ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9 முதல் , முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அனைவரும் அனைத்து தேர்வுகளிலும் அதிக பட்ச மதிப்பெண் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மேலும் மாணவர்கள் எல்லோரும் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் மிகப் புலமைப்பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு அந்ததந்த பாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் குழு செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த இணையப் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு அனைவரும் அதிக பட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். 15-02-2022 அன்று நடைபெற உள்ள சமூக அறிவியல் திருப்புதல் தேர்வுக்கு பயிற்சி அளிக்க இன்று 14-02-2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இன்று நடைபெற உள்ள சமூக அறிவியல் இணைய வகுப்பு ZOOM வழியாக நடைபெறும். மேலும் மாணவர்கள் இந்த இணைய வகுப்பினை நேரடியாக தமிழ்விதை YOUTUBE CHANNEL வழியாகவும் காணலாம். மாணவர்கள் இந்த இணைய வகுப்பின் ID மற்றும் PASSCODE சரியான முறையில் தட்டச்சு செய்து வகுப்பில் இணையும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.