பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
திருக்குறள்
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சிறு
வினா
1. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்கு கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்
வழி விளக்குக.
v தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும்
முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக
அமைகிறது.
v மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக்
கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.
v இயற்கையான நுண்ணறிவும் ,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது
v ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல்
நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.
2. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் – இக்குறளில்
வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை
விளக்குக.
அணி :
செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது
போலப் புகழ்வதுமாக
வருவது வஞ்சப் புகழ்ச்சி
அணி.
எ,கா :
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன
செய்தொழுக லான்
அணிப்பொருத்தம் :
தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்வது போல, கயவர்களும் தாம்
விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப்
புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணி