பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 6
நெடு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------
நெடுவினா
1. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்கஅளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற
தலைப்பில் மேடை உரை எழுதுக.
குறிப்புச் சட்டகம் முன்னுரை நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு முடிவுரை |
முன்னுரை:
நாட்டு விழாக்கள், விடுதலைப் போராட்ட வரலாறு, நாட்டின்
முன்னேற்றத்தில் மாணவர்பங்கு , குறிப்புகளைக் கொண்டு “ மாணவப்
பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பிலான மேடை உரை பற்றி
இக் கட்டுரையில் காணலாம்.
நாட்டு விழாக்கள்:
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு
தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி
நாட்டிற்கு
பெருமை சேர்க்கின்றனர்.
விடுதலைப் போராட்ட வரலாறு:
வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற
போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை
எண்ணி போற்ற வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:
மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர்
இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில்
இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல்
பட வேண்டும்.
முடிவுரை:
நாட்டு விழாக்கள், விடுதலைப் போராட்ட வரலாறு, நாட்டின்
முன்னேற்றத்தில் மாணவர்பங்கு , குறிப்புகளைக் கொண்டு “ மாணவப்
பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பிலான மேடை உரை பற்றி இக்
கட்டுரையில் கண்டோம்.
2. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக
வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-
குறிப்புச்சட்டம் |
முன்னுரை |
மருவூர்ப்பாக்க வணிகவீதி |
இக்கால வணிக வளாகங்கள் |
முடிவுரை |
முன்னுரை :-
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக
வளாகங்களோடும் அங்காடிகளோடும்
ஒப்பிட்டு காண்போம்.
மருவூர்ப்பாக்க வணிக வீதி :-
v தானியக் கடைத் தெருக்கள்
v நேரடி வணிகம்
v இலாப நோக்கமற்றது
v கலப்படம் இல்லாதது
v
தரம் உண்டு.விலை குறைவு
v
தனித்தனியே வணிக வீதிகள்
v பொருட்களை ஒவ்வொரு தெருவுக்கும் சென்று வாங்க
வேண்டும்.
v
நேர்மையுடன் வணிகம்
v
பண்டங்கள் கொடுத்தும்
பொருட்கள் வாங்கப்பட்டது.
v
தேவையான பொருட்கள்
மட்டும் வாங்கப்பட்டன.
இக்கால வணிக வளாகங்கள்
v தனித்தனி அங்காடிகள்
v இடைத் தரகர்கள் அதிகம்
v இலாபம் மட்டுமே முக்கியம்
v கலப்படம் கலந்துள்ளது
v
தரம் குறைவு,விலை அதிகம்
v
அனைத்து வணிகங்களும்
ஒரே இடத்தில் உள்ளன.
v
தேவையான அனைத்துப்
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
v
நேர்மையை கண்காணிக்க
சி.சி.டி.விக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
v
பணம் கொடுத்து பொருட்கள்
வாங்க வேண்டும்.
v
தேவையற்ற பொருட்களும்
வாங்கும் சூழல் உள்ளது.
முடிவுரை :
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக
வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு கண்டோம்.
3. எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன்,
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
குறிப்புச்சட்டம் |
முன்னுரை |
எம்.எஸ்.சுப்புலட்சுமி |
பால சரஸ்வதி |
ராஜம் கிருஷ்ணன் |
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் |
சின்னப்பிள்ளை |
முடிவுரை |
முன்னுரை :
சமூகம் உயர்வடைய தமது பங்களிப்பைக் கொடுத்து சாதனைப்
பெண்மணிகளாக திகழும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம்
கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோரின்
சமூகப் பணிகள் பற்றிக் காண்போம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி :
v ஐ.நா அவையில் செவ்வியல் இசையைப் பாடியவர்.
v இசைப்பேரரசி என்று நேரு பெருமகனரால் அழைக்கப்பட்டவர்.
v ‘ இரகுபதி இராகவ இராஜாராம் ‘ காந்தியடிகளை சந்தித்த போது
பாடினார்.
v 1954 இல் ஹெலன் கெல்லரால் பாராட்டப்பட்டவர்
v 1963 -இங்கிலாந்திலும், 1966 இல் -ஐ.நா அவையிலும் பாடினார்
v 1974 – இல் மகசேசே விருது
பால சரஸ்வதி :
v
ஐரோப்பா,
அமெரிக்கா முதலிய வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தியவர்.
v
‘
கிழக்கு மேற்கு சந்திப்பு ‘ நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு நடனம் ஆடியவர்.
v
பரத
நாட்டியக் கலையை உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தார்.
இராஜம் கிருஷ்ணன் :
v கற்பனையாக எழுதாமல் களத்திற்கு சென்று மக்களிடம்
செய்திகளைத் திரட்டி எழுதுபவர்.
v “ கரிப்பு மணிகள் “ – தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின்
உவர்ப்பு வாழ்க்கையை
எழுதினார்.
v “ குறிஞ்சித் தேன்” – நீலகரி, படுகர் இன மக்களின் வாழ்வியல்
மாற்றங்களைக் குறித்து
எழுதினார்.
v
“
அலைவாய் கரையில் “ – கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்.
v
“
கூட்டுக் குஞ்சுகள் “ – குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி எழுதினார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் :
v
மதுரையின்
முதல் பட்டதாரிப் பெண்.
v
காந்தியடிகளுடனும்,
வினோபா பாவேயுடன் பணியாற்றியவர்.
v
இந்திய
விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்.
v “ உழுபவருக்கே நில உரிமை இயக்கம் “ தொடங்கி வேளாணமை
இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம்
வர ஏற்பாடு செய்தவர்.
சின்னப்பிள்ளை :
v
பெண்கள்
குழுவை ஆரம்பித்தவர்.
v பெண்கள் குழு மூலம் நடவு, அறுவடை, களையெடுப்பு போன்ற
வேலைகளைச் செய்து, வருகிற பணத்தை சரிசமமாக பிரித்துக்
கொடுத்தவர்.
v வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேர்த்து வேலையைக்
கொடுத்து, அவர்கள் குடும்பத்துக்கு உதவியாக
இருந்தவர்.
v சுனாமி பாதிப்பு வந்த போது ஊரெல்லாம் சென்று மீட்புப்
பணிகளை செய்தவர்.
v மாண்புமிகு முதன்மை அமைச்சரால் பெண் ஆற்றல் விருது
பெற்றவர்.
முடிவுரை :
சமூகம் உயர்வடைய தமது பங்களிப்பைக் கொடுத்து சாதனைப்
பெண்மணிகளாக திகழும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம்
கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோரின்
சமூகப் பணிகள் பற்றிக் கண்டோம்.
4. நிகழ்வுகளைத்
தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா
இடம் – பள்ளிக் கலையரங்கம் நாள் -08.03.2019
கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல் தலைமையாசிரியரின்
வரவேற்பு இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின்
வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியுரை.
மகளிர்
நாள் விழா - அறிக்கை
எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.
மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:
கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா
தொடங்கப்பட்டது.
தலைமையாசிரியர் வரவேற்பு:
தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால்
வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய
வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.
இதழாளர் கலையரசியின் சிறப்புரை:
இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும்
உந்து சக்தியாக அமைந்தது.
v மகளிரின் சிறப்புகள்
v மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்
v சுய உதவிக்குழுக்களின் பங்கு
v மகளிர் கல்வி போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.
ஆசிரியர்களின் வாழ்த்துரை:
ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம்
பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என
வாழ்த்துரை வழங்கினார்.
மாணவத் தலைவரின் நன்றியுரை:
மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும், தலைமை ஆசிரியருக்கும்,
ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார்.
மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.