பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 7
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சிறு வினா.
1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்
தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
v வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை
விளம்பரப்படுத்தக்கூடாது.
v நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம்
காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல்
தலைவர்களுக்குப் பொருந்தும்.
v உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வது போல
மனிதர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும்.
2. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை
எழுதுக.
v வாய்மை சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
v வாய்மை பேசும் நா உண்மையான நா
§
பொய்யாச்
செந்நா
§
பொய்படுபறியா
வயங்கு செந்நா
v இன்பத்தின் கதவைத் திறப்பதும், துன்பத்தின் கதவைத் திறப்பதும்
நாக்கு தான்.
3. எவையெல்லாம்
அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
v
உயிர் பிழைக்கும்
வழி அறியேன்
v
உடலின் தன்மை அறியேன்
v
உணவைத் தேடும் வழி
அறியேன்
v
காட்டில் செல்லும்
வழி அறியேன்
v
தனியே விடப்பட்டு
செல்லும் வழி தெரியாமல் தவிக்கிறேன்.
v
தாய் தன் கையால்
காட்டிய முறைகளை மட்டும் அறிவேன்.
4. ஆசிரியப்பாவின்
பொது இலக்கணத்தை எழுதுக.
v
அகவல் ஓசை பெற்று
வரும்.
v
ஈரசைச்சீர் குறைவாக
காய்ச்சீர் மிகுதியாக வரும்.
v
ஆசிரியத்தளை மிகுதியாக
வரும்.
v
வெண்டளை,கலித்தளை விரவி வரும்.
v
மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கு ஏற்ப முடியும்.
v
ஏகாரத்தில் முடிவது
சிறப்பு.
5. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற
தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான
உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள்
இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )
v சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள்
இயற்றப்பட்டிருந்தாலும் அதைப் பின்பற்றுதல் வேண்டும்.
v
பொது போக்குவரத்துப்
பயன்பாடு.
v
மரம் வளர்த்துச் சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க வேண்டும்.
ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய மாற்றம்
வேண்டும்.