பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். 09-02-2022
முதல் நடைபெற உள்ள பத்தாம்
வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள்
பொதுத் தேர்வுக்கு திருத்தப்படும் முறையில் பள்ளி அளவில் மாற்றித் திருத்தப்படும்
என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் பொதுத்
தேர்வுக்கு தங்களை பயமில்லாமல் தேர்வு எழுத வைக்க கையாளப்படும் முறையாக
கருதப்படுகிறது. பொதுத் தேர்வுக்கு விடைத்தாட்களை மாவட்ட அளவில் மாற்றி
திருத்தப்படும். ஆனால் இந்த கொரணாவால் கடந்த இரு ஆண்டுகளாக எவ்விதத் தேர்வும்
பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படவில்லை. அதனால் முதல் மற்றும் இரண்டாம்
திருப்புதல் தேர்வு மாநிலம் தழுவிய வினாத்தாள் அமைப்பை அரசு தேர்வுத் துறை வழியாக
வினாத்தாள் அச்சிடப்பட்டு அவை பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு,பொது தேர்வு நடைமுறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிந்து அந்த விடைத்தாட்களை என்ன செய்ய வேண்டும்
என்றும் அதற்கான படிவங்கள் எவை எவை வைக்க வேண்டும்? என தெளிவான விளக்கத்தை பள்ளிக்கல்வித் துறையானது முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக
அனுப்பப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவங்கள் இங்கு
கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த படிவங்களை நீங்கள் ஒவ்வொரு
தேர்வு முடிந்தப் பின்பும் விடைத்தாட் கட்டுகளுடன் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த
படிவங்கள் நமது வலைதளத்தில் பக்க அளவுகள் சரி செய்யப்பட்டு இங்கு
கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இந்த படிவங்களை
பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
( குறிப்பு :
விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் மாணவர்கள் தங்கள் பெயரையோ,பள்ளிப் பெயரையோ குறிப்பிடக்கூடாது. பள்ளி முத்திரைகள்
பயன்படுத்தக் கூடாது. )
மாணவர்கள் தங்கள் கைப்பட விடைத்தாளில் எழுத வேண்டிய விவரங்கள்
( இதனை ஒவ்வொருத் தேர்வு அறையிலும் ஒட்டி வைத்து விடுங்கள், அந்தந்த தேர்வு நாளன்று மாணவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்துக் கொள்ள
ஏதுவாக இருக்கும் )
PDF - FORMAT
10ஆம் / 12ஆம் வகுப்பு – முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள் கட்டுகள்
பாட வாரியாக
ஒப்படைப்பு படிவம் - PDF
50 விடைத்தாட்கள் கொண்ட பிரவுன் கவர் கட்டின் மீது ஒட்ட வேண்டிய படிவம்
PDF - FORMAT
CLICK HERE TO DOWNLOAD ( SALEM DT )
CLICK HERE TO DOWNLOAD ( OTHER DIST)
விடைத்தாட்கள் கட்டுகளுடன் இணைத்து 3 மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்க வேண்டும். அதற்கான மதிப்பெண்
பட்டியல்