ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். கொராணா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜனவரி - 31 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. மாணவர்கள் இந்த விடுமுறையை விழாக்கால விடுமுறை என கருதாமல் பொதுத் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள விடப்பட்ட விடுமுறையாக எண்ணி, நாள் தோறும் பாடங்களை வீட்டிலிருந்து கற்க வேண்டும். மேலும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை கவனிக்க வேண்டும். இந்த வலைதளம் அன்றைய தினத்தில் ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக் காட்சி காணொளியினை உங்களுக்கு பகிர்வதோடு நில்லாமல் சம்பந்தபட்ட பாடத்திற்கு உண்டான பணித்தாளினையும் உடனிருந்து வழங்கி வருகிறது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்தி தங்களின் கற்றலை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஜனவரி 31 வரை விடுமுறை என்பதால் இந்த வலைதளம் மாணவர்களுக்கு இணையம் வழியாக பாடங்களை நடத்த அனுமானிக்கப்பட்டுவருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் உங்களை வந்தடையும். அதனால் நாம் எப்போதும் தமிழ்விதை வலைதளத்தோடு உடனிருந்து பயணிப்போம்.
எதிர் வரும் முதல் திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாணவர்களும் ஆசிரியர்களும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த இந்த வேளையில் கொராணா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் தான் தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு கிடைக்கப்பெற்றதும் இந்த வலைதளத்தில் அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களை மேலும் செம்மையாக்கிக் கொள்ள இந்த விடுமுறை என கருதி பாடங்களை நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.






















































































