ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். தமிழ் எழுத்துகள் இன்று நிலையான வடிவம் பெற காரணமாக இருந்தது எழுத்துச் சீர்த்திருத்தம். அதனை இரு பெரும் அறிஞர்கள் மேற்கொண்டனர். வீரமாமுனிவர் மற்றும் பெரியார். இவர்களின் சீரிய பணியால் இன்று உலகம் முழுவதும் ஒரே மாதிரியான வரிவடிவம் கொண்டு தமிழ் எழுதப்படுகிறது. இதற்கு முன்னர் வட்டெழுத்து, கண்ணெழுத்து எனக் கொண்டு எழுதப்பட்டது. அது பாறைகளில் செதுக்கும் போது ஒரு வடிவாகவும், ஓலைகளில் ஒரு வரிவாகவும் எழுதப்பட்டது. பழைய வரி வடிவத்தையும், இன்றைய வரி வடிவத்தையும் கொண்ட எழுத்துகள் உங்களுக்கு இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த PDF - ஐ வழங்கியவர்கள் தமிழர் ஆய்வுக் கூடம். இது தமிழி எழுத்து, வட்டெழுத்து, இன்றைய தமிழ் எழுத்து என மூன்றாக பிரித்து ஒவ்வொரு எழுத்திற்கும் தனித்தனியாக 247 எழுத்துகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இது PDF வடிவம் அனைத்து தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ் பால் பற்றுக் கொண்டவர்கள் அனைவரும் வைத்திருக்க் வேண்டிய ஒன்று. இந்த PDF எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் வரக்கூடிய தமிழ் வரி வடிவ வளர்ச்சி என்ற பாடத்திற்கு மிகவும் பொருந்தமாக இருக்கக் கூடிய ஒரு கற்றல் - கற்பித்தல் துணைக் கருவியாகும். ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்துக் கொண்டு ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். வருங்கால சந்ததியினரும் பார்த்து பயன் பெற வேண்டும்