ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் 21-12-2021 அன்று முதல் 24-12-21 வரை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆயத்த திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அதில் இன்னும் சில தேர்வுகள் நடத்தப்படவில்லை. அரையாண்டு விடுமுறை முடிந்து 04-01-2022 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாள்கள் PDF கோப்பாக வழங்கப்படுகிறது. இந்த வினாத்தாளானது எதிர் வரும் முதல் திருப்புதல் தேர்வுக்கு தயாராவதற்கு ஆயத்தமாக இருக்கும். ஏற்கனவே இந்த வலைதளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் வினாக்களுடன் கூடிய விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வினாத்தாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த பல்வேறு மாவட்ட வினாத்தாளினை பயிற்சி செய்யுங்கள். நிச்சயம் அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். நீங்கள் நன்கு படித்து எதிர் வரும் திருப்புதல் தேர்வில் நன்மதிப்பு பெற வேண்டும் .மேலும் தமிழ்விதை என்ற வலைதளமானது இன்னும் பல வடிவிலான வினாத்தாளினை உங்களுக்கு வழங்கும். அவற்றையும் பயிற்சி செய்யுங்கள். இந்த திருப்புதல் தேர்வுகளானது தங்களின் கற்றலை மதிப்பீடு செய்வதற்கு என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்கள் உங்களுக்கு
WWW.THAM IZHVITHAI.COM என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த வலைதளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்குரிய பாடத்திட்டங்களும், தேர்வு கால அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தளத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு, இரண்டு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு, மூன்று மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு, எட்டு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு மற்றும் முதல் ஐந்து இயல்களுக்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் இணைய வழித் தேர்வாகவும் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதுவரை அதனை பயிற்சி செய்யவில்லை எனில் இந்த மீதமுள்ள விடுமுறை தினங்களில் பயிற்சி செய்யுங்கள்.
தற்போது இந்த பதிவில் நீங்கள் பத்தாம் வகுப்புக்குரிய சேலம் மாவட்டம் ஆயத்த திருப்புதல் தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கு விடையளிக்க பயிற்சி செய்யவும். உங்களிடம் கிடைக்கும் பலவேறு மாவட்ட வினாத்தாளினை நன்கு கூர்ந்து கவனியுங்கள் எந்த வினாக்கள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கிய வினாக்கள் என்பதனை உணருங்கள். அந்த வினாக்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள்தாங்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள எழுதி எழுதி பாருங்கள். அப்போது தான் எழுத்துப் பிழை உங்களை அணுகாது. தமிழில் எழுத்துப்பிழை மதிப்பெண் குறைவு ஏற்படும். அதனால் மாணவர்கள் தாங்கள் படித்ததை பல முறை வீட்டில் எழுதி பாருங்கள். மனப்பாடப்பாடல்களை முடிந்த வரை இராகமாகப் பாடி மனனம் செய்யுங்கள். தமிழ்விதை என்ற வலையொளியில் ( தமிழ் விதை YOUTUBE ) பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் எவ்வாறு அதிகப் பட்ச மதிப்பெண் பெறுவது, இனிய ராகத்தில் மனப்பாடப்பாடல்கள், பாடப்பகுதிகள் என எளிமைப்படுத்தப்பட்ட காணொளிகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் நன்கு அவற்றை புரிந்துக் கொண்டு தங்களுக்கு நினைவில் எட்டிய வரை அவற்றை சுயமாக எழுத்துப்பிழை இல்லாமல் எழுதி பழகுங்கள். தேர்வில் எப்போது ஒரே வண்ணத்தில் தேர்வு எழுதவும். அடிக்கோடிட்டுக் காட்ட பென்சில் கொண்டு அவற்றை அடிக்கோடிட வேண்டும். சரியான விடையினை எழுதுவும் போது அதற்குரிய விடைக்குறிப்பு ( அ,ஆ,இ,ஈ) எழுதி பின் அதன் விடையை எழுத வேண்டும். இவை யெல்லாம் உங்களுக்கு நினைவூட்ட மட்டுமே.
வினாத்தாள்
பத்தாம் வகுப்பு
PDF - FORMAT
பத்தாம் வகுப்பு - தமிழ்
பத்தாம் வகுப்பு - ஆங்கிலம்
பத்தாம் வகுப்பு - கணிதம்
பத்தாம் வகுப்பு - அறிவியல்
பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்