10 TH - KALVITV - 28-01-2022 - TAMIL - SITHTHALU

                                          https://tamilrk-seed.blogspot.com


காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           28- 01- 2022           

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       சித்தாளு

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1.முகம்மது ரஃபி என்னும் இயற்பெயர் கொண்டவர்______________

அ) அப்துல் ரகுமான்              ஆ) நாகூர் அனிஃபா      இ) நாகூர் ரூமி          ஈ)  முகமது ஜிப்ரான்

 

2. முகம்மது ரஃபி பிறந்த மாவட்டம்________________

அ) திருவண்ணாமலை              ஆ) தஞ்சாவூர்                 இ) கோயமுத்தூர்            ஈ) இராமநாதபுரம்

 

3) முகம்மது ரஃபி எந்த இதழில் எழுதத் தொடங்கினார்______________

அ) விடுதலை                 ஆ) இந்தியா     இ) சுதேச மித்தரன்          ஈ) கணையாழி

 

4) முகம்மது ரஃபி எழுதிய கவிதைத் தொகுதிகள் மொத்தம்______________

அ) 3                 ஆ) 4           இ) 5           ஈ) 6

5 ) இதில் வேறுபட்டதைக் காண்க:-

அ) நதியின் கால்கள்    ஆ) புதிய பார்வை      இ) ஏழாவது சுவை      ஈ)  சொல்லாத சொல்

6 ) நாகூர் ரூமி  எழுதிய நாவல் _______________

அ) கப்பலுக்கு போன மச்சான்     ஆ) குங்குமம்     இ) சுபமங்களா                ஈ) இலக்கிய வெளி வட்டம் 

7 ) இவள் தலையில் எழுதியதோ

   கற்காலம் தான் எப்போதும் – இவ்வடிகளில் கற்காலம் என்பது ____________

அ) தலைவிதி            ஆ) பழைய காலம்                    இ) ஏழ்மை                             ஈ)  தலையில் கல் சுமப்பது 

8 ) தலைகனமே வாழ்வாகி போனது – என ஆசிரியர் யாரைக் கூறுகிறார்?

அ) ஆணவம் கொண்டவர்களை                 ஆ)திறமை  படைத்தவர்களை               இ) சாதனையாளர்களை       

 ஈ) சித்தாளுவின் வாழ்வினை

9 ) சித்தாளின் மனச்சுவைகளை அறியாதவை எவை?

அ) முதலாளிகள்                       ஆ) தொழிலாளர்கள்                இ) செங்கற்கள்                      ஈ) இரும்புகள் 

10 ) அடுத்தவர் கனவுக்காக

     அலுக்காமல் இவள் சுமக்கும் – இவ்வடிகளில் காணப்படும் நயம்-----

அ) எதுகை                ஆ) மோனை                          இ) இயைபு                              ஈ) முரண்  

இணைய வழித் தேர்வு

பணித்தாள் - PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post