காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 2 8- 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -7 - ஒன்றே குலம்
பணித்தாள்
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1.திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
அ) 3000 ஆ) 4000 இ) 5000 ஈ) 6000
2. திருமந்திரத்தை
இயற்றியவர்____________
அ) அப்பர்
ஆ) சுந்தரர் இ) மாணிக்க வாசகர் ஈ) திருமூலர்
3) திருமுறைகள் மொத்தம் எத்தனை?
அ) 10 ஆ) 11 இ) 12 ஈ) 13
4) நாயன்மார்கள்
மொத்தம் எத்தனைப் பேர்?
அ)
108 ஆ) 63 இ) 64 ஈ) 72
5 ) பதினெண் சித்தர்கள் என்பதில் உள்ள எண்ணுபெயரின்
தமிழெண் _______________
அ) ௧௮ ஆ) ௧௨ இ) ௧௧ ஈ) ௧௪
6 ) திருமூலர் எவ்வாறு கருதப்படுகிறார்?
அ) தொண்டருக்கு தொண்டராக ஆ) ஆழ்வார்களிலும்,நாயன்மார்களுள்
ஒருவராகவும் இ) நாயன்மார்களுள் ஒருவராகவும்,
சித்தர்களுள் ஒருவராகவும்
ஈ) பசிப்பிணிப் போக்கும்
மருத்துவராக
7 ) திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக
உள்ளது?
அ) 10 ஆ) 11 இ) 5 ஈ) 6
8 ) அறநெறியில் வாழ்பவர்கள்
உயிரைக் கவர வரும் _______________ க்கண்டு அஞ்ச மாட்டார்கள்
அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை
9 ) ஒன்றே ____________ என்று கருதி வாழ்வதே
மனிதப் பண்பாகும்
அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம்
10 ) நமனில்லை – என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது________________
அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை
11 ) நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்________________
அ) நம்பரங்கு ஆ) நம்மார்க்கு இ) நம்பர்க்கங்கு ஈ) நம்பங்கு
12 ) நாணமே – என்பதன் பொருள் யாது?
அ) ஈடேறுங்கள் ஆ) அடியார் இ) எமன் ஈ) கூசாமல்
13 ) சித்தம் - என்பதன் பொருள்
________________
அ) கூசாமல் ஆ) வழங்கினால் இ) உள்ளம்
ஈ) எமன்
14 ) நம்பர் –
என்பதன் பொருள்____________
அ) கூசாமல் ஆ) வழங்கினால் இ) அடியார்
ஈ) எமன்
15 ) படமாடக் கோயில்
பகவற்குஒன்று ஈயில் – இவ்வடிகளில் காணப்படும் மோனைச் சொற்கள்______________
அ) படமாட,பகவற்கு ஆ) கோயில்,ஈயில் இ) படமாட , ஒன்று ஈ) கோயில், பகவற்கு
16 ) மனிதர்களிடையே ______________ ஆல் உயர்வு
தாழ்வு பாராட்டுவது தவறு.
அ) செல்வத்தால் ஆ) கல்வியால் இ) பிறப்பால் ஈ) வளர்ச்சியால்
17 ) உலக மக்கள் யாவரையும் எவ்வாறு கருத வேண்டும்?
அ) நண்பனாக ஆ) உடன் பிறந்தவராக இ) எதிரியாக ஈ) துரோகியாக
18 ) இறைவனுக்கு காணிக்கை எவ்வாறு செலுத்த வேண்டும்
என திருமூலர் கருதினார்?
அ) நடைப்பாதையாக செல்லுதல் ஆ) அபிசேஷகம் செய்தல் இ) மக்களுக்கு கொடுத்தல் ஈ) உண்டியலில் செலுத்துதல்
19 ) உலகை காக்கும் இறைவன் ______________
அ) மதத்திற்கு மதம் வேறுபட்டவர் ஆ) சமயத்திற்கு சமயம் வேறுபட்டவர் இ) செல்வந்தர்களுக்கு உரிய
ஈ) ஒருவனே
20 ) எது இறைத் தொண்டாக கருதப்படுகிறது?
அ) பால் அபிசேஷகம் செய்தல் ஆ) குடமுழக்கு செய்தல் இ) அடுத்தவர் பசியைப் போக்குவது
ஈ) கடவுள் சிலைகள் செய்வது
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF