6th-tamil-term-1-unit-2-muthaezhuthumsarpzhuthum-Q&A

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

📘 இளந்தமிழ் – ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடை

பருவம் : 1     இயல் : 2     பாடம் : இயற்கை இன்பம் – முதலெழுத்தும் சார்பெழுத்தும்
✍️ வினா – விடை
1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
  • உயிர் எழுத்து 12 , மெய்யெழுத்து 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள்.
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதற் காரணமாக இவை இருப்பதால் இவை முதல் எழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.
2. சார்பெழுத்துகள் எத்தனை? அவையாவை?
  • சார்பெழுத்துகள் 10.
  • உயிர்மெய்
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்
  • ஐகார குறுக்கம்
  • ஒளகார குறுக்கம்
  • ஆய்தக் குறுக்கம்
  • மகரக் குறுக்கம்
3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம் பெறும்?
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post