிலைக் கொண்டு ஒரு நாட்டின்பெருமையை கம்பர் எவ்வாறு புலப்படுத்துகிறார்?
21 ) ஒருவரை மதிப்புடையவராகச் செய்வது செல்வம் அது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை என்பதனை உணர்த்தும் குறளை எழுதுக.
பிரிவு - II
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகியவிடையளிக்க. 5 × 2 = 10
22 ) தொடரில்
விடுபட்டுள்ள வண்ணங்களை குறிக்கும் சொற்களை உங்கள் எண்ணங்களால் நிரப்புக.
அ.
________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
ஆ.
வெயில் அலையாதே; உடல் ____________
23 ) இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ இருக்கிறது ! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளையும்,
விடையின் வகைகளையும் எடுத்தெழுதுக.
24 ) கலைச்சொல் அறிவோம் - அ ) THESIS - ஆ ) TERMINOLOGY -
25 ) தொழிற்பெயர்களின் பொருளை புரிந்துக்
கொண்டு தொடர்களை முழுமை செய்க.
அ. பசுமையான ______ ஐக் _________ கண்ணுக்கு
நல்லது ( காணுதல்/காட்சி )
ஆ. காட்டு விலங்குகளைச் _________ தடை செய்யப்பட்டுள்ளது.செய்த தவறுகளைச் ___________திருத்த உதவுகிறது. ( சுட்டல் /சுடுதல்
26 ) தொடர்களை
அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ. தந்தை,” மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா” என்று சொன்னார் (ஆண்பாற் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடர் அமைக்க ).
ஆ. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. ( படர்க்கையை முன்னிலையாக,முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றி தொடர் அமைக்க )
27 ) தொடர்களில் உள்ள எழுவாயைச்
செழுமை செய்க.
அ.
கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் ஆ. குழந்தைகள் தனித் தனியே எழுதித் தர
வேண்டும்
28 ) காட்டில் விளைந்த வரகில் சமைத்த
உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும்.
இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை
வகைப்படுத்தி எழுதுக.
பகுதி - 3 - சிறுவினா 2 × 3 = 6
பிரிவு - I
29) பலரிடம் உதவி பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
30 ) கம்பராமாயணம் பற்றியும் ,கம்பர்
குறித்தும் எழுதுக
31 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக .
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள்
கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப்
பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து
மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து
திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன்
வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி
உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள்
வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
பிரிவு - 2 2
× 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க.
வினா எண் 34 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
32 ) மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
33 ) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர்
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை
எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
34 ) “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும்
நீதி வெண்பா -பாடலை எழுதுக.
( அல்லது )
இராமனின் வடிவழகினை வருணிக்கும் கம்பரின்
பாடலை எழுதுக.
பிரிவு - 3 2
× 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க.
35 ) முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் – இக்குறட்பாவில்
அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
36 ) செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
- அலகிட்டு வாய்ப்பாடு தருக.
37 ) “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்
தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில்
பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின்
திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும்
எழுதுக.
பகுதி - IV 5 × 5 = 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
38 ) அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட....... இவ்வுரையைத் தொடர்க.
( அல்லது )
ஆ) தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும்
உள்ள தொடர்பினை குறித்து எழுதுக
39 ) அ. பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில்
படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான
மதிப்புரை எழுதுக.
குறிப்பு ; நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள்
– மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் –
நூலின் கட்டமைப்பு – சிறப்புக்கூறு
– நூல் ஆசிரியர்
( அல்லது )
ஆ. பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் – என்பது குறித்த செயல் திட்ட வரைவினை
உருவாக்குக.
40 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக .
41 ) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அறிவழகனின் 23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்துபோட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் காமராஜர் நகர், பாரதியார் தெருவில், 51 வது இலக்க எண்ணில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேரவிரும்புகிறார். திரு.சுந்தர வடிவேலு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு பிணைப்பாளராக கையொப்பமிடுகிறார். தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.
42 ) பள்ளியிலும்,
வீட்டிலும் நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து அட்டவணைப்படுத்தி எழுதுக.
அல்லது
மொழி பெயர்க்க.
Malar: Devi,switch off the lights when you leave the room
Devi : Yeah! We have to save electricity
Malar
: Our nation spends a lot of electricity for lighting
up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch artificial moons to light
our night time sky!
Malar: I have read some other countries are going to launch these types of
illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster
relief by beaming light on areas that lost power!
பகுதி - 5 3 × 8 = 24
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
43 ) அ ) கம்பராமாயணத்தில் உமது பாடப்பகுதியில் உள்ள பாலகாண்டம் – நாட்டுப்படலம் மற்றும் அயோத்தியா காண்டம் பாடல் கருத்துகளைத் தொகுத்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.
( அல்லது )
ஆ) நிலாவையும் வானத்து மீனையும்
காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும்
அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும்
மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின்
கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? -
பாரதியார்
பாடலில்
காணப்படும் நயங்களைப் பாராட்டி உரை செய்க.
44 ) அ) கம்பராமாயணக்
கதை மாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து ஒரு பக்க அளவில் எழுதுக.
(அல்லது)
ஆ) எதிர்காலத்தில் நீ பயில விரும்பும் கல்விக் குறித்தும், அதன் பயன் குறித்தும், அக்கல்வியினால் சமூகத்தில் எவ்வகையிலான பங்களிப்பு அளிக்க முடியும்? என்பது குறித்து கட்டுரை வரைக.
45 ) அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
(அல்லது)
ஆ) அமைச்சு, பொருள் செயல் வகை, பகை மாட்சி, குடி செயல் வகை, கயமை என்ற அதிகாரங்கள் வழியே வான்புகழ் வள்ளுவர் கூறும் அறக் கருத்துகள் இன்றைய வாழ்வியல் சூழலோடு எவ்வாறு இணைந்துள்ளது என்பது குறித்து கட்டுரை வரைக.
குறிப்பு : அரசு வழங்கிய குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த வினாத்தாள் உருவாக்கப்பட்டது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாளினை ஒரு பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளவும். இதிலிருந்து வினாக்கள் வரும் என எதிர்ப்பார்க்க வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது என மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்களை அரசு வழங்கிய பாடத்திட்டத்தினை மீள்பார்வை செய்துக் கொள்ளவும்.
நன்றி,
தமிழ்விதை
மேலும்
வினாத்தாள் தொடர்பான சந்தேகங்களுக்கு…….
மின்னஞ்சல்
முகவரி : thamizhvithai@gmail.com
புலன
எண் : 8695617154
மேலும்
கற்றல் வளங்களுக்கு : www.tamilvithai.com
நெடுந்திரை இலக்கண குறிப்பு
ReplyDelete