பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 6
ஒரு மதிப்பெண் - வினாக்கள்
1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு,மண்,ஏர்,மாடு
ஆ) மண்,மாடு,ஏர்,உழவு
இ) உழவு,ஏர்,மண்,மாடு
ஈ) ஏர்,உழவு,மாடு,மண்
2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_______
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
3. நச்சிலைவேல் கோக்கோதைநாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு –
இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேரநாடு, சோழ நாடு
ஈ) சோழநாடு, பாண்டிய நாடு
4. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்
காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
5. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு
வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை
முறையே
அ) திருப்பதியும்,திருத்தணியும்
ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்