REVISION EXAM -SALEM -9TH- TAMIL - ANSWER KEY

 

வினா – விடைக் குறிப்பு

முதல் திருப்புதல் தேர்வு - 2021

9ஆம் வகுப்பு                                                     தமிழ்                                                 காலம் : 1.30 மணி

                                                                                                                                            மதிப்பெண் : 50

                                                                    பகுதி – 1     பிரிவு - அ

I.                  சரியான விடையைத் தேர்வு செய்க:-                                                                         5×1 = 5

1.       தமிழ் விடு தூது ________________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது

அ. தொடர் நிலைச் செய்யுள்             ஆ. புதுக்கவிதை               இ. சிற்றிலக்கியம்              ஈ. தனிப்பாடல்

2.      காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! – எந்தக்

 காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே – இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

அ. முரண்,எதுகை,இரட்டைத் தொடை ஆ.இயைபு,அளபெடை,செந்தொடை

இ. மோனை,எதுகை,இயைபு                   ஈ. மோனை, முரண்,அந்தாதி

3.      “ மல்லல்” மூதூர் வயவேந்தே ____________ கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ. மறுமை          ஆ. பூவரசு மரம்                இ. வளம்             ஈ. பெரிய

      4.    ஐம்பெருங்குழு,எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

            அ. திசைச்சொற்கள்           ஆ.  வடசொற்கள்              இ. உரிச்சொற்கள்             ஈ. தொகைச்சொற்கள்

     5. பொருந்தாத இணை எது?

            அ. ஏறுகோள்       -          எருதுகட்டி

            ஆ. திருவாரூர்     -          கரிக்கையூர்

            இ. ஆதிச்சநல்லூர்  -          அரிக்க மேடு

            ஈ. பட்டிமன்றம்      -          பட்டிமண்டபம் 

                                                        பிரிவு – ஆ

            பொருத்தமான பெயரடைகளை எழுதுக:-                                                                     4×1 = 4

            ( நல்ல,பெரிய,இனிய, கொடிய )

      6.    எல்லோருக்கும் ______இனிய_______ வணக்கம்

     7.     அவன் __________ நல்ல ________ நண்பனாக இருக்கிறான்

     8.     ___ பெரிய ____ ஓவியமாக வரைந்து வா

     9.     ___கொடிய ____ விலங்கிடம் பழகாதே   

பிரிவு – இ

            பொருத்தமான வினையடைகளை தேர்வு செய்க:-                                                  4×1 = 4

            ( அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக )

    10.     ஊர்தி ______ வேகமாக/மெதுவாக______ சென்றது.

    11      காலம்  ______ வேகமாக/மெதுவாக-------ஓடுகிறது.

    12.     சங்க இலக்கியம் வாழ்க்கையை _______ அழகாக _________ காட்டுகிறது.

    13.     இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் _____ பொதுவாக _______ காட்டு.

பிரிவு – ஈ

            தமிழ் எண்களில் எழுதுக:-                                                                                            2×1 = 2

    14.     நாற்பத்து மூன்று          ௪ ௩

    15.     தொண்ணூறு        -       

பகுதி – 2    

II.          எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             5×2 = 10

 16.       நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?

            நான் பேசும் மொழி தமிழ். இது திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

 17.       கண்ணி என்பதன் விளக்கம் யாது?

கண்ணி - இரண்டு இரண்டு பூக்களாக வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதுபோல், இரண்டு இரண்டு அடிகளாக எதுகையோடு பாடப்படும் செய்யுள் கண்ணி எனப்படும்

 18.       வீணையோடு வந்தாள்,கிளியே பேசு தொடரின் வகையைச் சுட்டுக:-

            வீணையோடு வந்தாள்       -         மூன்றாம் வேற்றுமைத் தொடர்

            கிளியே பேசு                   -          விளித்தொடர்

 19.       நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?

வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது பாயும். இது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லிற்கு ஒப்பிடப்படுகிறது.

20.        நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

            மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு விடுதல், மாடு பிடித்தல்.

21.        நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

            தன்னைத் தோண்டுபவரையும் நிலமானது தாங்குகிறது. அதுபோல, நம்மை இகழ்பவரிடமும் பொறுமை காக்க  வேண்டும்

22.       கனவிலும்  இனிக்காதது எவர் நட்பு?

            செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

பகுதி – 3

III.          எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                               3×3 = 9

23.        மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

·              மூன்று               -  தமிழ்

·              மூணு                - மலையாளம்

·              மூடு                  -  தெலுங்கு

·              மூரு                  -  கன்னடம்

·              மூஜி                  -  துளு

24.        காலந்தோறும் தமிழ் மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

தமிழ்மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப்பாதுகாத்து வருகிறது. அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு,  புதிதாக உருவாகும் ஒவ்வொரு சொல்லுக்கும் துறைக்கும் ஏற்பப் புதுச்சொற்களை உருவாக்கிக்கொள்கிறது.

25.        நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

நிலம் குழிந்த இடமெங்கும் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

26.        ஏறுதழுவுதல்,திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்து தொழிலோடும் பிணைந்தது.

27.        உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுடன் ஒப்பிடுக.

           

இந்திர விழா

எங்கள் ஊர் திருவிழா

1.       28 நாட்கள் நடைபெறும்

1.விழாத் தன்மைப் பொறுத்து 5 நாட்கள் வரை நடைபெறும்.

        மன்னன் தலைமையில் எண்பேராயக் குழு, ஐம்பெரும் குழு கூடி முடிவு செய்வர்.

2 .ஊர் தலைவர், கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பங்கு கொண்டு விழாவினை முடிவு செய்வர்

2.      முரசறைத்து நாட்டு மக்களுக்கு விழாவினை அறிவிப்பர்

3. அழைப்பிதழ் அச்சடித்து ஊர் மக்களுக்கு அறிவிப்பர்

3.      நகர் முழுவதும் வீடுகளும், வீதிகளும் அழகுப்படுத்தப்படும்

4.விழா நடைபெறும் வீதிகளும், வீடுகளும் அழகுப்படுத்தப்படும்.

4.      பட்டிமன்றம், கலை நிகழ்வுகள் நடைபெறும்

5.ஆடல்,பாடல்,பட்டிமன்றம் என நிகழ்வுகள் நடைபெறும்

பகுதி – 4

IV.         அடிபிறழாமல் எழுதுக:-                                                                                                     4+2 = 6

 

28.        “ தித்திக்கும் தெள் அழுதாய்த் “ ----- எனத் தொடங்கும் தமிழ்விடு தூது பாடலை அடிமாறாமல் எழுதுக:-

            தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

            முத்திக் கனியேஎன் முத்தமிழே                     -          புத்திக்குள்

            உண்ணப் படும்தேனே        உன்னோடு உவந்து உரைக்கும்

            விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்  -          மண்ணில்

            குறம் என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

            உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ          -          திறம்எல்லாம்

            வந்துஎன்றும் சிந்தா மணியாய்         இருந்தஉனைச்

            சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

 

29.        “ மிகுதியான் “ – எனத் தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

            மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

            தகுதியான் வென்று விடல்

பகுதி – 5

V.          ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்க:-                                                    1×6 = 6

 

30.        தூது அனுப்ப தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்குக:-

    ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

31.        பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

 

32.        உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்,இராமகிருஷ்ணனின் “ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

                                                                                                                        12, தமிழ் வீதி,

                                                                                                                                மதுரை-2

                                                                                                                 28,செப்டம்பர் 2021.

அன்புள்ள நண்பா !                                          

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

                                                                                                                                        அன்பு நண்பன்,                                                                                                                                                அ.எழிலன்.

உறைமேல் முகவரி:

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் -

பகுதி – 6

V.          அனைத்து வினாவிற்கும் விடையளிக்க:-                                                                      4×1 = 4

33.        மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

            ( பிழை நீக்கி எழுதுக )

            மழையே பயிர்கூட்டமும்,உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகிறது

34.        கற்றோர்க்குச் சென்ற _____________________

            கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

            ( தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க )

35.        கலைச்சொல்லக்கம் தருக:-  Comparative Grammar         -          ஒப்பிலக்கணம்

36.        தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

            - இது எவ்வகைத் தொடர்

            அ)        வினைத்தொடர்                ஆ)        கட்டளைத் தொடர்

 

            இ)         செய்தித் தொடர்                ஈ)         உணர்ச்சித் தொடர்

விடைக் குறிப்பு தயாரிப்பு:-

திரு. வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி, சேலம் – 637102.

 

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post