9TH-TAMIL-HALF YEARLY EXAM-2025- MODEL QUESTION-1

 



ஒன்பதாம் வகுப்பு

மாதிரி அரையாண்டு தேர்வு-1- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                         மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )             

           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                            15×1=15

1. ‘ வசிபட முதுநீர் புக்கு

    மலையெனத் துவரை நன்னீர் “ -பாடல் அடிகளில் ‘ முதுநீர் ‘ என்பது எது?

அ) மழை நீர்   ஆ) கடல் நீர்        இ) ஆற்று நீர்    ஈ) நிலத்தடி நீர்

2. ‘ இரு ‘ என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?

அ)பட்டம் இருக்கிறது         ஆ) பட்டம் செய்திருக்கிறேன்

 இ) எங்கே இருக்கிறது?   ஈ) வானில் மேகம் இருக்கிறது

3. தீரா இடும்பை தருவது எது?

அ) ஆராயாமை, ஐயப்படுதல்       ஆ) குணம், குற்றம்

இ) பெருமை, சிறுமை                ஈ) நாடாமை, பேணாமை

 4. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?

அ) தமிழ்      ஆ) தெலுங்கு       இ) மலையாளம்     ஈ) கன்னடம்

5. உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை ____________

) இலஞ்சி           ) கூவல்             ) கேணி               ) குண்டம்

6. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறு தழுவுதல்                   

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்            

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

7. “ மாடு “ என்பதன் பொருள் என்ன?

அ) கீழே       ஆ) மேலே   இ) பக்கம்     ஈ) தொலைவு

8. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்______

அ) அகத்தியம்                  ) இலக்கண விளக்கம்

) தொல்காப்பியம்          ) சொல்லிலக்கணம்

9. விடையைத் தமிழ் எண்களில் தேர்க– பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

) ருஅ       ) கஎ        ) கஅ        ) உஅ

10. பகுதி, விகுதி மட்டும் இடம் பெறும் சொல் எது?

அ) வென்றார்         ஆ) நடந்த   இ) வளர்க     ஈ) பொருந்திய

11. பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக

) காலவாகு பெயர்         ) காரியவாகு பெயர்                

) கருவியாகு பெயர்       ) கருத்தாவாகு பெயர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்

 பூரண கும்பமும் பொலமா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;

பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

1) இப்பாடலை இயற்றியவர்

அ) குடப்புலவியனார்       ஆ) சீத்தலைச் சாத்தனார்          

இ) இளங்கோவடிகள்       ஈ) தொல்காப்பியர்

2) இப்பாடலில் கமுகு  என்பதன் பொருள்.

அ) வண்டு             ஆ) பாக்கு              இ) அன்னம்                     ஈ) மழை

3). பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க

அ) தோரணபூரண                  ஆ) நடுமின் – தூணத்து  

இ) கோட்டியும் - வஞ்சியும்         ஈ)  கும்பமும் – விளக்கும்

4) பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயர்_____

அ) புறநானூறு        ஆ) சிலப்பதிகாரம்  இ) குறுந்தொகை             ஈ) மணி

மேகலை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.              4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. சனி நீராடு என்பது ஒளவையின் வாக்கு.

ஆ. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர். 

17.  கனவிலும் கூட இன்னாதது எவர் நட்பு?

18. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

19. துணைவினைகளின் பண்புகள் இரண்டினை எழுதுக.

20. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக

21.  தரும் – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                       5×2=10

22. அளபெடை எத்தன வகைப்படும்? அவை யாவை?

23. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

          அ) குவிந்து – குவித்து               ஆ) மாறு - மாற்று

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : பூக்கும்

25. காலவாகு பெயர் – குறிப்பு தருக

26. பிழை நீக்கி எழுதுக:-

1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.

2. குழலியும் பாடத் தெரியும்

27. படிப்போம்;பயன்படுத்துவோம்!

          அ) Sculpture            ஆ) Excavation

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க

   அ)  சித்திரமும் கைப்பழக்கம்_________

 ஆ) கல்லாடம் படித்தவரோடு __________

28. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                    2×3=6

29. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

         மூவலூர் இராமாமிர்தம் அவர்கள், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். இவரின் பெயரில் வழங்கி வந்த திருமண நிதி உதவித் திட்டம் 2022-2023 ஆம் ஆண்டு முதல் “ உயர்கல்வி உறுதித் திட்டம் “ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இத்திட்ட்ததின் கீழ் அரசுப் பள்ளிகளில், அரசு உதவிபெறும் ( தமிழ்வழி ) பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயில்வதற்காகக் கல்லூரிகளில் சேர்கின்ற அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்கள் பட்டப் படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.

அ. திருமண நிதி உதவித் திட்டம் எந்தப் பெயரில் மாற்றப்பட்டுள்ளது?

ஆ. தமிழகத்தின் சமூகச் சீர்த்திருத்தவாதியாக போற்றப்பட்டவர் யார்?

இ. பெண்கள் உயர்கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கான தகுதிகள் யாவை?

31. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

33. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக

34. அ) “ காடெல்லாம்   “ எனத் தொடங்கும் பெரிய புராணம்  பாடலை  எழுதுக. (அல்லது )

      ஆ) “ ஒன்றறிவதுவே ” எனத் தொடங்கும் உயிர்வகைப் பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                  2×3=6

35. ஏகதேச உருவக அணியை விளக்கி சான்று தருக

36. அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

37. எண்ணுப்பெயர், திசைப் பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ) காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி

           எழுதுக.       ( அல்லது )

ஆ) குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

39. அ) உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக

  ( அல்லது )

ஆ. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிச் செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

41. எருமாபாளையம் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் ஹரிணி என்பார் சொந்த தேவைக்காக ரூபாய்.2000 ஐத்தை பெற அஞ்சலகம் செல்கிறார். தேர்வர் தம்மை ஹரிணியாக நினைத்து படிவத்தை நிரப்புக.

42. அ) எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள் குறித்து எழுதுக. ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

5. You have to dream before your dreams can come true – A.P.J.Abdul Kalam

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 வடிவம் மாற்றுக.

          பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப்  படுத்தி முறையான பத்தியாக்குக.

 1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

 3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                 3×8=24

43.அ) தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.  (அல்லது)

ஆ) ஏறுதழுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

44.அ) ‘ தண்ணீர் ‘ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக. (அல்லது)

ஆ) இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘ செய்தி ‘ கதையின் மூலமாக விளக்குக.

45.அ) குறிப்புகளைக் கொண்டு ‘ ஏறுதழுவுதல் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

          முன்னுரை – ஏறுதழுவுதல் – இலக்கியத்தில் ஏறுதழுவுதல் – காளைகளின் சிறப்பு – போற்றப்படக் காரணம் – நமது கடமை - முடிவுரை          (அல்லது)

ஆ)  குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி, தலைப்புத் தருக.

          முன்னுரை - சுற்றுச்சூழல் – மாசுபட காரணம் – பாதுகாப்பு நடவடிக்கைகள் – விழிப்புணர்வுகள் – நமது கடமை - முடிவுரை

 

 




....கல்விவிதைகள்- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் -மாதிரி அரையாண்டுத் தேர்வு-1 -2025... ....

🔥 PDF பதிவிறக்கம் காத்திருப்பு 🔥

15
வினாடிகள் மீதம்
கல்விவிதைகள் , தமிழ்விதை
15 விநாடிகள் காத்திருப்பு

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post