பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 6
மொழியோடு விளையாடு
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
மொழியோடு
விளையாடு
சேலம் மாவட்டம், போக்குவரத்துக் காவல் துறையினரால் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்
கூட்டம் நடைபெறவிருக்கிறது. “ சாலை பாதுகாப்பு “ என்பது நம்முடைய வாழ்க்கை முறை என்பதனை உணர வேண்டும்.
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைப் பாதுகாப்பு
விழிப்புணர்வு போக்குவரத்து காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. சாலை விதிகளை மதித்து
நடக்கும் போது விபத்துகள் குறையும். மாணவ, மாணவியர்கள் 18 வயது பூர்த்தியடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக்
கொண்டு தமிழெண்களால் நிரப்புக
ஞாயிறு |
திங்கள் |
செவ்வாய் |
புதன் |
வியாழன் |
வெள்ளி |
சனி |
- |
- |
- |
௧ |
௨ |
௩ |
௪ |
௫ |
௬ |
௭ |
௮ |
௯ |
௧0 |
௧௧ |
௧௨ |
௧௩ |
௧௪ |
௧௫ |
௧௬ |
௧௭ |
௧௮ |
௧௯ |
௨0 |
௨௧ |
௨௨ |
௨௩ |
௨௪ |
௨௫ |
௨௬ |
௨௭ |
௨௮ |
௨௯ |
௩0 |
௩௧ |
- |
தொடரைப் படித்து விடையைக்
கண்டறிக
1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____கற்றல்___
2.விதைக்குத் தேவை எரு
எனில்,கதைக்குத் தேவை_____கரு__
3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______சோறு____ ஆகும்.
4.குரலில் இருந்து பேச்சு
எனில்,விரலில் இருந்து _____எழுத்து____
5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________பூவில்________
( சோறு, கற்றல் , கரு , பூவில் , எழுத்து )
அகராதியில் காண்க
குணதரன் - நற்குணம் உள்ளவன் |
செவ்வை - நேர்மை,மிகுதி |
நகல் - சிரிப்பு,ஏளனம் |
பூட்கை - கொள்கை,மனவுறுதி |
காட்சியைக் கண்டு
கவினுற எழுதுக
ஏடு எடுத்தேன்
கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது
இந்தக் காட்சி அர்த்தமுள்ள காட்சி ஏர் என்
பயனைப் பற்றி எழுது என்றது உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார் நான் எழுதுகிறேன்
உழவே தலை என்று |
|
படிப்போம் ;
பயன்படுத்துவோம் !
Agreement |
ஒப்பந்தம் |
Discourse |
சொற்பொழிவு |
Monarchy |
முடியாட்சி |
Border |
எல்லை |
Rebellion |
கிளர்ச்சி |
நிற்க அதற்குத் தக.
அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம்,
நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.இவை நமது
இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.அது போலவே கோவில்களிலும் பழமையான
நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம் பெற்றிருக்கும். அவை
நம் பழம் பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று
அறிவீர்கள் தானே? கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப்
பராமரிக்கவும்,பாதுகாக்கவும்
உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.
1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.
2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.
3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.
4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.
5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம்
அறிவை விரிவு செய்
நாமக்கல்.வெ.இராமலிங்கம் |
|
வேருக்கு நீர் |
ராஜம்
கிருஷ்ணன் |
நாற்காலிக்காரர் |
ந.முத்துசாமி |