ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அது என்னவெனில் எதிர் வரும் திருப்புதல் தேர்வுக்கு இந்த வலைதளம் மூலம் பாடங்களை இணைய வகுப்பு மூலம் நடத்தினோம். அதன் தொடர்ச்சியை கொண்டு செல்ல மீண்டும் இணைய வகுப்பு நடத்த உள்ளோம். முதல் வகுப்பு தமிழ் இரு தினங்களுக்கு முன் நடந்தது. மாணவர்கள் குறைவாகவே வந்து இருந்தனர். மாணவர்கள் தங்களுக்கு விடப்பட்டுள்ள விடுமுறை கோடைகால விடுமுறையோ அல்லது தேர்வு முடிந்து விட்ட விடுமுறையோ இல்லை. மாணவர்கள் தங்கள் இல்லங்களிலே தங்களை பொதுத் தேர்வு தயார்ப்படுத்திக் கொள்ள விடப்பட்டுள்ள விடுமுறை. ஆதலால் இன்று நடைபெற உள்ள கணித இணைய வகுப்பு ZOOM வழியாக நடைபெறும். மேலும் மாணவர்கள் இந்த இணைய வகுப்பினை நேரடியாக தமிழ்விதை YOUTUBE CHANNEL வழியாகவும் காணலாம். மாணவர்கள் இந்த இணைய வகுப்பின் ID மற்றும் PASSCODE சரியான முறையில் தட்டச்சு செய்து வகுப்பில் இணையும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். கொராணா பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் கற்றல் என்பது மிகவும் சாவலாக உள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் மாணவர்களின் அன்றாட செயல்பாட்டினை நம்மால் கவனிக்க முடியவில்லை. இதனால் கல்வி தடைபடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்விதை மற்றும் தமிழ்ப் பொழில் ஆகிய இரு வலைதளங்கள் மாணவர்களின் கல்வியில் முழு அக்கறைக் கொண்டு இணைய வகுப்பினை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வகுப்பு தமிழ் விதை வலைதளம் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு என பொதுவாக உள்ள தமிழ் பாடத்தின் தலைப்பினைத் தேர்ந்தெடுத்து நடத்தத் திட்டமிடப் பட்டு 24-01-2022 இன்று தமிழ்ப் பாடத்தில் இலக்கண வகுப்பு நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் இந்த இணைய வகுப்பில் தவறாமல் பங்கேற்கவும். ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இந்த இணைய இணைப்பினை பகிர்ந்து உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்ளபடுகிறது. இந்த இணைய வகுப்பு ZOOM செயலி வழியாக நடைபெறும். இதில் மாணவர்கள் 100 பேர் வரை கலந்துக் கொள்ளலாம். இதில் இணைய முடியாத மாணவர்கள் இந்த இணைப்பிலேயே நேரலை ஒளிபரப்பப்படுகிறது. இதனைக் கண்டு மாணவர்கள் பயனடையவும். மாணவர்கள் வகுப்பில் இணையும் போது தங்களுடைய குறிப்பேடு, எழுதுகோல், தமிழ்ப்புத்தகம் இவற்றை எடுத்துக் கொண்டு வகுப்பில் இணையவும்.
ZOOM செயலியை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அலகிடுதல்
கலந்துக் கொள்ள வேண்டிய
மாணவர்கள் :
எட்டாம் வகுப்பு,
ஒன்பதாம் வகுப்பு,
பத்தாம் வகுப்பு
நேரம் : மதியம் 2.00 முதல் மதியம் 3.00 மணி வரை
Meeting ID: 668 085
2665
Passcode: 123456
LINK : https://us02web.zoom.us/j/6680852665?pwd=su1bADsnF5myzfYr8t9E5I5y_XE8lx.1
மதிப்பீடு : CLICK HERE
நேரலை
இந்த இணைய இணைப்பில் நேரடியாக காலை 11.05 முதல் காணலாம்
KINDLY JOIN OUR OFFICIAL GROUPS:
WHATSAPP: CLICK HERE
TELEGRAM : CLICK HERE
FACE BOOK : CLICK HERE
YOUTUBE : CLICK HERE