10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-6 -3 MARK

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 6 

சிறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

சிறு வினா


1. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி 

விளக்குக.


        சேர நாடு :


v  செவ்வாம்பல் மலர்களைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில்


     தீப்பிடித்தது என அஞ்சி சிறகுக்குள் ஒடுங்கின.


v  பகைவர் அஞ்சும் வேலினைக் கொண்ட சேர நாட்டில் இந்த


     அச்சம் இருக்கின்றது.


சோழ நாடு :


v  உழவர்கள் நெற்போர் மீது நின்றுகொண்டு மற்ற உழவர்களை


     ‘நாவலோ ‘ என்று கூவி அழைப்பர்.


v  போர்க்களத்தில் கொல்யானை மீது நின்றுகொண்டு 


    ‘ நாவலோ ‘ என்று அழைப்பது போலிருந்தது.


        v  யானைப்படைகளை உடைய சோழனது நாடு


பாண்டிய நாடு :


v  தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள்


 போலிருக்கின்றன.


v  பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும்


 முத்துகள் போலிருக்கின்றன.


v  பாண்டிய நாடு முத்துவளம் மிக்கது.


2. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் 

    பொருள் விளக்குக.


இடம்:


எனது போராட்டம் என்னும் ம.பொ.சி யின் தன் வரலாற்று நூலில்


 இடம் பெற்றுள்ளது.

பொருள் :


மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி

சிறப்புக் கூட்டத்தில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது

ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற

 நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து

 முழங்கிய முழக்கம் இது.


விளக்கம் :      இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க

                         தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என

                         முழங்கினார்.


3. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

  பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

  கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

  தூசும் துகிரும் ஆரமும் அகிலும்


) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?


                                      சிலப்பதிகாரம்


) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.


                   கர்வனர்ட்டினும்                          தூசும் - துகிரும்


) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.


                ட்டினும்ட்டு                                ர்வனர் -


) காருகர்பொருள் தருக.


                   நெய்பவர்


) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?


சந்தனம், அகில்


4. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக:-


மருவூர் பாக்கம்


        மருவூர்ப்பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டின பாக்கம்

 என்பது கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி

மருவூர்ப்பாக்கம்; வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும்

வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன

தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர்

ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில்

இருந்தனர். பட்டும், பொன்னும், அணி கலன்களும் விற்போர் தனிவீதியில்

தங்கி இருந்தனர். பண்டங்களைக் குவித்து விற்கும் தெரு கூலவீதி

எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலை பகர்வோர்,

வெற்றிலை, வாசனைப் பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய்

விற்போர், பொன், வெள்ளி, செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர்,

பொம்மைகள் விற்போர், சித்திர வேலைக்காரர், தச்சர், கம்மாளர், தோல்

தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லுநர்கள்,

சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து

வந்தனர்.


மையக்கருத்து


              மருவூர் பாக்கம் நகரின் உட்பகுதியில் உள்ள தெருக்களில்

 தனித்தனியே இன்ன இன்னத் தொழில்கள் நடைபெற்றன.


v  நறுமணப் பொருள் விற்பவர், நெசவாளர், பட்டும்,பொன்னும்


 விற்பவர்கள் தனித் தெருவில் குடி இருந்தனர்.


v  பண்டங்கள் விற்கும் வீதி கூலவீதி எனப்பட்டது. மேலும் பல்வேறு


 பொருட்களை விற்பனை செய்பவர்கள் எல்லாம் ஒரு பகுதியில்


 வாழ்ந்து வந்தனர்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post