9TH - UNIT 1 - ONLINE QUIZ

 

ஒரு மதிப்பெண் வினாக்கள்

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

1 மதிப்பெண்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து குறைக்கப்பட்ட தமிழ் பாடப்பகுதிக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் இயல் வாரியாக தொகுத்து வழங்கலாம் என நிர்ணயம் செய்து. ஒவ்வொரு இயல்களாக வினாக்கள் உருவாக்கப்பட்டு அவை உங்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் இங்கு காணும் வினாக்களை தனித்தாளில் எழுதிக் கொள்ளவும். எழுதுவதின் நோக்கமே நினைவில் கொள்வதற்கு தான். இந்த வினாக்கள் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கும் மிக உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இங்கு கொடுக்கப்படும் வினாக்களின் நான்கு விடைகளில் மிகப் பொருத்தமான விடையை கொடுத்துள்ளோம். மாணவர்கள் தாங்கள் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டதை தேர்வாக நடத்தினால் சிறப்பாக இருக்கும். எனக் கருதி இந்த வினாத் தொகுப்பிக் கீழ் இணைய வழித் தேர்வு வைக்கப்படுள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு தயாராகுபவர்கள் ஒவ்வொரு வினாவிற்கும் 20  விநாடிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 60 வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு  தேர்வு எழுதும் மாணவகள்  மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில்  இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 60 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.  

மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை  அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின்  இணைய வழி தேர்வு எழுதவும்.

நன்றி,வணக்கம்

வினாக்கள் தொகுப்பு

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் – வினாக்கள் தொகுப்பு

இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில் 

குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்

1. திராவிட மொழிக் குடும்பம்

2. தமிழோவியம்

3. தமிழ் விடு தூது

4. தொடர் இலக்கணம்

 இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  அனைத்து  பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள்  குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து  உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைய வழித் தேர்வு :

            மாணவர்கள் / போட்டித் தேர்வு தயாராகுபவர்கள் இந்த வினாத் தொகுப்பின் கீழ்த் தோன்றும் இணைய வழித் தேர்வில் தங்களின் பெயர் மற்றும் பள்ளீயின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வில் பங்கேற்கவும்.

மேற்கண்ட படத்தில் உள்ளவாறு  பெயர் மற்றும் பள்ளி பெயர் உள்ளீடு செய்தப் பின் START THE QUIZ என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் வினாக்கள் இருக்கும் பகுதிக்கு செல்வீர்கள்.

இவ்வாறுத் தோன்றும் வினாக்களில்  மேலே 13 என்ற இடத்தில்  தோன்றுவது ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ள 20 விநாடிகள் குறைந்துக் கொண்டு வருவதனைக் காணலாம். SCORE என்னுமிடத்தில் அந்த வினாவிற்கு சரியாக பதிலளிக்கும் பட்சத்தில் உங்களின் மதிப்பெண்ணை ஒவ்வொரு வினாவிற்கும் கூடிக்கொண்டு வருவதனைக் காணலாம். அடுத்ததாக அடுத்த வினாவிற்கு செல்ல NEXT QUESTION  என்பதனை தெரிவு செய்யவும் .

இவ்வாறாக நீங்கள் 60 வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் . இறுதியில் நீங்கள் 60 வினாவிற்கு எத்தனை வினாக்களுக்கு சரியான பதிலைத் தந்துள்ளீர்கள். எத்தனை வினாக்களை தவறவிட்டீர்கள் மற்றும் உங்களின் சராசரி சதவீதம் எவ்வளவு எனபதனைக்  உங்கள் பெயர் மற்றும் பள்ளி பெயருடன் காட்டும். போட்டித் தேர்விற்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் SCHOOL NAME என்பதில் உங்களின் மாவட்டத்தின் பெயரை தட்டச்சு செய்துக் கொள்ளவும்.

அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தேர்வினை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். வரையறைக் கிடையாது. 

முயற்சி,பயிற்சி,வெற்றி

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

இயல் – 1

 அமுதென்று பேர்

1.    திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது_________________

         அ. தமிழ்              ஆ. தெலுங்கு                 இ. மலையாளம்             ஈ. கன்னடம்

    2.  இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ---------------------- 

    அ. 1400                  ஆ. 1300                        இ. 1600                        ஈ. 1700

3.  இந்தியாவில் உள்ள மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கின்றனர்?

அ. 6                       ஆ. 7                             இ. 4                             ஈ. 8

4. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது  எனக் கூறியவர் ____________

அ. குமரிலபட்டர்       ஆ. வில்லியம் ஜோன்ஸ்      இ. ராஸ்க்                     

ஈ. ச. அகத்தியலிங்கம்

5. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர்_____________

அ. குமரிலபட்டர்       ஆ. வில்லியம் ஜோன்ஸ்      இ. ராஸ்க்                     

ஈ. ச. அகத்தியலிங்கம்

6. தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என விளக்கியவர் _________

அ. குமரிலபட்டர்       ஆ. வில்லியம் ஜோன்ஸ்  இ.ஹீராஸ் பாதரியார்                              ஈ. ச. அகத்தியலிங்கம்

7. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் ____________

அ. குமரிலபட்டர்       ஆ. வில்லியம் ஜோன்ஸ்  இ.ஹீராஸ் பாதரியார்                 

ஈ. ச. அகத்தியலிங்கம்

8. தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் -இம்மொழிகளை ஒரே இனமாக் கருதித் தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் ________________

அ. குமரிலபட்டர்       ஆ. வில்லியம் ஜோன்ஸ்  இ.ஹீராஸ் பாதரியார்                  

ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்

9. மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் தமிழியன் என குறிப்பிட்டவர் ______________

அ. ஹோக்கன்          ஆ. வில்லியம் ஜோன்ஸ்  இ.ஹீராஸ் பாதரியார்                

  ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்

10. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – என்னும் நூலை எழுதியவர் _________________

அ. ஹோக்கன்          ஆ. கால்டுவெல்              இ.ஹீராஸ் பாதரியார்                  

ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்

11. கீழ்க்கண்டவற்றில் ஒன்று தென் திராவிட மொழிக்குடும்பத்தை சேராதது________________

அ. தமிழ்                 ஆ. கன்னடம்                இ.மலையாளம்                          ஈ. பிராகுயி

12. திராவிட மொழிகள் மொத்தம் ________________

அ. 32                     ஆ. 28                           இ.40                                        ஈ. 25

13. மூன்று என்பது தமிழ்மொழி -மூரு என்பது மொழி _____________

அ. மலையாளம்       ஆ. தெலுங்கு                 இ.கன்னடம்                              ஈ. துளு

14. பாரதம் என்னும் இலக்கியம் ________ மொழிக்குரியது.

அ. மலையாளம்       ஆ. தெலுங்கு                 இ.கன்னடம்                              ஈ. துளு

15. பணத்தாள்களில் தமிழ்மொழி இடம் பெறாத நாடு _______________

அ. அமெரிக்கா         ஆ. மொரிசியஸ்              இ. இலங்கை                            

ஈ. இந்தியா

16. உலகத் தாய்மொழி நாள் ---------------

அ. மார்ச் 21             ஆ. ஏப்ரல் 21                 இ. பிப்ரவரி 21                           ஈ. ஜனவரி 21

17. இனிமையும் நீர்மையும்  தமிழெனல் ஆகும் – இவ்வரிகள் இடம் பெறும் நூல் -------------

அ. குறுந்தொகை      ஆ. பெரியபுராணம்         இ. பிங்கல நிகண்டு                  

ஈ. தொல்காப்பியம்

18. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடு ----------------

அ. ஆஸ்திரேலியா    ஆ. ஜப்பான்                   இ. இந்தியா                            

  ஈ. சிங்கப்பூர்

19. ஏந்தி – என்பதன் இலக்கண குறிப்பு _______________

அ. பெயரெச்சம்         ஆ. வினையெச்சம்         இ. உவமை                             

  ஈ. உருவகம்

20. கவிதையின் புதுப்புது வடிவங்களில் ஒன்று வேறுபட்டுள்ளது _____________

அ. மரபுக் கவிதை     ஆ. ஹைக்கூ                 இ. சென்ரியு                            

  ஈ. லிமரைக்கூ

21. “ வணக்கம் வள்ளுவ “ என்ற் நூலுக்கு எந்த ஆண்டு சாகத்திய அகாதெமி விருது கிடைக்கப்பெற்றது?

அ. 2006                  ஆ. 2004                       இ. 2007                                    ஈ. 2008

22. சித்தர் மரபிலே தீதறுக்கும் – புதுச்

      சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே – இவ்வடிகளில் காணப்படும் நயம் யாது?

அ. முரண்               ஆ. எதுகை                    இ. இயைபு                                ஈ. மோனை

23. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்டு எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்______________

அ. பள்ளு                ஆ. குறம்                       இ. கண்ணி                              ஈ. குறள்

24.தமிழ் விடுதூது கூறும் :  வண்ணங்கள் _____________, குணம் __________, சுவை _____

அ. 10,3,8                 ஆ. 100,3,8                     இ. 100,10,10                               ஈ. 100,10,9

25. தமிழ் விடு தூது என்ற நூலை  பதிப்பித்தவர் _____________

அ. ஜி.யு. போப்         ஆ. உ.வே.சா                  இ. கால்டுவெல்                         

 ஈ. வீரமாமுனிவர்

26. தமிழ் விடு தூது எந்த ஆண்டு  பதிப்பிக்கப்பட்டது ___________________

அ. 1935                   ஆ. 1926                        இ. 1930                                     ஈ. 1929

27. சந்து இலக்கியம் என வழங்கப்படுவது எது ?

அ. குற்றால குறவஞ்சி          ஆ. நளவெண்பா            இ. தூது                        ஈ. குறள்

28. தூது என்பது _________ பாவால் இயற்றப்படுவது.

அ. வஞ்சிப்பா           ஆ. கலிவெண்பா            இ. ஆசிரியப்பா                          

ஈ. பஃறொடை வெண்பா

29. தமிழ் விடு தூது – வில் உள்ள கண்ணிகள் மொத்தம் ______________

அ. 100                    ஆ. 150                          இ. 268                                      ஈ. 300

30. மாலையை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாக ____________ தூது விடப்படுவது வழக்கம்.

அ. 20                     ஆ. 10                           இ. 30                                       ஈ. 15

31. முத்திக் கனி – இலக்கண குறிப்பு தருக :-

அ. உவமை             ஆ. வேற்றுமை               இ. உருவகம்                             

ஈ. பண்புத்தொகை

32. தெள்ளமுது – இலக்கண குறிப்பு தருக.

அ. உவமை             ஆ. வேற்றுமை               இ. உருவகம்                           

  ஈ. பண்புத்தொகை

33. குற்றமிலா – என்பதன் இலக்கண குறிப்பு தருக:-

அ. உவமை             ஆ. ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்       இ. உருவகம்     

ஈ. பண்புத்தொகை

34. கொள் + வ் + ஆர்  - பகுபத உறுப்பில் எதிர்கால இடைநிலையாக அமைவது எது?

அ. கொள்                ஆ. வ்                இ. ஆர்                         ஈ. அனைத்தும்

35. உணர் + த்(ந்) + த் + அ – பகுபத உறுப்பில் (ந்) எவ்வாறு இடம் பெறும்?

அ. விகாரம்             ஆ. பகுதி           இ. இடை நிலை            ஈ, விகுதி

36. காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் – இவ்வடியில் இடம் பெறும் இலக்கியங்கள் முறையே____________,______________

அ. சிலப்பதிகாரம்,வளையாபதி           ஆ. குண்டலகேசி,மணிமேகலை              

இ. குண்டலகேசி, வளையாபதி                ஈ. சீவகசிந்தாமணி, வளையாபதி

37. நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க – இவ்வடியில் திருக்குறள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?

அ. கல்வி                ஆ. நேர்மை                    இ. நீதி                                      ஈ. வணிகம்

38. இயல்,இசை,நாடகம் என்பது ___________

அ. முத்தமிழ்            ஆ. முக்கனி                   இ. முக்குணம்                            ஈ. முப்படை

39. தூங்கிசை முதல் இடை மெல்லிசை ஈறாக நூறுக் கொண்டது ----------

அ. குணம்              ஆ. பாவினம்                 இ. வண்ணம்                            ஈ. சுவை

40. கண்ணன் கவிதை எழுதினான் – இதில் பயனிலை எது?

அ. கண்ணன்         ஆ. எழுதினான்             இ. கவிதை                                

ஈ. எதுவுமில்லை

41. பொருத்துக:-

அ. வந்தாய்                         -          1. வினாப் பயனிலை

ஆ. நான் வந்தேன்                -          2. பெயர்ப் பயனிலை

இ. எழுதியவன் முகில்          -          3. தோன்றா எழுவாய்

ஈ. வந்தவன் யார்?                -          4. வினைப் பயனிலை

அ. அ-4,ஆ-3,இ-2,ஈ-1                   ஆ. அ-3,ஆ-4,இ-2,ஈ-1             இ.அ-3,ஆ-4,இ-1,ஈ-2         

ஈ. அ-1,ஆ-2,இ-3,ஈ-4

42. நல்ல நூல் ஒன்று படித்தேன் – இதில் வந்த பெயரடைச் சொல்-------------

அ. நூல்                  ஆ. ஒன்று         இ. படித்தேன்                             ஈ. நல்ல

 

43. உரை கவிதாவால் படிக்கப்பட்டது – இதன் பயன்பாட்டு தொடர்?

அ. தன்வினை        ஆ. செய்வினை             இ. உடன்பாட்டுவினைத் தொடர்             

ஈ. செயப்பாட்டுவினைத் தொடர்

44. இது தனி உறுப்பு அன்று – பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்

அ. பகுதி                 ஆ. விகாரம்                   இ. விகுதி                                 ஈ. சந்தி

45. “ ஆயிற்று,போயிற்று,போனது “ முதலான துணை வினைகள் _____________ வினைகளை உருவாக்குகின்றன

அ. உடன்பாட்டு        ஆ. தன்வினை              இ. பிறவினை                          

ஈ. செயப்பாட்டு

46. பகுதி – என்னும் உறுப்பின் பண்புகளில் ஒன்று மாறுபட்டுள்ளது. அது_________

அ. பகாப்பதமாக வரும்                      ஆ. சொல்லின் முதலில் நிற்கும்             

இ. காலம் காட்டும்        ஈ. அறுவகை பெயராகவும் வரும்

47. பகுதிக்கும்,இடைநிலைக்கும் இடையில் வரும் உறுப்பு _______________

அ. சாரியை             ஆ. சந்தி                       இ. விகாரம்                               ஈ. விகுதி

48. பகுதிக்கும்,விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் உறுப்பு _______________

அ. சாரியை             ஆ. சந்தி                       இ. இடைநிலை                         ஈ. விகுதி

49. சொல்லின் இறுதியில் நின்று திணை,பால்,எண்,இடம்,காட்டுவதாகவும் அமையும் உறுப்பு _______

அ. சாரியை             ஆ. சந்தி                       இ. விகாரம்                               ஈ. விகுதி

50. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ____________

அ. சாரியை             ஆ. எழுத்துப்பேறு                        இ. விகாரம்                             

  ஈ. விகுதி

51. பெரும்பாலும் எழுத்துப்பேறாக வரும் எழுத்து ___________

அ. வ்                      ஆ. ம்                                        இ. த்                                        ஈ. ப்

52. எழுத்துப்பேறு ____________ இடத்தில் வரும்.

அ. சாரியை             ஆ. சந்தி                       இ. விகாரம்                               ஈ. விகுதி

53. பொருத்தமான செயப்படுபொருளை எழுதுக:  நல்ல நூல்கள் ___________ நல்வழிப்படுத்துகின்றன.

அ. தமிழிலக்கிய நூல்கள்     ஆ. செவ்விலக்கியங்களை           இ. நம்மை        

 ஈ. வாழ்வியல் அறிவைக்

54. பொருத்தமான பெயரடையை எழுதுக:-

________________ விலங்கிடம் பழகாதே

அ. நல்ல                 ஆ. பெரிய                      இ. இனிய                                ஈ. கொடிய

55. பொருத்தமான வினையடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

சங்க இலக்கியம் வாழ்க்கையை ______________  காட்டுகிறது.

அ. அழகாக             ஆ. பொதுவாக                இ. வேகமாக                              

 ஈ. மெதுவாக

56. இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் _______ காட்டு. இத்தொடருக்கு பொருத்தமான வினையடையைக் காண்க.

அ. அழகாக             ஆ. பொதுவாக                இ. வேகமாக                              

 ஈ. மெதுவாக

57. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! – எந்தக்

      காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே – இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

அ. முரண்,எதுகை,இரட்டைத் தொடை      ஆ.இயைபு,அளபெடை,செந்தொடை        

இ. மோனை,எதுகை,இயைபு                         ஈ. மோனை, முரண்,அந்தாதி

58. தமிழ் விடு தூது _____________ என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.

அ. தொடர்நிலைச் செய்யுள்                           ஆ. புதுக்கவிதை           

  இ. சிற்றிலக்கியம்     ஈ. தனிப்பாடல்

59. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக:-

அ. ____________ இனம்                        ஆ. வண்ணம் ___________

இ. _____________குணம்                      ஈ. வனப்பு--------------

அ. மூன்று,நூறு,பத்து,எட்டு                            ஆ, எட்டு, நூறு, பத்து, மூன்று                  

இ. பத்து, நூறு, எட்டு, மூன்று                         ஈ.  நூறு, பத்து, எட்டு, மூன்று

60. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு__

அ. வேற்றுமைத் தொகை                   ஆ. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்        

இ. பண்புத்தொகை                            ஈ. வினைத் தொகை

 

 

 இயல் -2க்கான இணைய வழித் தேர்வு - இங்கே சொடுக்கவும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

 

 


Created By Html Quiz Generator

Time's Up

score :

Name : Apu

school : 3

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post