9TH - UNIT 2 - ONLINE QUIZ

 

ஒரு மதிப்பெண் வினாக்கள்

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

1 மதிப்பெண்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து குறைக்கப்பட்ட தமிழ் பாடப்பகுதிக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் இயல் வாரியாக தொகுத்து வழங்கலாம் என நிர்ணயம் செய்து. ஒவ்வொரு இயல்களாக வினாக்கள் உருவாக்கப்பட்டு அவை உங்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் இங்கு காணும் வினாக்களை தனித்தாளில் எழுதிக் கொள்ளவும். எழுதுவதின் நோக்கமே நினைவில் கொள்வதற்கு தான். இந்த வினாக்கள் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கும் மிக உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இங்கு கொடுக்கப்படும் வினாக்களின் நான்கு விடைகளில் மிகப் பொருத்தமான விடையை கொடுத்துள்ளோம். மாணவர்கள் தாங்கள் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டதை தேர்வாக நடத்தினால் சிறப்பாக இருக்கும். எனக் கருதி இந்த வினாத் தொகுப்பிக் கீழ் இணைய வழித் தேர்வு வைக்கப்படுள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு தயாராகுபவர்கள் ஒவ்வொரு வினாவிற்கும் 20  விநாடிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 60 வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு  தேர்வு எழுதும் மாணவகள்  மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில்  இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 60 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.  

மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை  அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின்  இணைய வழி தேர்வு எழுதவும்.

நன்றி,வணக்கம்

வினாக்கள் தொகுப்பு

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் – வினாக்கள் தொகுப்பு

இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில் 

குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்

1. பெரியபுராணம்

2. புறநானூறு

 இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  அனைத்து  பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள்  குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து  உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைய வழித் தேர்வு :

            மாணவர்கள் / போட்டித் தேர்வு தயாராகுபவர்கள் இந்த வினாத் தொகுப்பின் கீழ்த் தோன்றும் இணைய வழித் தேர்வில் தங்களின் பெயர் மற்றும் பள்ளீயின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வில் பங்கேற்கவும்.

மேற்கண்ட படத்தில் உள்ளவாறு  பெயர் மற்றும் பள்ளி பெயர் உள்ளீடு செய்தப் பின் START THE QUIZ என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் வினாக்கள் இருக்கும் பகுதிக்கு செல்வீர்கள்.

இவ்வாறுத் தோன்றும் வினாக்களில்  மேலே 13 என்ற இடத்தில்  தோன்றுவது ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ள 20 விநாடிகள் குறைந்துக் கொண்டு வருவதனைக் காணலாம். SCORE என்னுமிடத்தில் அந்த வினாவிற்கு சரியாக பதிலளிக்கும் பட்சத்தில் உங்களின் மதிப்பெண்ணை ஒவ்வொரு வினாவிற்கும் கூடிக்கொண்டு வருவதனைக் காணலாம். அடுத்ததாக அடுத்த வினாவிற்கு செல்ல NEXT QUESTION  என்பதனை தெரிவு செய்யவும் .

இவ்வாறாக நீங்கள் 60 வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் . இறுதியில் நீங்கள் 60 வினாவிற்கு எத்தனை வினாக்களுக்கு சரியான பதிலைத் தந்துள்ளீர்கள். எத்தனை வினாக்களை தவறவிட்டீர்கள் மற்றும் உங்களின் சராசரி சதவீதம் எவ்வளவு எனபதனைக்  உங்கள் பெயர் மற்றும் பள்ளி பெயருடன் காட்டும். போட்டித் தேர்விற்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் SCHOOL NAME என்பதில் உங்களின் மாவட்டத்தின் பெயரை தட்டச்சு செய்துக் கொள்ளவும்.

அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தேர்வினை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். வரையறைக் கிடையாது. 

முயற்சி,பயிற்சி,வெற்றி

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

இயல் – 2

உயிருக்கு வேர்

1.       திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலை எழுதியவர் __________

அ. சுந்தரர்         ஆ. நம்பியாண்டார் நம்பி            இ. சேக்கிழார்    ஈ. அப்பர்

      2. அடியவர்களின் பெருமையை ஓர் அடியில் கூறும் நூல் ___________

 அ. திருத்தொண்டர் திருந்தாதி         ஆ. பெரிய புராணம்       இ. அந்தாதி      

ஈ. திருத்தொண்டத் தொகை

    3. திருத்தொண்டத் தொகை, திருத் தொண்டர் திருவந்தாதி என்ற இரு  நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்______________

 அ. புறநானூறு   ஆ. கலித்தொகை           இ. பெரியபுராணம் ஈ. அந்தாதி

4. பெரிய புராணத்தில் சிறப்பிக்கப்பட்ட அடியார்களின் எண்ணிக்கை _____          

அ.        63            ஆ.       80         இ. 90               ஈ.108

5. சேக்கிழார் காலம் _______________

அ. 17 ஆம் நூற்றாண்டு   ஆ. 18 ஆம் நூற்றாண்டு               இ. 10 ஆம் நூற்றாண்டு   

ஈ. 12ஆம் நூற்றாண்டு

6. சேக்கிழார் யாருடைய அவையில் முதலமைச்சராக இருந்தார்?

அ. ராஜ ராஜ சோழன்      ஆ. அரிமர்த்தன பாண்டியன்      இ. இரண்டாம் குலோத்துங்கன்        ஈ. முதலாம் குலோத்துங்கன்

7. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என பாராட்டப்படுபவர் யார்?

அ. சுந்தரர்         ஆ. நம்பியாண்டார் நம்பி            இ. சேக்கிழார்     ஈ. அப்பர்

8. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என திருத்தொண்டர் புராண ஆசிரியரைப் பாராட்டியவர்______________

அ. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்                   ஆ. திரு.வி.க                 

இ. உ.வே.சா                                                      ஈ. நக்கீரர்

9. விரிமலர் – இலக்கணக் குறிப்பறிக:-

அ. வேற்றுமை                ஆ. பண்புத்தொகை         இ. வினைத்தொகை 

. உவமைத் தொகை

10. பாய் + வ் + அன் + அ = “ அன் “ பெறும் இடம் யாது?

அ. பகுதி           ஆ. எதிர்கால இடைநிலை          இ. சாரியை    ஈ. விகாரம்

11. பண்புத் தொகைகான சொல்லை தேர்ந்தெடு:-

அ. தடவரை       ஆ. கருங்குவளை           இ. விரிமலர்      ஈ. மாநிலம்

12. காடெல்லாம் – பிரித்து எழுதுக:-

அ. காடு + டெல்லாம்       ஆ. கா + எல்லாம்          இ. காடு + எல்லாம்    ஈ. கா +டெல்லாம்

13. சங்கு என்ற சொல்லைக் குறிக்கக் கூடிய சொல்லைத் தேர்ந்தெடு:-

அ. தரளம்         ஆ. குழை          இ. மேதி            ஈ. பணிலம்

14. நாளிகேரம் என்பது எந்த மரத்தைக் குறிக்கிறது __________

அ. நாகமரம்       ஆ. தென்னை மரம்        இ. பனை மரம்               ஈ. பச்சிலை மரம்

15. அரசமரத்தை குறிக்கக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு:-

அ. தமாலம்       ஆ. காஞ்சி                     இ. கோளி                      ஈ. சாலம்

16. வேரி என்பது எதனைக் குறிக்கக் கூடியச் சொல்___________

அ. நெல்            ஆ.தேன்                        இ. கரும்பு                     ஈ. மலையுச்சி

17. வரப்புயர நீர் உயரும் நீர் உயர ______________ உயரும் – கோடிட்ட இடத்தில் வரும் சொல் எது?

அ. ஏரி              ஆ. நெல்           இ. நீர் மட்டம்     ஈ. செல்வம்

18. மேதி என்பது எதனைக் குறிக்கும் சொல்_________

அ. சங்கு           ஆ. சோலை       இ. எருமை        ஈ. மலர்

19. தடவரை – இலக்கணக் குறிப்பு தருக:-

அ. இடைச்சொல் தொடர்             ஆ. உரிச்சொல் தொடர்              

இ. பண்புத்தொகை                     ஈ. வினைத்தொகை

20. வாவி என்பது எதனைக் குறிக்கும் சொல் ______________________

அ. வண்டு         ஆ. முத்து          இ. பொய்கை                  ஈ. கடல்

21. மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு

     பூவி ரித்த புதுமதுப் பொங்கிட – இவ்வடியில் காணப்படும் நயம்------

அ. எதுகை        ஆ.மோனை       இ.இயைபு                     ஈ. முரண்

22. இரண்டாம் குலோத்துங்கன் ___________ மரபைச் சார்ந்தவன்

அ. பாண்டிய     ஆ. சோழ           இ. சேர                          ஈ. பல்லவ

23.நீர் நிலையை உருவாக்குபவர்கள் ______________ என்று போற்றினர்.

அ. பாதுகாவலர்  ஆ.அரசர்கள்      இ. உயிரை உருவாக்குபவர்கள்   ஈ.கடவுளர்

24. நல்லிசை என்பதன் இலக்கண குறிப்பு யாது?

அ. வினைத்தொகை       ஆ. பண்புத்தொகை         இ. இருபெயரொட்டு பண்புத்தொகை                      ஈ. உவமைத் தொகை

25. புறநானூறு ______________ நூலகளுல் ஒன்று

அ. பதினெண் கீழ்கணக்கு          ஆ, பதினெண் மேற்கணக்கு

இ. தனிப்பாடல் திரட்டு                ஈ. எட்டுத் தொகை

26. யாக்கை என்பதன் பொருள் யாது?

அ. கை             ஆ. உடம்பு        இ. கால்            ஈ. இதயம்

27. வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது ____________

அ. பொதுவியல்             ஆ. கைக்கிளை              இ. பெருந்திணை

ஈ. பாடாண் திணை

28. நீரும் நிலமும் – இலக்கணக் குறிப்பு யாது?

அ. தொழிற்பெயர்            ஆ. ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்

இ.எண்ணும்மைகள்      ஈ. வினையாலணையும் பெயர்

29. கொடுத்தோர் – என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

அ. தொழிற்பெயர்            ஆ. ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்

இ.எண்ணும்மைகள்      ஈ. வினையாலணையும் பெயர்

30. முதுமொழிக்காஞ்சித் துறை என்பது அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பொருளின் _____________ தன்மையைக் கூறுகிறது.

அ. இயல்பு        ஆ. உயர்வு        இ. உறுதி         ஈ. சிறப்பு


Created By Html Quiz Generator

Time's Up

score :

Name : Apu

Roll : 3

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post