கணிதம் கற்போம்,கற்பிப்போம்
குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற ஒரு வழிகாட்டிக் காணொளி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம். பிப்ரவரி 9 - 2022 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது என்பதனை நீங்கள் அறிந்த ஒன்று. கடந்த இரு நாட்களாக பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் எவ்வாறு அதிக பட்ச மதிப்பெண் பெறுவது? தேர்வினை பயமில்லாமல் எவ்வாறு எதிர்க்கொள்வது? வினாத்தாளில் எதிர் நோக்கும் முக்கிய வினாக்கள் எவை எவை? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்துக் கொண்டனர். பத்தாம் வகுப்பு கணிதப் பாடம் தேர்வெழுத இருக்கும் மாணவர்கள் 10-02-2022 அன்று மாலை நடைபெறும் இணைய வகுப்பில் திருப்புதல் தேர்வில் இடம் பெறக்கூடிய முக்கிய வினாக்கள், அதிகபட்ச மதிப்பெண் பெற ஆலோசனைகள், பயமில்லாமல் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுக் குறித்த கருத்துகளை இணைய வகுப்பில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தினை நீங்கள் கேட்டு தெளிவாக்கிக் கொள்ளலாம்.
வகுப்பினை வழங்குபவர்.