9TH - KALVI TV - 21-01-2022 - THODAR ILAKKANAM

    https://tamilrk-seed.blogspot.com


கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                          21- 01 - 2022            

வகுப்பு                    ஒன்பதாம்  வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       தொடர் இலக்கணம்

காணொளி

பணித்தாள்

1. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே ______________ என்கிறோம்.

அ. பயனிலை                         ஆ. எழுவாய்                   இ. செயபடுபொருள்                              ஈ. வினை

2. நல்ல மாணவன் வந்தான் – இதில் உள்ள பெயரடை ______

அ. நல்ல                              ஆ. மாணவன்                        இ. வந்தான்                                      ஈ. நல்ல மாணவன்

3. வந்தான் என்ற வினைக்கு பொருத்தமான வினையடை எது?

அ. வந்து சென்றான்         ஆ. வேகமாக வந்தான்                  இ. வந்து அமர்ந்தான்                      ஈ. வந்த பையன்

4. பொருத்தமான பெயரடையை எழுதுக. எல்லோருக்கும் _____________ வணக்கம்

அ. கொடிய                     ஆ. வஞ்சக                             இ. மோசமான                                      ஈ. இனிய

5. சங்க இலக்கியம் வாழ்க்கையை ___________ காட்டுகிறது. பொருத்தமான வினையடையை எழுதுக.

அ. வேகமாக                   ஆ. மெதுவாக                        இ. சாதுவாக                                  ஈ. அழகாக

6. இவற்றில் எது பகாப்பதமாக அமையும் சொல்______________

அ.  பகுதி                        ஆ. விகுதி                             இ. இடைநிலை                              ஈ. விகாரம்

7.  சொல்லின் இறுதியில் நின்று திணை,பால்,எண்,இடம் காட்டுவதாக அமைவது ___________

அ.  பகுதி                        ஆ. விகுதி                             இ. இடைநிலை                              ஈ. விகாரம்

8. இந்த உறுப்பு பெரும்பாலும் பகுதிக்கும்,இடைநிலைக்கும் இடையில் வரும்____________

அ.  பகுதி                        ஆ. விகுதி                             இ. சந்தி                                        ஈ. விகாரம்

9. பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் __________________ ஆகும்.

அ.  பகுதி                        ஆ. விகுதி                             இ. இடைநிலை                              ஈ. விகாரம்

10. மகிழ்ந்தாள் என்பதில் உள்ள பகுதி எது?

அ. மகிழ்                     ஆ.ஆள்                                   இ. ந்                                ஈ. த்

இணைய வழித் தேர்வு



பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post