காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 31- 01- 2022
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தேம்பாவணி
பணித்தாள்
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1.தேம்பாவணியை இயற்றியவர் _____________
அ) ஜி.யு.போப் ஆ) கெல்லட் இ) வீரமாமுனிவர் ஈ) ஜான்மர்பி
2. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி__________
அ) வீரமாமுனிவர் ஆ) ஜி.யு.போப் இ) சீசர் ஈ) அருளப்பன்
3) வீரமாமுனிவர் தன் காப்பியத்தில்
அருளப்பனுக்கு இட்ட பெயர்_____________
அ) செழியன் ஆ) இனியன் இ) கருணையன் ஈ) பொன்னன்
4) வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது கற்றுக் கொண்டார்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
5 ) வீரமாமுனிவர் எதற்காக உருது கற்றுக் கொண்டார்?
அ) பன்மொழி புலமைக்காக
ஆ) கட்டுரை எழுத இ) காப்பியம் படைக்க ஈ) திருச்சி மன்னரிடம் உரையாட
6 ) இஸ்மத்
சன்னியாசி என்பதன் பொருள்________________
அ) துறவு ஆ) தூய துறவி
இ) எழுத்தாளர்
ஈ) கவிஞர்
7 ) இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்
சொல்__________________
அ) உருது ஆ) சமஸ்கிருதம் இ) வடமொழி ஈ) பாரசீகம்
8 ) தேம்பாவணி எந்த நூற்றாண்டு
படைக்கப்பட்டது?
அ) 17 ஆ) 16 இ) 18 ஈ) 19
9 ) திருச்சியை ஆண்ட மன்னர்
__________________
அ) தாதாசாகிப் ஆ) அபு சலீம் இ) சந்தா சாகிப் ஈ) நவாப்
10 ) கான்சுடான்சு சோசப் பெசுகி என்ற இயற்பெயர்
கோண்டவர்________________
அ) ஜி.யு.போப் ஆ) கெல்லட் இ) வீரமாமுனிவர் ஈ) ஜான்மர்பி
11 ) வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல்_______________________
அ) சதுரகராதி ஆ) பரமார்த்தக் குருகதைகள் இ) தேம்பாவணி ஈ) தொன்னூல் விளக்கம்
12 ) தேம்பாவணியில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை _____________
அ) 3415 ஆ) 3515 இ) 3615 ஈ) 3715
13 ) தேம்பாவணி என்பது ஒரு
_________________
அ) காவியம் ஆ) பெருங்காப்பியம் இ) சிறு காப்பியம்
ஈ) நாவல்
14 ) தேம்பாவணியில் உள்ள படலங்களின்
எண்ணிக்கை ______________
அ) 63 ஆ) 40 இ) 36 ஈ) 15
15 ) தேம்பா + அணி = தேம்பாவணி
எனப்பிரித்தால் பொருள் தருவது _________________
அ) தேன் போன்ற பாடல்கள் ஆ) வாடாத மாலை இ) வாடிய மாலை ஈ) தேன் போன்ற கவிதை
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF