8TH - KALVI TV - 21-01-2022 - VIDUTHALAI THIRUNAL - PART 3

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           21- 01- 2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -7 - விடுதலை திருநாள் - பகுதி 3

( நேற்றைய 20-01-2022 நாளது பாடத்தின் தொடர்ச்சிக் காரணமாக அதே பணித்தாளினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது )

காணொளி

பணித்தாள்

1. வானில் முழுநிலவு அழகாகத் __________ அளித்தது.

அ. தயவு                -         ஆ. தரிசனம்           இ. துணிவு              ஈ. தயக்கம்

2. இந்த __________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

அ. வையம்                         ஆ. வானம்           இ. ஆழி                        ஈ. கானகம்

3. ‘ சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________

அ. சீவ + நில்லாமல்         ஆ. சீவன் + நில்லாமல்                   இ. சீவன் + இல்லாமல்        ஈ. சீவ + இல்லாமல்

4. ‘ விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________

அ. விலம் + கொடித்து        ஆ. விலம் + ஒடித்து        இ. விலன் + ஒடித்து        ஈ. விலங்கு + ஒடித்து

5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____________

அ. காட்டைஎரித்து           ஆ. காட்டையெரித்து       இ. காடு எரித்து                     ஈ. காடுயெரித்து

6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்___________________

அ.  இதந்தரும்       ஆ. இதம் தரும்                   இ. இதத்தரும்                 ஈ. இதைத்தரும்

7.  சீவன் என்பதன் பொருள் _________________

அ. உயிர்                ஆ. உண்மை                 இ. உலகம்                ஈ. உறக்கம்

8. அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர் _________________

அ. பாரதியார்             ஆ.  பாரதிதாசன்                இ. நாமக்கல் கவிஞர்              ஈ. மீ.இராசேந்திரன்

9. சபதம் என்பதன் பொருள் யாது?

அ. சூளுரை                           ஆ. உண்மை                 இ. உலகம்                ஈ. உறக்கம்

10. மோகித்து என்பதன் பொருள் ___________________

அ. உயிர்                ஆ. விரும்பி                  இ. உலகம்                ஈ. உறக்கம்

இணையத் தேர்வு

பணித்தாள் - PDF



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post