10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-6- MOZHIYAI ALVOM

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 6  

மொழியை ஆள்வோம்

இளந்தமிழ் வழிகாட்டி 

---------------------------------------------------------------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க

        Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

விடை:

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.


பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.


வரப் போகிறேன்

இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறேன்

இல்லாமல் இருக்கிறது

பெரும்பாலான கிணறுகளில் நீர் இல்லாமல் இருக்கிறது

கொஞ்சம் அதிகம்

இவனுக்குக் குறும்பு கொஞ்சம் அதிகம்

முன்னுக்குப் பின்

பாலன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான்

மறக்க நினைக்கிறேன்

சோகங்களை மறக்க நினைக்கிறேன்

 

தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக.

          மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.


தொகைச்சொற்கள்

பிரித்து எழுதுக

தமிழ் எண்ணுரு

மூவேந்தர்

மூன்று + வேந்தர்

நாற்றிசை

நான்கு + திசை

முத்தமிழ்

மூன்று + தமிழ்

இருதிணை

இரண்டு + திணை

முப்பால்

மூன்று + பால்

ஐந்திணை

ஐந்து + திணை

நானிலம்

நான்கு + நிலம்

அறுசுவை

ஆறு + சுவை

பத்துப்பாட்டு

பத்து + பாட்டு

௧௦

எட்டுத்தொகை

எட்டு + தொகை

 

கடிதம் எழுதுக

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை

செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் 

ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.


அனுப்புநர்


                   அ அ அ அ அ,


                   100,பாரதி தெரு,


                   சக்தி நகர்,


                   சேலம் – 636006.


பெறுநர்

                   ஆசிரியர் அவர்கள்,


                   தினத்தந்தி நாளிதழ்,


                   சேலம் – 636001.


ஐயா,


பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு


          வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு

 பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும்

 தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளேன். அதை உங்களுக்கு இத்துடன்

 இணைத்து அனுப்பியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல்

 மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:  கட்டுரை                                                                                   இப்படிக்கு,


இடம் : சேலம்                                                                             தங்கள்உண்மையுள்ள,


நாள் : 04-03-2025                                                                                     அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தினத்தந்தி நாளிதழ்,

,         சேலம் – 636001.

பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக

        கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

          கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

          காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை

          செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

கம்பன்

உமறுப்புலவர்

காசிம் புலவர்

குணங்குடியார்

சேகனாப் புலவர்

செய்கு தம்பி பாவலர்


மேல்நிலை சேர்க்கை விண்ணப்பம்

சேர்க்கை எண்:     500                 நாள்:    01-06-2024                 வகுப்பும் பிரிவும்: 11அ

1.   மாணவரின் பெயர்                                      :       இ.ஜனனி

2.  பிறந்த நாள்                                                :       01-06-2009        

3.  தேசிய இனம்                                             :       இந்தியன்

4.  பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                    :       இளவழகன்

5.  வீட்டு முகவரி                                            :       50, பாரதி தெரு, காமராஜர் நகர்,

                                                                                சேலம் - 636006

6.  இறுதியாகப் படித்த வகுப்பு                          :       பத்தாம் வகுப்பு

7.  பயின்ற மொழி                                           :       ஆங்கிலம்

8.  இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி         :       அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி –

                                                                                சேலம்

 9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்      :       498

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

அரசு பொதுத் தேர்வு

 

3050800

2023 -24

தமிழ்

99

ஆங்கிலம்

99

கணிதம்

100

அறிவியல்

100

சமூக அறிவியல்

100

மொத்தம்

498

9.  மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?       :    ஆம், இணைக்கப்பட்டுள்ளது

10. தாய்மொழி                                                        :    தமிழ்

11. சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்      :    இயற்பியல் – ஆங்கில வழி

                                                                                      இ.ஜனனி

                                                                                மாணவ/மாணவியர் கையெழுத்து


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post