6TH - NOTES OF LESSON - FEBRUARY - 1ST WEEK

 நாள்                 :           01-02-2022 முதல்  05-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - முதல் வாரம்                                     

வகுப்பு              :             ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. பாரதம் அன்றைய நாற்றங்கால்

கருபொருள்                            :

Ø  செய்யுளின் நயங்களை அறிதல்.

Ø  இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல்

உட்பொருள்                           :

Ø  செய்யுளின் குறிப்புகள் அறிதல்

Ø  ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  செய்யுளில் காணப்படும் நயங்களை அறிதல்

Ø  இந்திய நாட்டின் சிறப்புகளையும், வளங்களையும் அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, இந்திய வரைபடம்

கற்றல் விளைவுகள்                 :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் பொருள் உணர்தல்

Ø  தாம் படித்தவற்றில் உள்ள நயங்களை எடுத்துரைத்தல்

Ø  இந்தியாவின் வளங்களையும்,அதன் சிறப்புகளையும் உணர்தல்

ஆர்வமூட்டல்                          :

Ø  இந்தியாவின் தலைநகர் எது?

Ø  இந்தியாவின் தென்கோடி எது?

Ø  உனக்குத் தெரிந்த ஆறுகளின் பெயர்களைக் கூறு

Ø  இவைப் போன்ற வினாக்களைக் கேட்டு ஆர்வ மூட்டல்

 

படித்தல்                                  :

Ø  செய்யுளினை இனிய ஓசையில் இராகமாகப் பாடுதல்

Ø  ஆசிரியர் செய்யுளினை சீர் பிரித்து வாசித்துக்காட்டல்,அதனைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்

Ø  புதிய சொற்களை அடையாளம் காணுதல்

நினைவு வரைபடம்                 :

                                                            பாரதம் அன்றைய நாற்றங்கால்



தொகுத்து வழங்குதல்             :

 

Ø  ஆசிரியர் : இராதா கிருஷ்ணன். ( தாராபாரதி )

Ø  பாராட்டுப் பெயர்கள்:

·        கவி ஞாயிறு

Ø  எழுதிய நூல்கள் : புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்

Ø  இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு.

Ø  திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது

Ø  இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது.

Ø  . கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

Ø  . கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

Ø  கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

Ø  அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

வலுவூட்டல்                             :

Ø  இந்திய நாட்டின் சிறப்புகளைக் கூறி வலுவூட்டல்

Ø  செய்யுளில் உள்ள நயங்களைக் கூறி வலுவூட்டல்\

Ø  இந்தியாவின் வளங்கள் குறித்து கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  அறத்தின் ஊன்று கோலாக விளங்குவது ___________

Ø  காளிதாசரின் பாடல்கள் எங்கு வரை எதிரொலிக்கின்றன?

Ø  இந்திய தாயின் மேலாடையாக விளங்குவது எது?

Ø  இந்திய தாயின் கூந்தலுக்கு எங்கிருந்து மலர்கள் வருகிறது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.

Ø   எதுகை நயம் அறிதல், மோனை நயம் அறிதல், இயைபு நயம் அறிதல்

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

தொடர் பணி                          :

Ø  நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post