பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 6
குறு வினாக்கள்
1. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும்
இவ்வணிகர்கள் யாவர்?
v பாசவர் – வெற்றிலை விற்பவர்
v வாசவர் – நறுமணப் பொருள் விற்பவர்
v பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர்
v உமணர் – உப்பு விற்பவர்
2. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும்
வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
v அள்ளல் – சேறு
v பழனம் - வயல்
3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி
என்பதற்குச் சான்று
தருக.
v பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்
v உணவுக்கானப் பணத்தில்
புத்தகம் வாங்குதல்
4. புறத்திணைகளில் எதிரெதிர்த்
திணைகளை அட்டவணைப்படுத்துக.
v
வெட்சி – கரந்தை
v
வஞ்சி – காஞ்சி
v
நொச்சி
– உழிஞை
5. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
வெட்சி முதல் பாடாண் திணை வரை உள்ள புறத்திணைகளில்
பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத
செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை
6. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட
சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத்
தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி
பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி,சோழன்
ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம்
அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த
சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு
தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி