10TH - NOTES OF LESSON - FEBRUARY - 1ST WEEK

  நாள்                 :           01-02-2022 முதல்  05-2-2022          

மாதம்               :             பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி- முதல்   வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :1. சங்க இலக்கியத்தில் அறம்

                                   2. காலக் கணிதம்

கருபொருள்                            :

Ø  சங்க இலக்கியங்கள் காட்டும் அறக் கருத்துகளை அறிதல்.

Ø  கதை,கட்டுரை,கவிதை போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்படும் கருத்தை புரிந்து வலுவாகப் பயன்படுத்துத்தல்

உட்பொருள்                           :

Ø  சங்க காலத்தில் இலக்கியம் காட்டும் அறங்கள் சமயக் கலப்பில்லாமல் இருப்பதை அறிதல்.

Ø  இன்றைய நிலையில் அறத்தின் நிலைப்பாடு எவ்வாறு என்பதனை அறிந்து செயலாற்றுதல்

Ø  தத்துவ கருத்துகளை கூறுவதற்கு தமிழ் மொழியே ஏற்றது என்பதனை அறிதல்.

Ø  தத்துவங்கள் வாழ்வின் அனுபவங்கள் என்பதனை உணர்தல்

கற்றல் விளைவுகள்                 :

Ø  அறங்களை போற்றும் மாண்பினை அறிதல். தொடர்ந்து அறங்களை தாமும் பின்பற்றுதல்

Ø  அறங்கள் கூறும் தத்துவங்களை அறிந்து செயல்படுதல்.

Ø  தமது அனுபவங்களை கதையாக.கட்டுரையாக.கவிதையாக படைக்கும் திறன் பெறுதல்

அறிமுகம்                :

Ø  இன்றைய சூழலில் எங்கோ ஏற்பட்ட அறம் சார்ந்த நிகழ்வு வினைக் கூறி ஆயத்தப்படுத்துதல்.

Ø  தானம் என்ற சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு நினைவு வருபவை எவை? எனக் கேட்டு ஆயத்தப்படுத்துதல்.

Ø  மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற புத்தகத்தில் இடம் பெற்ற கண்ணதாசன் பாடலை பாடி ஆயத்தப்படுத்துதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  சங்க அறங்களின் படத்தொகுப்பு, கரும்பலகை,சுண்ணக்கட்டி

Ø  இணையதள வளங்கள்

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  சங்க இலக்கியத்தில் அறம்

o   அறத்தில் வணிக நோக்கம் கொல்லாமை

§  இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது

o   அரசியல் அறம்

§  ம ன்னர்களுடைய செங்கோலும் வெண்க்கொற்றக்குடையும் அ ற த் தி ன் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்ப து பல பாடல்களில் வலியுறுத்தப்பட் டுள்ளது.

o   அறங்கூறவையம்

§  அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது

o   போர் அறம்

§  போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.

o   கொடை

§  வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது.

o   உதவி

§  ' உண்மையான செல்வம் என்ப து பிறர்துன்ப ம் தீர்ப்ப துதான்' என்கிறார் நல்வேட்டனார்.

o   வாய்மை

§  வாய்மைச் சிறந்த அறமாகச் சஙக இ்லக்கியஙகள் பேசுகின்றன

 

o   காலக்கணிதம்        

o   கண்ணதாசன் குறிப்பு            

o   கவிஞன் என்பவனின் இயல்பு

o   கண்னதாசன் கூறும் தத்துவக் கருத்து

o   மாற்றம் குறித்த தத்துவ சிந்தனைகள்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø   நிகழ்காலச்சான்றுகள் தற்கால அறத்தின் நிலையைப் பற்றி விளக்க முற்படுதல்

Ø   பாடத்தில் இடம்பெற்ற அறங்களுக்கு உகந்த காணொளிகளைக் காண்பித்தல்

Ø  கவிஞர்களின் இயல்புகளை தகுந்த சான்றுகள் மூலம் விளக்குதல்.

Ø  இலக்கணக்குறிப்பு பிரித்தெழுதல் பகுபத உறுப்பிலக்கணம் ஆகியவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தல்

Ø  அறத்தினை இன்றைய சூழலுடன் ஒப்பிடல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடிக் காட்டுதல்

Ø  மாணவர்களையும் பின் தொடர்ந்து பாட வைத்தல்

Ø  மாணவர்களின் படைப்புத் திறனை பாராட்டல்

கருத்துரு வரைபடம்                :              சங்க இலக்கியத்தில் அறம்

                                                             


 

                                                            காலக் கணிதம்

                                                           


மாணவர் செயல்பாடு               :             

Ø  அறம் என்பதனை அறிதல்

Ø  அறத்தால் பெறக் கூடிய மனிதம் குறித்த பண்புகளை அறிதல்

Ø  சங்க காலத்தில் மானிட அறம் சமயக் கலப்பில்லாமல் இருந்ததை அறிதல்

Ø  இன்றைய சூழலில் அறம் எவ்வாறு உள்ளது என்பதனை அறிதல்

Ø  கவிஞன் என்பவனின் பண்புகளை அறிதல்

Ø  கண்ணதாசனின் படைப்புகளை அறிதல்.

Ø  மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  மனப்பாடப்பாடலை மனனம் செய்யும் திறன் பெறல்.

Ø  தம்மில் தோன்றும் சிந்தனைகளை படைப்பாக்கமாக மாற்ற முயலுதல்

 

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளித்தல்.

Ø  எளிய குறு வினாக்களை படித்தல்

Ø  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்.

Ø  தம்மில் தோன்றும் சிந்தனைகளை எழுத்து வடிவமாகவோ? ஓவியமாகவோ வரைதல்

மதிப்பீடு                                 :

Ø  ஜென் தத்துவம் எவ்வாறு உருவானது?

Ø  நாக்கு ஓர் அதிசய திறவுகோல் என கருத காரணம் யாது?

Ø  அன்றைய அறங்கூறவையத்திற்கும், இன்றைய நீதி மன்றத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் யாவை?

Ø  கவிஞனின் பண்புகள் யாவை?

Ø  கவிஞர் தானும் கடவுளும் ஒன்று எனக் கூற காரணம் யாது?

Ø  அட்சய பாத்திரம் என்று கவிஞர் எதனைக் கூறுகிறார்?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post