9TH - EIGHT MARKS - QUESTION AND ANSWER

 

குறுவினாக்கள்

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

நெடு வினாக்கள்

அனைத்து இயல்கள்

குறைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்திற்கான முதல் மூன்று இயல்களுக்கான நெடு வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாணவர்கள் அனுதினமும் பயிற்சி எடுத்து வந்தால் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உண்டு. இந்த வினாக்கள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து புத்தக வினாக்கள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் இதனை பயிற்சி பெறவும். நாள் ஒன்றுக்கு ஐந்து வினாக்கள் வீதம் பயிற்சி பெற்று வந்தால் நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடையை விரைவில் புரிந்துக் கொண்டு படிக்க இயலும்.

இங்கு வினாக்கள் இயல் வாரியாக தொகுக்காமல் மொத்த வினாக்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கபட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதனை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொண்டாலும் சரி. இங்கு கொடுக்கப்பட்ட விடைகள் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீத்திற , நடுநிலை, மெல்லக் கற்கும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இது மிகுந்த பயன் அளிக்கும்.

மீத்திற மாணவர்கள் சற்று அதிக மதிப்பெண் பெற உங்கள் கையில் உள்ள தமிழ் புத்தகத்தில் மேலும் சில பதில்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கவும். அல்லது தங்களின் தமிழாசிரியரிடம் இதற்கு மேலும் சில பதில்களை குறித்துத் தர நீங்கள் கேட்டு குறித்து, படித்து உங்களின் கற்றலை மேம்படுத்தி மதிப்பெண்களை உயர்வாக வைத்துக் கொள்ளவும்.

வினாக்கள் தொகுப்பு

மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொண்டால் நீங்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு முறை ஆசிரியர் வைக்கும் போதும் வினாக்கள் எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாணவர்கள் இந்த குறுவினாக்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொள்க. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இங்கு வரிசையாக வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவை யாவும் புத்தகத்தின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மட்டுமே. மேலும் சில உள்ளார்ந்த வினாக்கள் எவையும் இங்கு சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்க.

வினாக்கள் தொகுப்பு

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

குறுவினா – வினாக்கள் தொகுப்பு

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

நெடுவினாக்கள்

1. . திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்த்துணையாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.?

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

3. பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து  எழுதுக.

4. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதன் காரணங்களை விவரிக்க:-

5.  பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-

 வினா - விடைகள்

மாணவர்கள் மேற்கண்ட வினாத்தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொண்டப்பின் ஒர் ஏட்டில் இந்த வினாக்களுக்கான விடைகளை எழுதிக் கொள்ளவும்.  ஏன் PDF வடிவம் கொடுக்கப்படவில்லை என்றால் பல மாணவர்கள் அதனை நகல் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எழுதுவும் பழக்கம் முற்றிலும் கைவிட்டு விட்டார்கள். முன்னர் விழாக்காலங்களில் இருந்த வாழ்த்து மடல் செய்தி அனுப்பும் பழக்கம் வழக்கொழிந்து போனதற்கு இன்றைய முகநூல், புலனம், மற்றும் இன்னும் பிற சமூக வலைதளங்கள் தான். இதனால் மாணவர்களுக்கு  எழுதும் பழக்கம் குறைந்து விடுகிறது. நாளடைவில் எழுத்துகளே அடையாளம் தெரியாத வண்ணம் ஆகிவிடுகிறது. இன்று பல மாணவர்கள் எழுத்துப் பிழையுடன் எழுதுவதை ஆசிரியர்கள் பலரும் கூறுவதை நானும் கூறி இருக்கிறேன். இதன் காரணம் சரியான எழுத்துப் பயிற்சி இன்மை என்பதே. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல தினமும் எழுத்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  எழுத்துப் பயிற்சி மாணவர்களுக்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக தான் PDF வடிவில் இந்த விடைகள் கொடுக்கப்படவில்லை.

பின்குறிப்பு : 

ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த வினா-விடைகள் தொகுப்பு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

 வினா - விடைகள்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

முதல் -3  இயல்கள்

நெடுவினா

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.?

ü  திராவிட மொழிகளின் ஒப்பியக் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

ü  தமிழ் என்ற சொல்லிருந்து திராவிடா என்ற சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று  விளக்குகிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியன ஒரே இனம்.

ü  ஹோக்கன் ,மாக்க்சுமுல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய  மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றனர்.

ü  கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றார். சமஸ்கிருத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்றார்.  

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

3. பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து  எழுதுக.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

ü  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.    

4. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதன் காரணங்களை விவரிக்க:-

ü  ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ü  ஆனால், தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

ü  அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்

5.  பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-

ü  ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டினையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.

ü  நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளை பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.

ü  மாட்டுப்பெங்கல் விழாவைப் பெரிய நிகழ்வாக கொண்டாட வேண்டும்.

ü  குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும், வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

6. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க:-

ü  மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o   தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

ü  முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

o   சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

o   அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

ü  நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன் இவர் எழுதிய நூல்கள்

7. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிடுக.

·        சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது.

·        இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.

·        சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர்

·        அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார்.

·        பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள்.

·        இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.

·        கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

·        இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள்.

8. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

·        உலகமெங்கும் வாழும் மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில் மனவளம் பெருக வேண்டும்.

·        வீட்டு நிலை மாற, வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்.

·        வீடுகளில் நற்பண்புகள் காண வேண்டுமெனில் வெள்ளி, பித்தளை, உடைகள், மருந்துகள், அணிகலன் போன்றவை இருப்பது போன்று புத்தகங்களும் இருக்க வேண்டும்.

·        உணவு,உடை,அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும் முதலிடம் புத்தகசாலைக்குத் தர வேண்டும்.

·        இதயத்தைப் பண்படுத்துவன புத்தகங்களே, மக்களின் மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே

·        சுப நிகவுகளில் புத்தகங்களை பரிசாக வழங்க முன் வர வேண்டும்.

·        உலக அறிவைத் தரக் கூடிய நூல்களும், வீட்டிற்கோர் திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

·        வீட்டின் புத்தகசாலையில் நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்கள் துயர் துடைத்தவர்கள், வீரர்கள்,விவேகிகள் குறித்த வாழ்க்கை வரலாறு நூல்கள் இருக்க வேண்டும்.

9. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த  இயற்கை எழில் காட்சிகளை விளக்குக.

·        குறிஞ்சி

o   அருவிகள் பறைபோல் ஒலி எழுப்புகிறது.பைங்கிளிகள் தமிழிசை பாட, மயில்கள் தோகை விரித்து ஆட, இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கிறது.

o   தீயிலிட்ட சந்தனத்தின் மணமும், உலையிலிட்ட மலைநெல்லரிசிச் சோற்றின் மணமும்,காந்தள் மலரின் மணமும் எங்கும் கமழ்ந்துக் கொண்டு இருக்கிறது.                

·        முல்லை

o   நாகணவாய் பறவைகள்,குயில்கள்,வண்டுகள் பாவிசைத்து பாடுகிறது.

o   ஆய்ர்கள் முக்குழல் இசையால் பசுக்களை ஒன்று சேர்ப்பர்.

o   முதிரை,சாமை,கேழ்வரகு,குதிரை வாலி,நெல் இவற்றை அறுத்து கதிரடிக்கும் சத்தம் கேட்டு மான்கள் அஞ்சியோடும்.

·        பாலை

o   செந்நாய் தனது நிழலில் தனது குட்டிகளை இளைப்பாறச் செய்யும்.சிறுவர்கள் பாலைக் காய்களை அடிக்கும் சப்தம் கேட்டு பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும்.

·        மருதம்

o   முல்லை நிலக் காட்டாறு பாய்ந்தோடும்.

o   வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும்.

o   தாமரைக் குளத்தில் சிறுவர்கள் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து மகிழ்வர்.வைக்கோற் போரில் ஏறி தென்னை இளநீரைப் பறித்து அருந்துவர்.

·        நெய்தல்

o   முத்துக்களையும்,பவளங்களையும் மலைபோல் கடற்கரையில் மக்கள் குவித்து வைப்பர்.

o   காற்றினில் சிறகை உலர்த்திய தும்பி பெண்களின் முகத்தை கடந்து செல்வது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சிபோல் உள்ளது.

10. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.

இந்திய தேசிய இராணுவம்:

               1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. ஆங்கிலப் படை வீரர்கள் ஜப்பானிடம் சரணடைந்தது.சரணடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு இந்திய தேசிய இராணுவம் என்ற படை உருவாக்கப்பட்டது.

இராணுவத்தில் தமிழர்கள் :

               தமிழகத்திலிருந்து பிழைப்பிற்காக மலேயா,பர்மா,சிங்கப்பூர் சென்ற பல தமிழர், இராணுவத்தில் சேர்ந்தனர். இராணுவத்தில் ஒற்றர் படையில் இருந்த தமிழர்களை, நீர் மூழ்கி கப்பலிலும்,தரை வழியாகப் பர்மாக் காடுகள் வழியாகவும் இந்தியாவுக்கு அனுப்பினர்.

தூண்களாக திகழ்ந்தவர்கள்:

               1943 ஆம் ஆண்டு சூலை 19 ஆம் நாள் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்றார். மாபெருங் கூட்டத்தில், “ டெல்லி நோக்கிச் செல்லுங்கள் “ எனப் போர் முழக்கம் செய்தார். தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமை பசும்பொன் முத்துராமலிங்கனாரைச் சாரும். தலைவராக இருந்த தில்லான் “ இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்,ஆத்மாவும் தமிழர்கள் தாம் “ என்றார்.

இராணுவத்தில் பெண்கள் படை:

               ஜான்சி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் இலட்சுமி,சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள்,அமைச்சர்களாக இருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் ;

               இந்திய தேசிய இராணுவம் ஆங்கிலேயரோடு போரிட பர்மா வழியாக இந்தியா வரத் திட்டமிடப்பட்டது. ஆங்கிலேயப் பிரதமர் சர்ச்சில் கோபமாக, “ தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது “ என்றார். அதற்கு நேதாஜி, “ இந்த தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் “ என்று கூறினார்.

11. ஏமாங்கத நாட்டின் வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

 

ஏமாங்கத நாடு

நமது ஊர்

தென்னையில் முற்றிய தேங்காய் விழுந்த வேகத்தில் தேனடை கிழிந்து தேன் சிந்தி, பலாமரத்தின் மீது விழுந்து பலாப்பழம் பிளந்தது,அருகில் இருந்த மாமரத்தில் விழுந்ததால் மாங்கனி சிதறியது, பின் வாழை மரத்தின் மீது விழுந்து வாழைப் பழங்கள் உதிர்ந்தது.

சோலைகள் எல்லாம் பாலைகளாகக் காட்சி அளிக்கின்றன. தென்னை மரங்கள் போதிய நீர்வளம் இல்லாமையால்,மெலிந்த மட்டைகளும், ஓலைகளும் கொண்டு காட்சியளிக்கின்றன.

மலையிலிருந்து வரும் வெள்ளம் நாட்டினுள் பாய்கிறது.

மழைக்காலத்தில் தோன்றும் புது வெள்ளம் ஊர்களில் பாய்கிறது.

நீர் வளம் நிறைந்துள்ளமையால் கழனிகள் சேறும் சகதியுமாக உள்ளன.

நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் நம்பி வயல்கள் உள்ளன.

வயல்களில் விளைச்சல் நன்றாக விளைந்து தலை சாய்ந்து இருக்கும்.

ஒரு பருவம் நன்றாக விளைந்தும்,அடுத்த பருவம் பயிர்கள் எல்லாம் காய்ந்து போவதைக் காணலாம்.

ஆயிரங்கணக்கான உணவு வகைகள், அறச்சாலைகள்,ஒப்பனை மண்டபங்கள்,திருமணக் கூடங்கள் இருக்கின்றன. அங்கு இல்லாததது எதுவும் இல்லை.ஆயிரங்கணக்கான நிகழ்வுகள் நிகழ்கின்றன.

ஊர் திருவிழா, திருமணம், தேர்தல் நேரங்களில் மட்டும் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழ்கின்றன,

 

12. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

மொழி குறித்த பெரியாரின் சிந்தனை:

மிகப் பழமையான நமது தாய்மொழியில், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்படல் வேண்டும். மொழியோ,நூலோ,இலக்கியமோ மனிதனுக்கு மானம்,பகுத்தறிவு,வளர்ச்சி,நற்பண்பு ஆகிய தன்மைகளை உருவாக்க வேண்டும் என சிந்தித்தார்.

மொழி கற்க எளிதாக அமைதல் :

               இலக்கியங்கள் மூலம் தான் மேன்மை அடைய முடியும். மக்களும் அறிவுடையவர்களாக மாற முடியும்.மொழியானது எளிதாக கற்கும் வகையில் அமையும் போது பல நூல்களை பயில முடியும். அதன் மூலம் அறிவார்ந்த சமுதாயம் வளரும்.

தமிழ்மொழிச் சீர்திருத்தம்:

               உயிர் எழுத்துகளில் “ ஐ “ என்பதனை “ அய் “ எனவும்,’ ஒள’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். உயிர் எழுத்துகளின் முரண்பாட்டு வரிவடிவங்களையும் மாற்றியமைத்தார். இம்மாற்றத்தை 1978 ஆம் ஆண்டு தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்தியது.

13. “ தாய்மைக்கு வறட்சி இல்லை “ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத் தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

குடும்பம்:                                                                                                                         

கர்நாடக மாநிலம் குல்பர்கா நகர்த் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடிசை ஒன்று இருந்தது. அந்த குடிசை முன் குடும்பமே சுருண்டு கிடந்தது. அந்த குடிசையில் தோட்டக்காரனும் அவன் மனைவியும்,இரண்டு குழந்தைகளும் வாழ்ந்து வந்தனர்.

ஜீப்பில் வந்த அதிகாரி:

               குடிசை முன் ஜீப் ஒன்று வந்து நின்றது. ஜீப்பில் நாற்பத்தி ஐந்து வயதுடைய அதிகாரி இறங்கி வந்தார். அதிகாரியைப் பார்த்தவுடன் படுத்துக் கிடந்தவனுக்கும் பயன் படித்தது.

தோட்டக்காரனும்,தட்டுப் பிரியாணியும் :

               அதிகாரி பாதிப் பிரியாணி தட்டை அவனிடம் நீட்டினார்.அவனும் தயங்கி நின்ற போது தோளில் தட்டிக் கொடுத்து வீட்டை நோக்கித் தள்ளினார். மனைவியைப் பார்த்து பயத்தோடு நடந்தான்.

பிள்ளையும், தாயும்:

               வறுமையிலும் மானம் பெரிது என்பதனை அவள் கண்களால் உணர்த்தினாள். குழந்தைகளுக்கும் பசி,அவளுக்கும் பசி, நாய்களுக்கும் பசி. அதேசமயம் கொண்டு வந்த சப்பாத்தி மற்றும் பிரியாணியுடன் வைத்தாள் .காணாதைக் கண்ட மகிழ்ச்சியில் அமைவரும் சுவைத்தார்கள்.

அதிகாரியின் அன்பு :

               “உன்னை மாதிரியே கஷ்டப்பட்ட தாய்க்குதான் நான் பிறந்தேன். உன்னை தாயாக நினைத்து கொடுக்கிறேன் “என்றார் அதிகாரி. அவளுக்கு தமிழ் தெரியவில்லை. இருப்பினும் ஆன்மா தெரிந்தது, மனிதம் புரிந்தது.

உண்மைத் தாயுள்ளம் :

               நாய்க் குட்டிகள் இரண்டும் பசியால் ஓல ஒலியிட்டு அதிகாரியின் கால்களை சுற்றி,சுற்றி வந்தது. அவள் தட்டை கீழே வைத்து நாய்க் குட்டிகளை வாரி எடுத்து, முதுகில் தடவிக் கொடுத்தாள்,பின் தனக்கு கிடைத்த உணவை சிறு சிறு கவளமாக நாய்க்குட்டிகளுக்கு ஊட்டி விட்டாள். தட்டில் உணவு குறைய குறைய அவளின் தாய்மைக் கூடிக் கொண்டே வந்தது.

WWW.TAMILVITHAI.COM 

 


நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post