REVISION EXAM -SALEM -10TH- TAMIL - ANSWER KEY

 

வினா – விடைக் குறிப்பு

முதல் திருப்புதல் தேர்வு - 2021

10ஆம் வகுப்பு                                                     தமிழ்                                                 காலம் : 1.30 மணி

                                                                                                                                மதிப்பெண் : 50

பகுதி – 1

I.                  சரியான விடையைத் தேர்வு செய்க:-                                                    10×1 = 10

 

1.       எந்தமிழ் நா என்பதனைப் பிரித்தால் இவ்வாறு வரும் _____________________

அ. எந் + தமிழ் + நா          ஆ. எம் + தமிழ் + நா         இ. எந்த + தமிழ் + நா         ஈ. எந்தம் + தமிழ் + நா

2.      “ கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது “ – இது தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே______________________

அ. பாடிய;கேட்டவர்           ஆ. பாடல்;பாடிய              இ. பாடல்;கேட்டவர்            ஈ. கேட்டவர்;பாடிய

      3.    வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை________________  அ. மணிவகை                  ஆ. குலை வகை               இ. கொழுந்து வகை     ஈ. இலை வகை

     4.     “ சிவப்புச் சட்டை “ பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?

            அ. பண்புத் தொகை           ஆ. உவமைத்தொகை         இ. அன்மொழித்தொகை      ஈ. உம்மைத் தொகை

      5.    வசன கவிதை வடிவத்தை தமிழில் அறிமுகப்படுத்தியவர் _______________

            அ. பாரதி தாசன்               ஆ. பெருஞ்சித்திரனார்        இ. கண்ணதாசன்              ஈ. பாரதியார்

      6.    வீசுதென்றல்,கொல்களிறு – தொகைச்சொற்களின் வகை என்ன?

            அ. வினைத்தொகை           ஆ. பண்புத்தொகை            இ. உவமைத்தொகை          ஈ. வேற்றுமைத்தொகை

     7.     அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் – ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

            அ. உவம உருபு                ஆ. வேற்றுமை உருபு         இ. எழுவாய்                     ஈ. உரிச்சொல்

     8.     கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் _______________

            அ. அழகிய பெரியவன்       ஆ. பிரபஞசன்                  இ. கி.ராஜநாராயணன்       ஈ. எஸ்.ராமகிருஷ்ணன்

     9.     தொகாநிலைத் தொடர்கள் _______________ வகைப்படும்

            அ.        7                      ஆ.        8                      இ.         9                      ஈ.         10           

    10.     உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ___________

            அ.  இந்தியா                    ஆ.  மலேசியா                  இ. இலங்கை                    ஈ. சிங்கப்பூர்

பகுதி – 2 பிரிவு – அ

   II.       எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி:- 

( 17 ஆவது வினா கட்டாய வினா )                       6×2= 12

 

11.         “ வேங்கை “ என்பதனைத் தொடர் மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக:-

v  வேங்கைமரம்தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

 

 

12.        “ மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே ! “ – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

v  சீவக சிந்தாமணி 

v  குண்டலகேசி

v  வளையாபதி

13.        வசன கவிதை – குறிப்பு வரைக:-

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

14.        தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

v  .தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

15.        ‘ எழுது என்றாள் ‘என்பது விரைவு காரணமாக,’ எழுது எழுது என்றாள் ‘ என அடுக்குத் தொடரானது ‘ சிரித்துப் பேசினார் ‘ எனபது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

உவகைக் காரணமாக சிரித்துசிரித்துப் பேசினார்.

16.        பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

·        கவிஞர்                       பெயர் பயனிலை

·        சென்றார்                      வினை பயனிலை

·        யார்                  -          வினா பயனிலை

17.        “ பல்லார் “ எனத் தொடங்கும் குறளை எழுதுக:-

.           பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

             நல்லார் தொடர்கை விடல்

18.        கரிசல் இலக்கிய எழுத்தாளர்களின் பெயர்களைக் கூறுக:-

            பா. செயப்பிரகாசம், பூமணி, வீர வேலுசாமி, சோ.தர்மன், வேல இராமமூர்த்தி

பரிவு – ஆ

III.          எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி : (22 ஆவது வினா கட்டாய வினா )                      4×3= 12

19.        தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

 

20.  புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

 

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

 

21.        தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

 

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

 

22.       “ தென்னன் மகளே ‘ எனத் தொடங்கும் மனப்பாடச் செய்யுளை அடிபிறழாமல் எழுதுக.

            தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

 

23.        கண்ணே கண்ணுறங்கு!

             காலையில் நீயெழும்பு!

             மாமழை பெய்கையிலே

            மாம்பூவே கண்ணுறங்கு!

              பாடினேன் தாலாட்டு!

            ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

 

 கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

உரிச்சொல் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

 

24.        காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத      

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி      

காற்று என் தேவையை பற்றி எழுது என்றது

மனிதன் என் தவிப்பைப்

பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று

 



 

பகுதி -3

IV.         அனைத்து வினாக்களுக்கு விடையளி:-                                                                                5×2= 10

25.        வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக:-

அ.         ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ.        நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

            நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

26.        எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

 

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

அ ) எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஆ) ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

 

27.        கலைச்சொல் தருக:-

அ) Vowel

உயிரெழுத்து

ஆ) Folk Literature

நாட்டுப்புற இலக்கியம்

 

28.        சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-

 

சொற்கள்

தொகை

தொடர்

அ ) இன்சொல்

பண்புத்தொகை

முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

ஆ ) முத்துப்பல்

உவமைத் தொகை

அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்

 

29.        இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. 

 

அ) மலை - மாலை

மலை மீது மாலையில் ஏறினான்

ஆ) விடு - வீடு

விடு அவன் வீடு செல்லட்டும்

 

பகுதி – 4

V. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி:-                                                                                               1×6= 6

30. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்

  வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.

 

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

           

31. மாநில அளவில நடைபெற்றமரம் இயற்கையின் வரம்என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        ஈரோடு.

நீங்கள்20 விநாடிகள் காத்திருக்கவும்

காத்திருப்புக்கு நன்றி

 

விடைக் குறிப்பு தயாரிப்பு:-

திரு. வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி, சேலம் – 637102.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post