நாள் : 01-02-2022 முதல் 05-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. புணர்ச்சி
2. திருக்குறள்
கரு பொருள்:
·
சொற்களை பிரித்தும், சேர்த்தும் எழுதும் விதிகளை அறிதல்
·
புணர்ச்சி இலக்கண அடிப்படை விதிகளை அறிதல்
·
திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும்
திறன் பெறல்
உட்பொருள்:
Ø புணர்ச்சி என்பதனை அறிதல்
Ø புணர்ச்சியில் நிலைமொழி,
வருமொழி பற்றி அறிதல்
Ø புணர்மொழியின் இயல்புகளை
அறிதல்
Ø புணர்ச்சியின் வகைகளை அறிதல்
Ø உயிரீற்றுப் புணர்ச்சி
Ø குற்றியலுகரப் புணர்ச்சி
பற்றி அறிதல்
Ø திருக்குறள் கூறும்
வாழ்வியல் நெறிகளை அறிதல்
Ø திருக்குறளின் நெறிகளை பின்பற்றுதல்
கற்றல் விளைவுகள் :
Ø சொற்களில் உயிரீறு,
மெய்யீறு அறிதல்
Ø சொற்களில் உயிர்
முதல், மெய்ம்முதல் அறிதல்
Ø உடம்படுமெய்யுடன்
சொற்களை இணைத்தல்
Ø பத்தியில் காணும்
சொற்களை பிரித்தும், சேர்த்தும் எழுத முற்படுதல்
Ø குறள்களின் விளக்கம்
அறிந்து வாழ்வில் பின்பற்றுதல்
Ø கொடுக்கப்பட்ட
பாடப்பகுதி குறள்களின் பொருள் உணர்தல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø பாலொடு நீர் சேர்வதால் என்ன நிகழும் என
மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
Ø உங்களுக்குப் பிடித்த திருக்குறள் என்ன?
என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை
ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி
மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:
புணர்ச்சி
·
புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு
மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி
நிற்கும்.
·
எனவே, இருமொழிகளுக்கு
இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டு களோ , இன்னொரு
சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு;
மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.
·
புணர்ச்சியின் வகைகள் : இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி
·
விகாரப்புணர்ச்சி : 1. தோன்றல், 2. திரிதல் 3. கெடுதல்
·
உயிரீற்றுப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி விதி அறிதல்
·
இலக்கண விதிகளை விதி வரு முறையில் விளக்குதல்
திருக்குறள்:
·
சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்.
·
அறிவில்லாதவனுக் கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்!
·
கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர்,
தவறு செய்வதில்லை
·
ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர்
நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார்
ஆசிரியர் செயல்பாடு:
Ø சொற்களின் புணர்ச்சியைத்
தக்க சான்றுகளுடன் விளக்க முற்படுதல்
Ø சொற்களில் உள்ள உயிரீறு , மெய்யீறு ,உயிர் முதல்
,மெய்ம்முதல் விளக்குதல்
Ø புணர்ச்சி வகைகளுக்கு
உள்ள வேறுபாடுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
Ø திருக்குறள் கூறும்
அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்
Ø திருக்குறளில் இடம் பெற்றுள்ள
ஏகதேச உருவக அணியினை விளக்குதல்.
மாணவர் செயல்பாடு:
Ø புணர்ச்சி ஆழ்ந்த மொழி அறிவுக்குத்
துணைபுரியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
Ø சொற்களில் நிலைமொழி,வரு மொழியினை
அறிதல்
Ø ஈற்று எழுத்து மற்றும் வரு
மொழி முதல் எழுத்தில்
ஏற்படும் மாற்றமே புணர்ச்சி என அறிதல்
Ø திருக்குறள் கூறும்
அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
கருத்துரு வரைபடம்
புணர்ச்சி
திருக்குறள்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு
வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக்
கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø சொற்களில் காணப்படும் உயிரீறு, மெய்யீறு பற்றி அறிதல்
Ø வருமொழியில் உள்ள உயிர் முதல், மெய்ம்முதல் பற்றி
அறிதல்
Ø புணர்ச்சி வகைகள் அறிதல்
Ø மனப்பாடக் குறளை மன்னம் செய்தல்
மதிப்பீடு:
Ø புணர்ச்சி என்றால் என்ன?
Ø புணர்ச்சி எத்தனை
வகைப்படும்?
Ø இயல்புப் புணர்ச்சி என்றால்
என்ன?
Ø உலகப்பொதுமறை எது?
Ø குடிமை என்றால் என்ன?
Ø சான்றோர் எனப்படுவோர் யாவர்?
தொடர்பணி:
· பாடப்பகுதியில்
உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி,
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை