6th-tamil-term-1-unit-2-mozhiyaialvom,mozhiyoduvilaiyadu-Q&A


இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடை

  பருவம் : 1                                                                                                       இயல் : 2

மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு

மழை நீர் சேகரிப்பு

முன்னுரை

மழை பெய்யும் காலத்தில் மழைநீரை வீணாக்காமல் சேமித்துப் பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும். அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மழையின் சிறப்பு

மனிதர் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உலகில் உள்ள நீர்நிலைகள் ஆதாரமாக விளங்குவது மழையாகும். அதனால்தான், மாரி அல்லது காரியம் இல்லல் என்ற கொன்றை வேந்தன் நூல் குறிப்பிடுகிறது. இத்தகைய சிறப்புடைய மழைநீரை வீணாக்காமல் நாம் சேகரிக்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு முறைகள்

மழைநீர் சேகரிப்பை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெய்யும் மழைநீரை ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில் சேமித்தல் ஒரு முறை. பரந்த நிலங்களில் பரவச் ஆழப்படுத்துதலின் மூலம் அதிகமான மழைநீரை சேமிக்கலாம்.

இரண்டாவது, வீட்டின் கூரைகளிலும் மாடியிலும் பெய்யும் மழைநீரை சேகரித்தல் ஆகும். இம்முறையில் வீட்டின் கூரைகளிலிருந்து குழாய்களை அமைத்து மழைநீர்த் தொட்டிகளுக்குக் கொண்டு வருதல் வேண்டும். தரையில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்து அதன் நீரை நிலத்தடிக்குள் செலுத்துதல் வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெருகும்.

நமது கடமை

மழைநீர் உயிர்நீர்’ என்னும் பொன்மொழிக்கேற்ப மழைநீரே நம்மை வாழ வைக்கிறது என்பதை உணர வேண்டும். மழைநீர் வீணாகாமல் சேகரித்துப் பயன்படுத்துவதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

இக்கட்டுரையின் மூலம் மழைநீர் சேகரிப்பின் பற்றி அறிந்தோம். நாமும் மழைநீர் சேகரிப்போம்; பூமியின் நீர்வளத்தைக் காப்போம்.

கட்டுரை எழுதுக

இயற்கையைக் காப்போம்

முன்னுரை

           இயற்கை மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைச் சூழல்

       இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இயற்கை மாசடைதல்

          இயற்கை பல விதங்களில் மாசு அடைகிறது. மனிதர்களாகிய நாம் நம்முடைய சுயலாபத்திற்காக  பல்வேறு விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்.

·       நெகிழ்களோடு குப்பைகளை எரித்தல்.

·       நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கலக்குதல்.

·       வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தி நில மாசு ஏற்படுத்துகிறோம்.

இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

·       கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் கலக்காமை

·       நெகிழி மற்றும் குப்பைகளை எரிக்காமை

·       பொதுப் போக்குவரத்து பயன்பாடு

·       மின் சிக்கனம்,நீர் சிக்கனம்

·       இயற்கை உரங்கள் பயன்பாடு

முடிவுரை

    இயற்கையை பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வளமான இயற்கையை வழங்கிடுவோம்.

மொழியோடு விளையாடு

1. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக

(எ. கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின. விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

கபிலன் வேலை செய்தான். அவன் களைப்பாக இருக்கிறான்.

 2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

இலக்கியா இனிமையாகப் பாடினாள். அவள் பரிசு பெற்றாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)

3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள் (அலைத்தாள் / அழைத்தாள்)

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

         பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

2. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.

         சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

3. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

         இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

கட்டங்களில் சில சொற்கள்  மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொன்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக. 

 

1. அகதி என்னும் பொருள் தரும் சொல் ஏதிலி

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது

3. பறவைகள் இடம் பெயர்தலை  வலசைபோதல் என்பர்.

4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை செங்கால் நாரை

5. ஆய்த எழுத்தின் வேறு பெயர் தனிநிலை

-கலைச் சொல் அறிவோம்

கண்டம் - Continent

தட்பவெப்பநிலை - Climate

வானிலை  - Weather

வலசை - Migration

புகலிடம் -  Sanctuary

புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

www.tamilvithai.com                                                                                  www.kalvivithaigal.com

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post