10th Tamil Iyal 1 Thamizh Sol Valam 80 One Mark book in Questions-pdf

 


இளந்தமிழ் வழிகாட்டிக்குழு - 8072426391
பத்தாம் வகுப்பு - தமிழ் | இயல் - 1 : தமிழ்ச்சொல் வளம் (80 ஒரு மதிப்பெண் வினாக்கள்)
மாணவர் பயிற்சி வினாத்தாள் மட்டும் மதிப்பெண் : ______ / 80

 

மாணவர் பெயர் : _______________________________

வகுப்பு & பிரிவு : ____________________

பள்ளி பெயர்     : _______________________________

பெற்ற மதிப்பெண் : ________ / 80

 

பகுதி - அ : சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக (80 × 1 = 80 மதிப்பெண்கள்)

1. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்று பாடியவர் யார்?

அ) பாரதிதாசன்     ஆ) மகாகவி பாரதியார்     இ) கவிமணி     ஈ) நாமக்கல் கவிஞர்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

2. 'தமிழ்ச்சொல் வளம்' என்னும் கட்டுரை தேவநேயப் பாவாணரின் எந்த நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?

அ) மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்                           ஆ) தமிழ் வரலாறு    

இ) சொல்லாய்வுக் கட்டுரைகள்                                 ஈ) ஒப்பியன் மொழிநூல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

3. 'மொழிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) தேவநேயப் பாவாணர் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்   இ)கால்டுவெல்  ஈ) இரா. இளங்குமரனார்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

4. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்       ஆ) கா.அப்பாத்துரையார்  

இ)தனிநாயக அடிகள்                         ஈ)தேவநேயப் பாவாணர்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

5. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?

அ) இரா. இளங்குமரனார்     ஆ) தேவநேயப் பாவாணர்     இ) மா. நன்னன்     ஈ) வ. சுப. மாணிக்கம்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

6. 'பன்மொழிப் புலவர்' என அழைக்கப்படுபவர் யார்?

அ) தேவநேயப் பாவாணர்     ஆ) இரா. இளங்குமரனார்    இ) கா.அப்பாத்துரையார்   ஈ) தனிநாயக அடிகள்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

7. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கால்டுவெல்     ஆ) வீரமாமுனிவர்     இ) ஜி.யு. போப்     ஈ) சீகன்பால்கு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

8. "தமிழ் அல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்" என்று கூறியவர் யார்?

அ) தேவநேயப் பாவாணர்     ஆ) பாரதியார்     இ) கால்டுவெல்     ஈ) கா. அப்பாத்துரையார்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

9. தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களுள் நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடியைக் குறிக்கும் சொல் எது?

அ) தண்டு     ஆ) தாள்     இ) கோல்     ஈ) தூறு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

10. கீரை, வாழை முதலியவற்றின் அடிப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?

அ) தண்டு     ஆ) தாள்     இ) கோல்     ஈ) கழி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

11. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) தூறு     ஆ) தட்டு     இ) கோல்     ஈ) கழி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

12. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல் யாது?

அ) தட்டு     ஆ) கழி     இ) கழை     ஈ) தூறு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

13. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) கழி     ஆ) தட்டு (அ) தட்டை     இ) கழை     ஈ) அடி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

14. கரும்பின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?

அ) கழி     ஆ) கழை     இ) கோல்     ஈ) தாள்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

15. மூங்கிலின் அடிப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?

அ) கழி     ஆ) அடி     இ) கழை     ஈ) தூறு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

16. புளி, வேம்பு முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?

அ) கழை     ஆ) தண்டு     இ) கோல்     ஈ) அடி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

17. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) கொம்பு     ஆ) கவை     இ) சினை     ஈ) போத்து

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

18. கவையிலிருந்து பிரிந்து செல்லும் கிளையைக் குறிக்கும் சொல் எது?

அ) கொம்பு (அ) கொப்பு     ஆ) கிளை     இ) சினை     ஈ) குச்சு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

19. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) போத்து     ஆ) குச்சு     இ) சினை     ஈ) இணுக்கு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

20. சினையின் பிரிவைக் குறிக்கும் சொல் எது?

அ) குச்சு     ஆ) இணுக்கு     இ) கவை     ஈ) போத்து

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

21. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) இணுக்கு     ஆ) குச்சு     இ) சினை     ஈ) கொப்பு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

22. குச்சியின் பிரிவைக் குறிக்கும் மிகச்சிறிய கிளைப் பெயர் எது?

அ) இணுக்கு     ஆ) போத்து     இ) சினை     ஈ) கவை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

23. காய்ந்த அடியும் கிளையும் பெயர் பெறுவதில் காய்ந்த குச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) விறகு     ஆ) வெங்கழி     இ) சுள்ளி     ஈ) கட்டை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

24. காய்ந்த சிறுகிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) சுள்ளி     ஆ) வெங்கழி     இ) கட்டை     ஈ) விறகு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

25. காய்ந்த கழி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) சுள்ளி     ஆ) வெங்கழி     இ) கட்டை     ஈ) சருகு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

26. காய்ந்த கொம்பும் கவையும் அடியும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

அ) கட்டை     ஆ) விறகு     இ) சுள்ளி     ஈ) வெங்கழி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

27. தாவரங்களின் இலை வகைகளில் புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) தாள்     ஆ) தோகை     இ) இலை     ஈ) ஓலை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

28. நெல், புல் முதலியவற்றின் இலையைக் குறிக்கும் சொல் எது?

அ) தோகை     ஆ) ஓலை     இ) சண்டு     ஈ) தாள்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

29. சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) ஓலை     ஆ) தோகை     இ) தாள்     ஈ) சருகு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

30. தென்னை, பனை முதலியவற்றின் இலையைக் குறிக்கும் சொல் எது?

அ) ஓலை     ஆ) தோகை     இ) தாள்     ஈ) இலை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

31. காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

அ) சருகு     ஆ) சுள்ளி     இ) சண்டு     ஈ) கட்டை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

32. காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) சண்டு     ஆ) தோகை     இ) தாள்     ஈ) சருகு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

33. நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) முறி (அ) கொழுந்து     ஆ) துளிர் (அ) தளிர்     இ) குருத்து     ஈ) கொழுந்தாடை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

34. புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்தைக் குறிக்கும் சொல் எது?

அ) முறி (அ) கொழுந்து     ஆ) துளிர்     இ) குருத்து     ஈ) கொழுந்தாடை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

35. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) கொழுந்தாடை     ஆ) துளிர்     இ) குருத்து     ஈ) முறி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

36. கரும்பின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?

அ) குருத்து     ஆ) தளிர்     இ) முறி     ஈ) கொழுந்தாடை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

37. பூவின் நிலைகளில் பூவின் தோற்ற நிலையைக் குறிக்கும் சொல் எது?

அ) போது     ஆ) அரும்பு     இ) மலர்     ஈ) வீ

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

38. பூ விரியத் தொடங்கும் நிலையைக் குறிக்கும் சொல் யாது?

அ) போது     ஆ) அரும்பு     இ) மலர்     ஈ) செம்மல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

39. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?

அ) செம்மல்     ஆ) போது     இ) வீ     ஈ) அலர்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

40. பூ வாடின நிலையைக் குறிக்கும் சொல் யாது?

அ) வீ     ஆ) போது     இ) அரும்பு     ஈ) செம்மல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

41. பிஞ்சு வகைகளில் மாம்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மூசு     ஆ) வடு     இ) கவ்வை     ஈ) குரும்பை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

42. பலாப்பிஞ்சு மற்றும் எள்பிஞ்சு ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) மூசு, கவ்வை     ஆ) கவ்வை, மூசு     இ) வடு, குரும்பை     ஈ) நுழாய், கருக்கல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

43. இளநெல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) நுழாய்     ஆ) கச்சல்     இ) கருக்கல்     ஈ) முட்டுக்குரும்பை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

44. தென்னை, பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) குரும்பை     ஆ) நுழாய்     இ) கச்சல்     ஈ) வடு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

45. இளம்பாக்கு மற்றும் வாழைப்பிஞ்சு ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) கச்சல், நுழாய்     ஆ) நுழாய், கச்சல்     இ) வடு, மூசு     ஈ) கவ்வை, குரும்பை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

46. குலை வகைகளில் அவரை, துவரை முதலியவற்றின் குலையைக் குறிக்கும் சொல் எது?

அ) குலை     ஆ) தாறு     இ) கொத்து     ஈ) கதிர்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

47. கொடிமுந்திரி போன்றவற்றின் குலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) குலை     ஆ) தாறு     இ) சீப்பு     ஈ) அலகு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

48. வாழைக்குலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) கதிர்     ஆ) தாறு     இ) சீப்பு     ஈ) கொத்து

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

49. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) அலகு (அ) குரல்     ஆ) கதிர்     இ) தாறு     ஈ) சீப்பு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

50. நெல், தினை முதலியவற்றின் கதிரைக் குறிக்கும் சொல் எது?

அ) கதிர்     ஆ) தாறு     இ) அலகு (அ) குரல்     ஈ) கொத்து

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

51. வாழைத்தாற்றின் பகுதியை எவ்வாறு அழைப்பர்?

அ) தாறு     ஆ) சீப்பு     இ) குலை     ஈ) கதிர்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

52. கெட்டுப்போன காய்கனி வகைகளில் நுனியில் சுருங்கிய காயைக் குறிக்கும் சொல் எது?

அ) சிவியல்     ஆ) சொத்தை     இ) சூம்பல்     ஈ) வெம்பல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

53. சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) சிவியல்     ஆ) சூம்பல்     இ) அளியல்     ஈ) அழுகல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

54. புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) வெம்பல்     ஆ) சொத்தை     இ) சொண்டு     ஈ) அளியல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

55. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) அளியல்     ஆ) அழுகல்     இ) வெம்பல்     ஈ) சொண்டு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

56. குளுகுளுத்த பழம் மற்றும் குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) அழுகல், அளியல்     ஆ) அளியல், அழுகல்     இ) சூம்பல், சிவியல்     ஈ) சொத்தை, சொண்டு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

57. பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) சொண்டு     ஆ) வெம்பல்     இ) சொத்தை     ஈ) சிவியல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

58. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) தேரைக்காய்     ஆ) அல்லிக்காய்     இ) கோட்டான்காய் (அ) கூகைக்காய்     ஈ) ஒல்லிக்காய்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

59. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) அல்லிக்காய்     ஆ) தேரைக்காய்     இ) ஒல்லிக்காய்     ஈ) கூகைக்காய்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

60. தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) ஒல்லிக்காய்     ஆ) தேரைக்காய்     இ) கோட்டான்காய்     ஈ) அல்லிக்காய்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

61. பழத்தோல் வகைகளில் மிக மெல்லிய தோல் மற்றும் திண்ணமான தோல் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) தோல், தொலி     ஆ) தொலி, தோல்     இ) தோடு, ஓடு     ஈ) மட்டை, உமி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

62. வன்மையான தோல் மற்றும் மிக வன்மையான தோல் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) தோடு, ஓடு     ஆ) ஓடு, தோடு     இ) தொலி, தோல்     ஈ) குடுக்கை, மட்டை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

63. சுரையின் ஓடு மற்றும் வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) கொம்மை, குடுக்கை     ஆ) குடுக்கை, கொம்மை     இ) மட்டை, உமி     ஈ) தோடு, ஓடு

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

64. மணி வகைகளில் மொச்சை, அவரை, துவரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) பயறு     ஆ) கடலை     இ) முதிரை     ஈ) விதை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

65. கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) விதை     ஆ) காழ்     இ) முத்து     ஈ) கொட்டை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

66. வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து மற்றும் மா, பனை முதலியவற்றின் வித்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) கொட்டை, முத்து     ஆ) காழ், விதை     இ) முத்து, கொட்டை     ஈ) தேங்காய், முதிரை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

67. புளி, காஞ்சிரை (நச்சுமரம்) முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) காழ்     ஆ) முத்து     இ) விதை     ஈ) கொட்டை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

68. இளம்பயிர் வகைகளில் வாழை, தென்னை முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) நாற்று     ஆ) கன்று     இ) குருத்து     ஈ) பிள்ளை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

69. தென்னையின் இளநிலை மற்றும் பனையின் இளநிலை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் முறையே:

அ) வடலி, பிள்ளை     ஆ) பிள்ளை, மடலி (அ) வடலி     இ) கன்று, நாற்று     ஈ) பைங்கூழ், குட்டி

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

70. நெல், சோளம் முதலியவற்றின் பசும்பயிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) பைங்கூழ்     ஆ) நாற்று     இ) கன்று     ஈ) குருத்து

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

71. சம்பா நெல்லில் மட்டும் எத்தனை உள்வகைகள் உள்ளதாகப் பாவாணர் குறிப்பிடுகிறார்?

அ) நாற்பது     ஆ) ஐம்பது     இ) அறுபது     ஈ) எண்பது

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

72. தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்? (தெரிந்து தெளிவோம்)

அ) தேவநேயப் பாவாணர்     ஆ) இரா. இளங்குமரனார்     இ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்     ஈ) தனிநாயக அடிகள்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

73. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் 'திருவள்ளுவர் தவச்சாலை'யையும் 'பாவாணர் நூலகம்' அமைத்தவரும் யார்?

அ) இரா. இளங்குமரனார்     ஆ) தேவநேயப் பாவாணர்     இ) கா. அப்பாத்துரையார்     ஈ) வ. சுப. மாணிக்கம்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

74. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

அ) இந்தியா     ஆ) இலங்கை     இ) சிங்கப்பூர்     ஈ) மலேசியா

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

75. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது?

அ) இலண்டன்     ஆ) லிசுபன்     இ) பாரிஸ்     ஈ) மாட்ரிட்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

76. 'கார்டிலா' (Carthila de lingoa Tamul e Portugues) என்னும் நூல் எந்த ஆண்டு முதன் முதலாகத் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?

அ) 1554     ஆ) 1578     இ) 1723     ஈ) 1812

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

77. 1554-இல் போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் மொழிபெயர்க்கப்பட்ட 'கார்டிலா' என்னும் தமிழ் நூல் எந்த வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது?

அ) கிரந்த வரிவடிவம்     ஆ) வட்டெழுத்து வரிவடிவம்     இ) ரோமன் வரிவடிவம்     ஈ) பிராமி வரிவடிவம்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

78. 'சொல்லுதல்' என்பதற்கு வழங்கப்படும் வேறு சொற்களின் சரியான தொகுப்பைத் தேர்க. (கற்பவை கற்றபின்)

அ) பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்    

ஆ) கேட்டல், வினவல், செப்புதல், ஓதுதல், நவிலல், சாற்றல், பகர்தல்    

இ) பேசுதல், நோக்குதல், உரைத்தல், கூறல், நயத்தல், இயம்பல், மொழிதல்    

ஈ) விளம்புதல், செப்புதல், எழுதுதல், கூறல், இயம்பல், படித்தல், மொழிதல்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

79. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்தத் தமிழ் நூல்களின் பாடல்களைத் தங்கள் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்?

அ) திருவெம்பாவை, திருப்பாவை                             ஆ) திருக்குறள், நாலடியார்    

இ) தேவாரம், திருவாசகம்                                         ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

80. 'காய்ந்த இலையும், காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள் - இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது எது? (பாடநூல் வினா)

அ) இலையும் சருகும்     ஆ) தோகையும் சண்டும்     இ) தாளும் ஓலையும்     ஈ) சருகும் சண்டும்

விடை : ___________________________      [  ✓  /  ✗  ]

இணைய வழியில் தேர்வு எழுதி சான்றிதழ் பெற : click here
நன்றி! மேலும் கல்வித் தகவல்களுக்கு: www.tamilvithai.com   |  www.kalvivithaigal.com
இளந்தமிழ் வழிகாட்டிக்குழு - 8072426391

your pdf here




PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post