பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 7
ஒரு மதிப்பெண் - வினாக்கள்

மதிப்பீடு
1. மேன்மை தரும் அறம் என்பது______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்
கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.
அ) உதியன்;சேரலாதன்
ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி
3. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்று தந்த நூல்______
அ) ஒரு சிறு இசை
ஆ) முன்பின்
இ) அந்நியமற்ற நதி
ஈ) உயரப்பறத்தல்
4. பூக்கையைக் குவித்துப்
பூவே புரிவோடு காக்க என்று _____,______ வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக
ஈ) எலிசபெத் பூமிக்காக
5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் _________
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா