7TH - NOTES OF LESSON - FEBRUARY - 1ST WEEK

 நாள்                 :           01-02-2022 முதல்  05-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - முதல் வாரம்                                     

வகுப்பு              :             ஏழாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. விருந்தோம்பல்

கருபொருள்                            :

Ø  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் சமூ்க வாழ்வியலைப் புரிந்துக் கொள்ளுதல்

உட்பொருள்                           :

Ø  செய்யுளின் குறிப்புகள் அறிதல்

Ø  ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  செய்யுளில் காணப்படும் நயங்களை அறிதல்

Ø  தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று விருந்தோம்பலின் பண்பை அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, இந்திய வரைபடம்

கற்றல் விளைவுகள்                 :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் பொருள் உணர்தல்

Ø  தாம் படித்தவற்றில் உள்ள நயங்களை எடுத்துரைத்தல்

Ø  விருந்தோம்பலின் முக்கியத்துவமும், அதன் மூலம் காணப்படும் அறத்தையும் அறிதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  அன்றைய விருந்தோம்பல் நிலைக்கும், இன்றைய விருந்தோம்பல் நிலைக்கும் உள்ள வேறுபாட்டினைக் கேட்டு ஆர்வ மூட்டல்.

படித்தல்                                  :

Ø  செய்யுளினை இனிய ஓசையில் இராகமாகப் பாடுதல்

Ø  ஆசிரியர் செய்யுளினை சீர் பிரித்து வாசித்துக்காட்டல்,அதனைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்

Ø  புதிய சொற்களை அடையாளம் காணுதல்

நினைவு வரைபடம்                 :

                                                            விருந்தோம்பல்



தொகுத்து வழங்குதல்             :

 

Ø  ஆசிரியர் : முன்றுரை அரையனார்

Ø  காலம் : நான்காம் நூற்றாண்டு

Ø  சமயம்    :  சமணசமயம்

Ø  பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

Ø  இது நானூறு பாடல்களைக் கொண்டது.

Ø  ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்று இருக்கும்.

Ø  பாரியின் மகள்கள் ; அங்கவை, சங்கவை

Ø  பாணர்களுக்கு விருந்து படைத்தவிதம்.

Ø  வீட்டில் ஏதும் இல்லாத நிலையிலும் உலைநீரில் பொன் இட்டு கொடுத்தனர்.

Ø  ஒன்றாகு முன்றிலோ இல் -பழமொழி

Ø  ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.

வலுவூட்டல்                             :

Ø  விருந்தோம்பலின் சிறப்புகளைக் கூறி வலுவூட்டல்

Ø  செய்யுளில் உள்ள நயங்களைக் கூறி வலுவூட்டல்\

Ø  விருந்தோம்பலின் இன்றைய நிலைக் குறித்து கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார் ?

Ø  பதினெண் என்பதில் உள்ள நூல்களின் எண்ணிக்கை_____________

Ø  பாரியின் மகள்கள் ___________, ________________

Ø  மடமகள் என்பதன் பொருள் ________

Ø  முன்றில் என்பது எதனைக் குறிக்கிறது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.

Ø   எதுகை நயம் அறிதல், மோனை நயம் அறிதல், இயைபு நயம் அறிதல்

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

தொடர் பணி                          :

Ø  கடையெழு வள்ளல்கள் பெயர்களையும், அவர்கள் செய்த கொடைத் திறம் குறித்து எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post