9TH - KALVI TV - 28-01-2022 - TAMIL - NEERINDRI AMAIYATHU ULAGU - 2

     https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்


கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           28 - 01- 2022            

வகுப்பு                    ஒன்பதாம்  வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       நீரின்றி அமையாது உலகு -2

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என இயற்கையை வாழ்த்திப் பாடியவர்_____________

அ) திருவள்ளுவர்         ஆ) இளங்கோவடிகள்      இ) நப்பூதனார்           ஈ)  குடபுலவியனார் 

 

2. வேளாண்மை _______________ஐ அடிப்படையாகக் கொண்டது

அ) சூரியன்      ஆ) மனிதர்கள்          இ) சூழ்நிலை     ஈ) நீர்

 

3)  பாண்டி மண்டலத்து நிலப்பகுதி ஏரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) ஊருணி             ஆ) ஏரி        இ) கண்மாய்      ஈ) குளம்

 

4) மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு பெயர்_____________

அ) ஊருணி             ஆ) ஏரி        இ) கண்மாய்      ஈ) குளம்

5 ) கல்லணையின் நீளம் __________ அடி

அ) 980                       ஆ) 1080                    இ) 1180                       ஈ) 1280               

6 ) கல்லணையின் அகலம் _________ அடி முதல் ______ அடி வரை

அ) 50 முதல் 60             ஆ) 40 முதல் 80                       இ) 40 முதல் 60                      ஈ)  60 முதல் 80

7 ) கல்லணையின் உயரம் ________ முதல் _________ அடி வரை

அ) 10 முதல் 12                       ஆ) 11   முதல் 20                     இ)  15 முதல் 18         ஈ)  16 முதல் 20      

8 ) மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் – இந்த குறட்பாவில்  நாட்டின் சிறந்த பாதுகாப்புகளில் முதன்மையாக வள்ளுவர்  எதனை கூறுகிறார்?

அ) மண்                     ஆ) நீர்                  இ) மலை                  ஈ) காடு

9 ) உணவெனப்படுவது நிலத்தோடு நீரே – இவ்வடிகள் இடம் பெறும் நூல்

அ) திருக்குறள்          ஆ) அகநானூறு       இ) குறுந்தொகை                  ஈ) புறநானூறு

10 ) இந்திய நீர் பாசனத்தின் தந்தை ___________

அ) கரிகாலன்            ஆ) ஸ்டான்லி                         இ) ஆர்தர் காட்டன்                  ஈ)  ஜான் பென்னி குவிக்

11 ) அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும் பரப்பு____________

அ)  குண்டு              ஆ) கடல்                 இ) கண்மாய்                          ஈ) கேணி 

12 ) பலவகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம் ______________

அ) ஆகழி                 ஆ) இலஞ்சி            இ) உறைக்கிணறு                    ஈ) ஏரி

13 உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ____________

அ) கூவல்                         ஆ) புனற்குளம்                      இ) கட்டுக்கிணறு                         ஈ) கண்மாய்

14 ) முல்லை பெரியார் அணையை கட்டியவர் ____________

அ) கரிகாலன்            ஆ) ஸ்டான்லி                         இ) ஆர்தர் காட்டன்                  ஈ)  ஜான் பென்னி குவிக் 

15 ) கடலருகே தோண்டிக் கட்டிய கிண்று ______________

அ) அருவி                ஆ) அகழி                              இ) ஆறு                  ஈ) ஆழிக்கிணறு

இணைய வழித் தேர்வு

பணித்தாள் - PDF



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post