8TH-TAMIL-THIRAN PLUS - 2ND MID TERM - MODEL QUESTION-2026-PDF

  

THIRAN PLUS

TAMIL

மாதிரி வினாத்தாள் இரண்டாம் இடைத் தேர்வு-26

தமிழ் - திறன் ப்ளஸ்

வகுப்பு: 8                                                                             பாடம்: தமிழ் (திறன் ப்ளஸ்) 

காலஅளவு: 90 நிமிடங்கள்                                                    மொத்த மதிப்பெண்கள்: 50

மாணவர் பெயர்:

வகுப்பு / பிரிவு: 8 -

பள்ளியின் பெயர்:

பெற்ற மதிப்பெண்:

பகுதி – அ

1. படங்களைப் பார்த்து அவற்றிற்குரிய தமிழ்ப் பெயர்களை எழுதுக:                       (2 × 1 = 2 )

(அ) படத்தின் பெயர் : _____________________

(ஆ) படத்தின் பெயர் : _____________________

2. குறில் – நெடில் சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக:              (5 × 1 = 5)

(அ) நமது உடலைப் பாதுகாக்க இரு ___________கள் தேவை; இயற்கை அழகை நேரில் ___________ சென்றோம். [ கண் / காண் ]

(ஆ) ஆசிரியர் இன்று புதிய ___________ நடத்தினார்; ஓவியன் அழகிய வண்ணப் ___________ வரைந்தான். [ படம் / பாடம் ]

(இ) பறவைகளைக் கூண்டில் அடைக்காமல் காட்டில் ___________ வேண்டும்; நாம் வசிக்கும் இடம் ___________ ஆகும். [ விடு / வீடு ]

(ஈ) அக்கா காதில் அழகிய தங்கத் ___________ அணிந்திருந்தார்; பிறரின் அனுமதியின்றி எதையும் ___________க் கூடாது. [ தொடு / தோடு ]

(உ) சிற்பி சிலையைச் செதுக்கப் பயன்படுவது ___________; மான் தன் நான்கு ___________களால் துள்ளி ஓடியது. [ கல் / கால் ]

3. சரியான மயங்கொலிச் சொல்லைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடத்தை நிரப்புக: (5 × 1 = 5)

(அ) மல்லிகைப் பூ காற்றில் நல்ல நறு___________ வீசியது. [ மணம் / மனம் ]

(ஆ) மரத்தில் உள்ள பசுமையான ___________கள் காற்றில் அசைந்தன. [ இலை / இழை ]

(இ) உழவர் தன் விளைநிலத்தில் உழுவதற்குப் பயன்படுவது ___________. [ காளை / காலை ]

(ஈ) வானில் கருமேகங்கள் கூடிப் பலத்த ___________ பெய்தது. [ மழை / மலை ]

(உ) கூண்டில் அடைபட்டிருந்த பச்சைக்கிளி வானில் ___________ந்து சென்றது. [ பற / பறா ]


 

4. அகரவரிசைப்படுத்தி எழுதுக:                                                                         (8 × 0.5 = 4)

[ சொற்கள் : உரல்,  அம்மா,  ஊஞ்சல்,  ஆடு,  இலை,  ஈட்டி,  கண்,  தம்பி ]

1. _______________

2. _______________

3. _______________

4. _______________

5. _______________

6. _______________

7. _______________

8. _______________

5. வினாச் சொற்களைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடத்தை நிரப்புக: (4 × 1 = 4)

[ வினாச் சொற்கள் : யார்,  எங்கு,  எது,  எத்தனை ]

(அ) தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிக உயரமான மலை ___________?

(ஆ) நமது இந்திய நாட்டின் தேசியப் பறவை ___________?

(இ) வாரத்தில் பள்ளிக்குச் செல்லும் வேலை நாட்கள் மொத்தம் ___________?

(ஈ) காந்தியடிகள் பிறந்த குஜராத் மாநிலம் இந்தியாவில் ___________ உள்ளது?

பகுதி – ஆ

6. கொடுக்கப்பட்டுள்ள விடைகளுக்குப் பொருத்தமான வினாக்களை அமைக்க: (4 × 1 = 4 )

(அ) எங்கள் ஊரின் பெயர் சேலம் ஆகும்.   __________________________________________________________________

(ஆ) திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.   __________________________________________________________________

(இ) மழை பெய்வதால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்புகின்றன.   __________________________________________________________________

(ஈ) கயல்விழி நேற்று உடற்பயிற்சி செய்யப் பூங்காவிற்குச் சென்றாள்.   __________________________________________________________________

7. படத்தைப் பார்த்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க:                     (2 × 1 = 2 )

(அ) படத்தில் உள்ள சிறுவனும் சிறுமியும் என்ன செய்கிறார்கள்?

__________________________________________________________

(ஆ) இக்காட்சியின் மூலம் நாம் உணரும் ஒரு நல்ல பழக்கம் யாது?

__________________________________________________________

8. கலைந்துள்ள சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடர் அமைக்க:              (3 × 1 = 3 )

(அ) வாழ்கிறது / அடர்ந்த / காட்டில் / சிங்கம்  -->   _____________________________________________________________

(ஆ) வாசிப்போம் / தினமும் / புத்தகங்கள் / நாம்  -->  _____________________________________________________________

(இ) தருவது / மரங்கள் / சுத்தமான / காற்று / நமக்கு  -->  _____________________________________________________________


 

பகுதி – இ

9. பின்வரும் சூழ்நிலைக் கதையைக் கவனமாகப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க: (11 மதிப்பெண்கள்)

'நேர்மையின் பரிசு'

முகிலன் எட்டாம் வகுப்பு பயிலும் எளிய குடும்பத்து மாணவன். ஒரு நாள் மாலையில் பள்ளி முடிந்து அவன் தன் வீட்டிற்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் ஒரு பணப்பை கிடப்பதைக் கண்டான். அதனை எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதில் கணிசமான பணமும் ஒரு நபரின் அடையாள அட்டையும் இருந்தன. முகிலன் சிறிதும் தயங்காமல், அந்தப் பணப்பையை அப்படியே எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றான். அங்கிருந்த ஆய்வாளரிடம் நடந்ததைக் கூறிப் பணப்பையை ஒப்படைத்தான். காவல்துறையினர் அந்த அடையாள அட்டையில் இருந்த முகவரியைத் தொடர்பு கொண்டு, பணப்பையைத் தவறவிட்ட பெரியவரை வரவழைத்தனர். தன் வாழ்நாள் சேமிப்புப் பணம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் பெரியவர் கண்கலங்கி முகிலனுக்குக் கனிவோடு நன்றி கூறினார். காவல்துறை ஆய்வாளர் முகிலனின் நேர்மையான உள்ளத்தைப் பாராட்டி, அவனுக்கு ஒரு சிறப்புக் கேடயமும் புத்தகங்களும் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.

(அ) முகிலன் எந்த வகுப்பில் படித்து வருகிறான்?                                     (2 மதிப்பெண்கள்)

________________________________________________________________________

(ஆ) சாலையோரத்தில் முகிலன் கண்டெடுத்த பொருள் எது?                    (2மதிப்பெண்கள்)

_____________________________________________________________________

(இ) கண்டெடுத்த பணப்பையை முகிலன் யாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தான்?                  

                                                                                                                  (2மதிப்பெண்கள்)

________________________________________________________________________

(ஈ) பணப்பையைத் திரும்பப் பெற்ற பெரியவர் முகிலனிடம் எவ்வாறு நடந்துகொண்டார்?

                                                                                                                  (2 மதிப்பெண்கள்)

________________________________________________________________________

(உ) இக்கதையின் மூலம் முகிலனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த நற்பண்பு எது?                                                                                          (3 மதிப்பெண்கள்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகுதி – ஈ

10. பின்வரும் தமிழ்ச் சொற்களைப் பிழையின்றிச்  வாசித்துக் காட்டுக: (10 × 0.5 = 5 )

1. ஒற்றுமை

2. இயற்கை

3. புத்தகம்

4. மகிழ்ச்சி

5. நேர்மை

6. உதவி

7. பள்ளி

8. வணக்கம்

9. தாய்மொழி

10. முயற்சி

11. பின்வரும் பத்தியை நிறுத்தற்குறிகளை உணர்ந்து பிழையின்றிச் சரளமாக வாசித்துக் காட்டுக: (1 × 5 = 5 மதிப்பெண்கள்)

 'மரங்களின் பெருமை'

"மரங்கள் நமக்குக் கிடைத்த இயற்கையின் விலைமதிப்பற்ற வரப்பிரசாதம் ஆகும். அவை நமக்குத் தூய காற்றைத் தருகின்றன; மழை பெய்வதற்குக் காரணமாக அமைகின்றன; பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பான புகலிடமாக விளங்குகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமது பிறந்தநாளிலும் சிறப்பு நாட்களிலும் ஒரு மரக்கன்றையாவது நட்டுப் பாதுகாக்க வேண்டும். மரம் நடுவோம்! மழை பெறுவோம்! நமது தாய் பூமியைக் காப்போம்!"

ஆசிரியர் வாய்மொழி வாசிப்பு மதிப்பீட்டுக் கட்டம் :

மதிப்பீட்டு அளவுகோல்

சரளமான வாசிப்பு
(2 மதிப்பெண்)

உச்சரிப்புத் தெளிவு
(2 மதிப்பெண்)

நிறுத்தற்குறி
(1 மதிப்பெண்)

மொத்த மதிப்பெண்
(5 மதிப்பெண்)

மாணவர் பெற்ற மதிப்பெண்

 

 

 

 

 

மதிப்பெண் சுருக்கம் :
எழுத்துத் திறன் (39) + வாசிப்புத் திறன் (11) = _______ / 50

 

 

மதிப்பீட்டாளர் / ஆசிரியர் கையொப்பம்

 

 



📚

இளந்தமிழ் - திறன் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post