பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
திருக்குறள்
கூடுதல் வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
1. சொல் பின்வருநிலை அணி ( குறள் எண் – 5 )
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல்
பின்வருநிலை அணி ஆகும்.
அணிப் பொருத்தம்
‘ பொருள் ‘ என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் சொல் பின்வருநிலை
அணி எனப்படும்.
2. உவமையணி ( குறள் எண் – 8, 10, 20 )
Ø ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது
உவமை அணி.
Ø உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம் பெறும்.
Ø உவமை உருபு வெளிப்படையாக வரும்.
அணிப் பொருத்தம் – ( குறள் எண் – 8 )
உவமை - குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போர் காண்பவன்
உவமேயம் - தன் கைப்பொருள் கொண்டு ஒரு செயலைச் செய்வன்
உவம உருபு - அற்று
அணிப் பொருத்தம் – ( குறள் எண் – 10 )
உவமை - பகைவர்கள் கைக்கூப்பி வணங்குவது
உவமேயம் - பகைவர்கள்
கண்ணீர் சிந்தி அழுவது
உவம உருபு - போல
அணிப் பொருத்தம் – ( குறள் எண் – 10 )
உவமை - கரும்பைக்
கசக்கிப் பிழிவது
உவமேயம் - கயவர்களிடம்
பெறும் உதவி
உவம உருபு - போல்
3. சொற்பொருள் பின்வருநிலை அணி ( குறள் எண் – 15 )
செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள்
பின்வருநிலை அணி ஆகும்.
அணிப் பொருத்தம்
‘ இன்மை ‘ என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால்
இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை பயின்று
வந்துள்ளது.