நாள் : 01-02-2022 முதல் 05-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தமிழ் மொழி வாழ்த்து
2. தமிழ் வரி வடிவ வளர்ச்சி
கருபொருள் :
Ø செய்யுளின்
நயங்களை அறிதல்.
Ø தமிழ்
எழுத்துகளின் வளர்ச்சி நிலையை அறிதல்
உட்பொருள் :
Ø செய்யுளின்
குறிப்புகள் அறிதல்
Ø ஆசிரியர்
குறிப்பு அறிதல்
Ø செய்யுளில்
காணப்படும் நயங்களை அறிதல்
Ø தமிழ்
எழுத்துகளின் வளர்ச்சி நிலையை அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, தமிழ் வரி வடிவ வளர்ச்சி நிலை ( புத்தகம் – PDF)
கற்றல் விளைவுகள் :
Ø செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளின்
பொருள் உணர்தல்
Ø தாம்
படித்தவற்றில் உள்ள நயங்களை எடுத்துரைத்தல்
Ø தமிழ்
எழுத்தின் வரி வடிவங்களினை அறிந்து தெளிதல்
Ø தற்காலத்தில்
பயன்படுத்தப்படும் முறையான எழுத்து வடிவங்களை பத்திரிக்கைகள், இதழ்கள்,கட்டுரைகள் போன்றவற்றில்
அடையாளம் காணுதல்
ஆர்வமூட்டல் :
Ø தமிழ்
சொல் விளையாட்டு மூலம் பாடப்பொருளை ஆர்வ மூட்டல்
Ø தமிழ்
வரி வடிவ வளர்ச்சியின் தொகுப்பினைக் காண்பித்து அறிமுகம் செய்தல்
படித்தல் :
Ø செய்யுளினை சீர்ப் பிரித்து
படித்தல்
Ø செய்யுளினை இனிய ஓசையில்
இராகமாகப் பாடுதல்
Ø உரை நடைப் பகுதியினை
நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம்
காணுதல்
நினைவு வரைபடம் :
தமிழ்
மொழி வாழ்த்து
தமிழ்
வரி வரிவ வளர்ச்சி
தொகுத்து வழங்குதல் :
தமிழ் மொழி
வாழ்த்து
Ø ஆசிரியர் : சி. சுப்ரமணிய
பாரதியார்
Ø பன்முக ஆற்றல் : கவிஞர்,
எழுத்தாளர்,சிந்தனையாளர்,இதழாளர்,சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட
வீரர்
Ø பாராட்டுப் பெயர்கள்: சிந்துக்கு தந்தை
·
செந்தமிழ்த்
தேனீ
·
புதிய
அறம் பாட வந்த அறிஞன்
·
மறம்
பாட வந்த மறவன்
Ø நடத்திய இதழ்கள் : இந்தியா, விஜயா
Ø தமிழ் மொழி எக்காலத்துக்கும்
நிலைபெற்று வாழ்க
Ø ஏழ்கடல்களால் சூழப்பட்ட
நிலப்பகுதி முழுவதும் தமிழ் மொழி வாழ்க
Ø எங்கும் சூழ்ந்துள்ள
அறியாமை இருள் நீங்க தமிழ் மொழி வாழ்க
Ø வானம் உள்ள வரை எல்லாப்
பொருண்மைகளை அறிந்து மென்மேலும் தமிழ் மொழி வாழ்க.
Ø நயங்கள் : எதுகை, மோனை,
இயைபு
Ø ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து
என உருவான நிலை ஒலி எழுத்து
Ø அச்சுக்கலை தோன்றிய பிறகு
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
Ø கல்வெட்டுகள் பொ.ஆ.மு.
மூன்றாம் நூற்றாண்டு முதல் ,கிடைக்கின்றன
Ø செப்பேடுகள் பொ.ஆ. 7
ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
Ø பாறைகளில் வளைகோடுகளைப்
பயன்படுத்த முடியாது.
Ø வட்டெழுத்து, தமிழ் எழுத்து,
கண்ணெழுத்து
Ø தமிழ் எழுத்துகளில் சீர்
திருத்தம் செய்தவர்கள் : 1. வீரமா முனிவர், 2. பெரியார்
வலுவூட்டல் :
Ø தமிழ் மொழியின் சிறப்புகளைக்
கூறி வலுவூட்டல்
Ø செய்யுளில் உள்ள நயங்களைக்
கூறி வலுவூட்டல்\
Ø தமிழ் வரி வடிவ வளர்ச்சி
நிலையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு வலுவூட்டல்.
Ø தமிழ் இன்று கணினி வழியாகவும்
உள்ளதைக் கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø பாரதியார் நடத்திய இதழ்கள்
___________, _____________
Ø தமிழ் எங்கு நிலைக் கொண்டு
வாழ்கிறது?
Ø செய்யுளில் உள்ள எதுகை,
மோனை, இயைபு நயங்களைக் கூறுக.
Ø பாரதியாரை செந்தமிழ்த்
தேனீ எனப் புகழ்ந்தவர் யார்?
Ø ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து
என உருவான நிலை ___________
Ø செப்பேடுகள் எந்த நூற்றாண்டு
முதல் கிடைக்கின்றன?
Ø பாறைகளில் எவ்வகையிலான
எழுத்துகளை எழுத முடியாது?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.
Ø எதுகை நயம் அறிதல், மோனை நயம் அறிதல், இயைபு நயம்
அறிதல்
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
தொடர் பணி :
Ø மாணவர்கள் தமிழ்மொழியைப் போற்றக் கூடிய வேறு கவிஞர்கள்
எழுதிய பாடல்களை எழுதி வருதல்
Ø பழைய வரி வடிவம் மற்றும் புதிய வரி வடிவம் அட்டவணையை
எழுதி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை